Sunday, November 21, 2010

நீதிக் கட்சி என்ன செய்தது?

நீதிக்கட்சி அரசாங்கத்தின் தொண்டுகள் சில
முனைவர் பு.இராசதுரை
நீதிக்கட்சி அரசு:
பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது;
பெண்களுக்குத் தேர்தலில் நிற்க உரிமை அளித்தது;
வகுப்புரிமைச் செயல்படுத்திற்று;
கோவில் பணம் கொள்ளை போகாமல் காத்திட இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றியது; தேவதாசி முறையைச் சட்டமூலம் ஒழித்தது; விபசாரத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியது;
சூத்திரன் என்ற பெயரைப் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்தது; மாவட்ட முன்சீப் நியமனங்களைச் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து கைப்பற்றியது;
தொழில் நலம் வளர்வதற்கு உதவியாக 1923 ஆம் ஆண்டு சென்னை மாகாணத் தொழில் உதவித் சட்டத்தை நிறைவேற்றிற்று;
ஆந்திரப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியது;
அண்ணாமைலப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியது;
உள்நாட்டு மருத்துவத்திற்கு ஊக்கம் அளித்தது; சிற்றூர் மக்களுக்குக் கூட்டுறவுச் சட்டங்கள் அமைக்கப்பட்டன;
கடன்காரர் பாதுகாப்புச் சட்டம் அமைக்கப்பட்டது;
பத்து லட்சம் பரம ஏழைகளுக்குக் குடிவார உரிமையை உண்டாக்கிக் கொடுத்த இனாம்தார் சட்டத்தை நிறைவேற்றியது;
சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு 1920 வாக்கிலேயே இலவச நண்பகல் உணவை வழங்கியது;
கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்க்கக் குழுக்களை நியமித்தது;
தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் இடம்பெற சட்டம் இயற்றியது.
தாழ்த்தப்பட் வகுப்பு மாணவர்களுக்கென இருந்த தனிப்பள்ளிகளை மூடியது;
தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், பிற வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து பயில வழிவகுத்தது;
தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிக்கூடங்களில் கட்டணம் இல்லை என அறிவித்தது;
தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி தரப்படமாட்டாது என அறிவித்தது; தாழ்த்தப்பட்டவர்கள் எந்தச் சாலையிலும் நடக்க உரிமை அளித்தது;
தாழ்த்தப்பட்டோர் எந்தப் பொதுநிலையத்தையும் பயன்படுத்த உரிமை அளித்தது;
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருந்த `பஞ்சமர் என்ற பெயரை நீக்கி `ஆதிதிராவிடர் ஆதி `ஆந்திரர் என்ற பெயர்களை அளித்தது; தாழ்த்தப்பட்டவர்கள் உந்து வண்டிகளில் பயணம் செய்யும் உரிமை அளித்தது. தாழ்த்தப்பட்டவர்கள் வீடுகட்டப் புறம்போக்கு நிலங்களை அளித்தது; இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு தாழ்த்தப்பட்டவரைச் சென்னை மாகாணத்தில் அமைச்சராக்கிற்று; ஆதிதிராவிடர் வகுப்பு மாணவர்களைத் தன்மாதிரிப் பள்ளிகளில் சென்னை மாநகராட்சி சேர்த்திட 1918 ஆம் ஆண்டே முயன்று வெற்றி பெற்றது;
ஒரு கிறித்துவரைக் கல்லூரி முதல்வராக்கிற்று;
ஒரு கிறித்துவரைச் சட்டமன்றத் தலைவராக்கிற்று;
ஒரு கிறித்துவரை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராக்கிற்று;
கிறித்துவர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்கிற்று;
ஒரு கிறித்துவரை உள்துறை உறுப்பினராக்கிற்று;
முஸ்லிம்களுக்குத் தனிக்கலாசாலை நிறுவிற்று;
ஒரு முஸ்லிமை கைத்தொழில் இயக்குநராக்கிற்று;
ஒரு முஸ்லிமை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராக்கிற்று; ஒரு முஸ்லிம் உள்துறை உறுப்பினராகக் காரணமாயிருந்தது;
ஒரு முஸ்லிம் தற்காலிக ஆளுராக நியமனமாகக் காரணமாக இருந்தது;
பச்சையப்பன் கல்லூரியில் முகமதிய கிறித்துவ மாணவர்களைச் சேர்க்க முயன்று வெற்றிபெற்றது;
மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் பிராமணர்களுக்கென்று அறைகள் தனியாக ஒதுக்கப்பட்டிருந்த முறையை ஒழித்தது;

No comments:

Post a Comment