Tuesday, February 22, 2011

நீதிக் கட்சி இயக்கத்தின் 1917 ஆம் ஆண்டு செயல்பாடுகள்







- தொடர் கட்டுரை -
கி.வீரமணி, ஆசிரியர்- விடுதலை
அறிமுக உரை

1967 இல் ஏராளமான தொகுதி களில் -தமிழ்நாட்டில் - வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது திராவிட முன்னேற் றக் கழகம். அதன் தலைவராக அறிஞர் அண்ணா அவர்கள் தேர்வு பெற்று முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

தமிழ்நாட்டு வரலாற்றில் பார்ப்பன ரல்லாத தனித் (திராவிடர்) தமிழர் அமைச்சரவையை அமைத்து, தந்தை பெரியாருக்கே அது காணிக்கை என்று தமிழக சட்ட மன்றத்தில் பிரகடனப்படுத் தினார் அண்ணா அவர்கள்!

அப்படி ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் செய்தியாளர்கள் ஒரு முக்கியக் கேள்வியைக் கேட்டார்கள் முதல் அமைச்சர் அண்ணாவை நோக்கி.

தேர்தலுக்கு நிற்க 1957 இல் முடி வெடுத்து 1967 இல் பத்தே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த ஒரே அரசியல் கட்சி - உலக வரலாற்றிலேயே - தி.மு.க. ஒன்றாகத்தான் இருக்கக்கூடும். இதற்கு என்ன முக்கியக் காரணம். விளக்குவீர்களா?

அறிஞர் அண்ணா சொன்னார் - மிகுந்த தன்னடக்கத்துடனும், ஆழ்ந்த வரலாற்றுணர்வோடும்.

இல்லை. நீங்கள் கூறுவது சரியல்ல. 10 ஆண்டு வரலாறு அல்ல. 50 ஆண்டு வரலாற்றை  உடைய அது திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சி. நீதிக்கட்சி - ஜஸ்டிஸ் கட்சியாக அது தொடங்கப் பட்டது. அது என் பாட்டன்; திராவிடர் கழகம் எனது தாய்க் கழகம்; அதிலிருந்து முகிழ்த்ததே தி.மு.க. என்கிற எனது அரசியல் கட்சி. எனவே,  அந்தப் பாரம் பரிய பலத்திலும், அந்தக் கட்டுமானத்தி லிருந்தும் உருவான வெற்றியே எங்கள் வெற்றி என்று கூறினார்!

அந்த திராவிடர் இயக்கமான நீதிக் கட்சி - ஜஸ்டிஸ் என அது நடத்திய ஆங்கில நாளேட்டின் பெயர்தான் ஜஸ்டிஸ் (Justice)  என்பது; மக்கள் மத்தியில் அந்தப் பெயரே நிலைத்து விட்டது!

அதன் சரியான முழுப் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation (S.I.L.F.) என்பதேயாகும்.

1916இல் வள்ளல் சர். பிட்டி. தியாக ராயர், டாக்டர் டி.எம்.நாயர் பெருமான், சமூக நீதி முன்னோடி சி. நடேச (முதலியார்)னார் ஆகியோரின் முயற்சி யால் தொடங்கப்பட்டு,  1920 இல் (குறைந்த அதிகாரங்களே பிரிட்டிஷ் ஆட்சியினால் தரப்பட்ட நிலையில்)  இரட்டை ஆட்சி முறையில் - பதவிக்கு வந்து மிகப் பெரும் சமூகப் புரட்சியை -  யுகப் புரட்சி என்று ஒடுக்கப்பட்டவர்கள் மகிழ்ந்து கொண்டாடி வரவேற்கும் வகையில் பல்வேறு புரட்சிகரமான சட்டங்களை, வேலைத் திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.  1920 இல் பதவிக்கு வந்த நிலையில், அதன் கட்சித் தலைவர் வள்ளல் சர். பிட்டி தியாகராயர் - வெள்ளுடை வேந்தர் - தான் முதல் அமைச்சர் (பிரதமர் - ஞசநஅநைச-  என்றுதான் அப்போது வழங்குவது வழக்கம்) ஆக மறுத்துவிட்டு, கடலூர் சுப்பராயலு ரெட்டியாரை முதல் அமைச்சராக்கி னார்கள்.

அவரது உடல் நலக் குறைவால், அவரது பதவிக்கு - முதல் அமைச்சராக வந்து, பொறுப்பேற்றுக்கொண்டு பல் வேறு புரட்சிகளை - இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம் முதற்கொண்டு  பல்வேறு சமூக நீதிச் சட்டங்களைச் செய்து, ஆட்சியைத் திறம்பட நடத்தி வரலாறு படைத்தார்.

1920 -23, (2) 23-26 என்ற காலகட்டத்திலும் சரி, தங்கள் ஆதரவுடன் கூடிய சுயேச்சை அமைச் சரவை டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த போதும் அமைச்சர் முத்தையா முதலியாரால் வகுப்புரிமை ஆணை நிறைவேற்றப்பட்டு,  சமூக நீதிக் கொடி யைப் பறக்கவிட்டனர். அன்று ஏற்றப்பட்ட அந்தக் கொடி இன்று இந்தியா முழுவ திலும்கூட தலைநகர் டில்லிப் பட்டணத் தையும் சேர்த்து பறந்து கொண்டுள்ளது!

