Saturday, August 6, 2011

பஞ்சாங்கம் - சோதிடம்


    

பூமி தட்டையாகவும் நிலையாகவும், ஒரே இடத் தில் இருப்பதாகவும் சூரியனும் மற்றக் கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்ற தவறான கருத்தைப் போக்கும் வகையில் மேல்நாட்டினர் ஆய்வுகளைத் தொடர்ந்தனர். பூமி உருண்டையானது சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களில் பூமியும் ஒன்று! என்பதை வானியல் மேதை கலிலியோ கண்டுபிடித்துக் கூறிய அறிவியல் கருத்தை உலகம் ஏற்றுக் கொண்டது.

மேல்நாட்டிலும் அக்கால மதவாதிகள் பூமி தட்டையானது என்றே நம்பி வந்தனர். அக்கருத்திற்கும் நம்பிக்கைக்கும் மாறாக பூமி உருண்டை என்று கூறுவது மதத்திற்கு விரோதமானது என்று கூறி வந்ததோடு மதவாதிகளின் செல்வாக்கு மேலோங்கி யிருந்ததால் கலிலியோவின் ஆராய்ச்சி முடிவுகளை மதவாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று நிரூபித்த கலிலி யோவின் கண்ணைப் பிடுங்கி தண்டனை கொடுத் தனர். பூமியின் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த நியூட்டனுக்கு பைத்தியக்காரன் பட்டம் சூட்டினர்.

அங்கு எதிர்த்த மதவாதிகள் ஏற்றனர்!

மேல்நாட்டு மதவாதிகள் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித் தாலும் காலப்போக்கில் அறிவியல் உண்மைகளை ஏற்றுக் கொண்டனர்.

நம் நாட்டு மதவாதிகளும், சோதிடர்களும் வானியல் அறிஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளை இன்றுவரை பிடிவாதமாக ஏற்றுக் கொள்ள மறுப்ப தோடு ஏற்றுக் கொள்வார்கள் என்று எண்ணுவதற்கும் இடமில்லை!

மாறாத மதவாதி இங்கு!


13.4.2004 சித்திரைத் தமிழ் புத்தாண்டு தினத்தில் காஞ்சி ஜெயேந்திரர் கூறிய வாழ்த்துச் செய்தியில், முக்கிய கிரகம் சூரியன் மற்றக் கிரகங்கள் அதைச் சுற்றி இயங்குகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மதவாதிக்கு சூரியனை ஒரு நட்சத்திரம் என்று ஏற்றுக் கொள்ள இன்னமும் மனம் வரவில்லை. சோதிடத்திலும் சூரியனைக் கிரகங்கள் வரிசையில் தான் சேர்த்திருக்கின்றனர். நம்நாட்டு மதவாதிகளும் சோதிடர்களும் சூரியனைக் கிரகம் என்றே குறிப்பிட்டு வருவதால் இவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

சூரியனை ஒரு நட்சத்திரமென்று ஏற்றுக் கொண்டதை சோதிடர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பது பித்தலாட்டமானது. பூமியை மய்யமாகக் கொண்டே சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருவதாகத்தான் சோதிடம் கூறுகிறது. சூரியனை மய்யமாகக் கொண்டு பூமியும் மற்றக் கிரகங்களும் சுற்றி வருகின்றன என்று அறிவியல் உண்மையை சோதிடமும், ஜெயேந்திரர் போன்ற மதவாதிகளும் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை.

மதிவாதிகளின் ஆதிக்கம் எங்கேயிருந்தாலும் சமுதாயத்தை விழிப்படையச் செய்யாமல் முட்டாளாக்கி கொண்டு அந்த மதவாதிகள் சொல்வதை நம்ப வேண்டும் ஏற்றுக்  கொள்ள வேண்டும் என்றுதான் கூறுவார்கள்!

பார்ப்பனர்களும் மதவாதிகளும் சோதிடக்கலை தெய்வீகமானது அதை நம்புங்கள் என்கின்றனர். நம் மக்களும் பார்ப்பனர்களின் பொய்மூட்டைகளை நம்புகின்றனர். விஞ்ஞானிகள் கூறும் ஆராய்ச்சி முடிவுகளை ஏற்க மறுக்கின்றனர்.
அறிவியல் கருத்தை ஏற்க மறுப்பது ஏன்?
நம் நாட்டு மதவாதிகளும், மதக்கருத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகைகளும் அறிவியல் உண்மைகள் பரவாமல் தடுக்கின்றனர். அறிவியல் சிந்தனை சமுதாயத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலே கண்ணுங்கருத்துமாக இருக்கின்றனர்.

மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஏய்த்துப் பிழைக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி வானியல் கண்டுபிடிப்புகளும், அறிவியல் சிந்தனைகளும் மழுங்கடிக்கப்பட்டு, சோதிடத்திற்கு மிகமிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அறிவியல் உண்மைகளை மதவாதிகள் மக்களிடம் மறைக்கிறார்கள் என்பதற்கு சூரியனை கிரகம் என்று கூறும் மதவாதி ஜெயேந்திரரின் அறிக்கையே சான்று! நொடிக்கு 60 கோடி டன் ஆற்றலை வெளியிடும், சூரியனும், ஈர்ப்பு விசை ஒன்றை மட்டுமே பெற்றுள்ள கிரகமும் ஒன்றாகுமோ!

உண்மையைச் சொல்ல மறுக்கும் மதவாதிகளும் - பத்திரிகைகளும்!

சோதிடத்தில் பேராற்றல் மிக்க சூரியனை கிரகம் என்று கூறுவது தவறு என்று மதவாதிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் தெரியும்!  தமிழ் சமுதாயம் விழிப்படைந்து விடக்கூடாது, அவர்களை இருளிலே தள்ளி வைத்திருந்தால்தான் தங்கள் ஆதிக்கம் நிலைத்திருக்குமென்று பார்ப்பன மதவாதிகளும் பணம் ஒன்றே நோக்கமாகக் கொண்ட சுயநலப் பத்திரிகை யாளர்களும் வானியல் பற்றி அறிவியல் கருத்துக் களுக்கும், செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக் காமல், அறிவியலுக்கு மாறான சோதிடத்திற்கு நாள்தோறும் முக்கியத்துவம் கொடுத்து, அதிலே அறிவியல் இருப்பதாக நம்பும்படியாக அதனைப் பரப்பி வருவது வேதனையானது.

உலகில் எந்த நாட்டுப்பத்திரிகையிலாவது அறிவியலுக்குப் பொருந்தாத சோதிடம் போன்றவற் றிற்கு நாள்தோறும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறார்களா! தமிழ்ச் சமுதாயம் விழிப்படைய வேண்டுமென்ற எண்ணம் உண்மையிலே பத்திரிகை களுக்கு இருக்குமானால் சோதிடத்திற்கு பத்திரிகை களில் இடம் கொடுக்கவே கூடாது.

சோதிடம் தடை செய்யப்பட வேண்டும்!

பிரிட்டனில் எம்.ஏ., தொலைக்காட்சியில் ருத் ராட்சக் கொட்டைக்கு ஒரு விளம்பரம் வெளியிடப் பட்டது. அதில் ருத்ராட்சக் கொட்டையை அணிந்து கொண்டால் கெட்ட ஆவிகள் அணுகாது தொல்லை தராது என்றும், இதற்கு விஞ்ஞான ஆதாரம் உண்டு என்றும் (சோதிடமும் விஞ்ஞான பூர்வமானது என்று சொல்வதைப் போல) விளம்பரப்படுத்தினர். இந்த விளம்பரம் மூடத்தனத்தையும் அறிவீனத்தையும் வளர்க்கும் என்று பிரிட்டன் அரசு தடைப்படுத்தி விட்டது!

அங்குள்ள ஒரு பார்ப்பனர் ருத்ராட்சக் கொட்டைக்கு ஒரு சக்தி உண்டு என்று வாதிட்டார். அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று அந்த விளம்பரத்திற்கு தடை விதித்து விட்டது அரசு. இது 2008 ஏப்ரலில் நடந்தது.

இங்கு சோதிடத்தை வைத்து பொய் கூறி ஆண்டாண்டு காலமாக ஏய்த்து வருகின்றனர் பார்ப்பனர்கள்! பிரிட்டனில் அவர்களின் பொய்யான கூற்றை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

தமிழன் ஏமாளி! இன்னும் சோதிடத்தை நம்பிக் கொண்டிருக்கிறான்! அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தடைப்படுத்த வேண்டிய சோதிடத் திற்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வெளியிடப்படுகிறது. தமிழன் எப்படி முன்னேற முடியும்?

முரண்பாட்டின் மொத்த உருவம் எது தெரியுமா?

ஹிந்து மதம் ஹிந்து மதம் என்று கதைக்கிறார்களே - அதற்கென்று ஒரு வரையறை உண்டா? வகுக்கப்பட்ட கொள்கை உண்டா? இதே இண்டர்நேஷனல் என்சைக்ளோபீடியா ஆஃப் சோஷியல் சயின்ஸ் (தொகுதி 6, பக்கம் 358) என்ற நூல் இந்து மதத்தின் தன்மைபற்றி விளக்கம் அளிக்கிறது.

இஸ்லாம், கிருஸ்தவம்போல ஹிந்து மதக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் குறிக்கப்பட வில்லை. அதற்குச் சரித்திர ரீதியில் ஒரு அமைப்பாளரும் கிடையாது. ஹிந்துவாக இருப்பதற்குக் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இம்மதத்தில் முரண்பாடுகள் செழித்து மலர்ந்து கிடக்கின்றன.

எல்லா ஹிந்துகளுக்கும் பொதுவான நம்பிக்கைகளோ, அமைப்புகளோ ஒன்றும் கிடையாது. ஹிந்து மதத்திற்கு அடிப்படையான ஒவ்வொரு நம்பிக்கையும் - ஏதாவது ஒரு ஹிந்து  கூட்டத்தினரால் மறுத்து ஒதுக்கப்பட்டிருக் கின்றது என்று கூறப்பட்டுள்ளது.

முரண்பாட்டின் மொத்த உருவமான, குழப்பத்தின் கொள்கலனான இந்த ஹிந்து மதம்தான் தெய்வ மதமாம் - இதனை மறுமலர்ச்சி அடையச் செய்யப் போகிறார்களாம் - வாயால் சிரிக்கமுடியவில்லை
                                                                                                                           விடுதலை-05.08.2011