பொப்பிலி அரசர் முதல்வராக இருந்தபோதும், கட்சித் தலைவராக இருந்தபோதும் அவர், கட்சியை அதன் நெருக்கடியான நேரத்தில் கட்டிக் காத்த நேர்த்தி வரலாற்றுப் பெருமைக்குரியது!

1919இல் ஈரோடு நகராட்சித் தலைவ ராக இருந்த நிலையில் சேலம் நகராட்சித் தலைவராக அதே சம காலத்தில் இருந்த திரு. சி. இராஜகோபாலாச்சாரியாரின் நட்பு இறுகியதன் விளைவாக, டாக்டர் வரதராஜுலு நாயுடு, ஆச்சாரியார் போன்றவர்கள் வற்புறுத்தலாலும் ஈரோடு, கோவை மாவட்ட எல்லைக்குள் தொண் டறம் புரிந்த வணிகத் துறை வள்ளல் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி, காங் கிரஸ் கட்சியில் சேர்ந்து, பார்ப்பனரல் லாதார் இயக்கத் தலைவர்களுக்கு எதிராகப் பேசும் நிலைக்கு ஆளாக்கப் பட்டார்கள். இதை அவர்களே பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

நீதிக் கட்சியினருக்கு எதிராக - பார்ப்பனர்கள் பயன்படும்  வண்ணம் பேசி, எழுதி, நடந் தமைக்கு கழுவாய் தேடவே நான் இந்த திராவி டர் சமுதாயத்திற்கு இவ்வளவு தீவிரமாய் உழைத்து வருகிறேன் என்று முழங்கினார் தொண்டு செய்து பழுத்த பழமான நமது தலைவர் தந்தை பெரியார் அவர்கள்!

பனகல் அரசர் கொண்டு வந்து நிறைவேற்றிய, கோயில் பெருச்சாளி களின் சுரண்டலைத் தடுக்க உதவிய இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை சட்டத்தை காங்கிரசில் இருந்தபோதே - அது நீதிக்கட்சி ஆட்சி செய்தது என்ற போதிலும், அறிவு நாணயத்துடன் மனம் திறந்து பாராட்டி வரவேற்றவர் தந்தை பெரியார் அவர்கள்.

இதனால் - பார்ப்பனத் தலைவர் சத்யமூர்த்தி தந்தை பெரியாரைத் தரக்குறைவாக விமர்சித்து தன் சுய உருவத்தை - பார்ப்பனீய முகத்தைப் பளிச்சென காட்டிக் கொண்டார்.
அப்படிப்பட்ட நீதிக்கட்சிதான் திராவிடர் எழுச்சி வரலாற்றின் - மறுமலர்ச்சி சகாப்தத்தின் முதல் அடிக் கட்டுமானமாகும்.

அதன் வரலாறு இதுவரை சரியாகவே மக்களிடம் போய்ச் சேரவே இல்லை.

திராவிடர் இயக்க நூல்களையோ, பணிகளையோ, ஆவணப்படுத்தும் நல்ல முறை கடந்த சில ஆண்டுகளாகத்தான் பின்பற்றப்பட்டு வருகிறது.

கிடைத்த ஆங்கில நூல்கள் - நீதிக் கட்சி வரலாறு பற்றியதை அப்படியே திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 7, 8, 9 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டிலும், அதற்கு முன்பு நடைபெற்ற ஆற்காடு இரட்டையர் நூற்றாண்டு விழாவின்போதும், ஜஸ்டிஸ் நாளேட்டில் சர்.ஏ. இராமசாமி (முதலியார்) எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு ஆசைசடிச டிக வாந லுநயச  என்பதும், இந்த நூலின் ஆங்கில பதிப்பும் வெளியாகின.

இது தமிழாக்கம் செய்து, தோழர் பாலகிருஷ்ணன் அவர்களால், தொடர் கட்டுரையாக வெளியிடப்படுகின்றது. வாசகர்கள் படித்துப் பயன்பெறுக!
கி.வீரமணி (ஆசிரியர்)


தொகுப்பாசிரியர் டி. வரதராஜுலு நாயுடு
முன்னுரை 

நீதி(ஜஸ்டிஸ்)க்காகப் போராடும் மாபெரும் ஜனநாயக இயக்கமான நீதிக்கட்சி தொடர்பான,  ஒவ்வொரு ஆண்டின் முக்கியமான நிகழ்ச்சி களையும், காலவரிசையில் தொகுத்து,  ஒரு தொடராக வெளியிட வேண்டும் என்பது நான் நீண்ட காலமாகப் போற் றிப் பாதுகாத்து வந்த பெருவிருப்ப மாகும்.

1930ஆம் ஆண்டின் முற்பகுதி யில்  என்னால் வெளியிடப்பட்ட,  1920 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்ட  ஜஸ்டிஸ் ஆண்டு புத்தகம் நீதிக் கட்சியின் முன்னணி உறுப்பினர் களால் பெரிய அளவில் வரவேற்கப் பட்டது. என்றாலும்,  இப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு, 1930 ஆம் ஆண்டிற்கும் அதனைப் போன்ற ஒரு நூலை வெளியிட, என் கட்டுப்பாட்டுக்கு மீறிய சூழ்நிலைகளினால் இயலாமல் போனது.

என்றாலும், ஜஸ்டிஸ் கட்சி தொடங்கிய 1917 ஆம் ஆண்டு முதல் டாக்டர் டி.எம். நாயர் மற்றும் சர் பி. தியாகராயர் செட்டியார் ஆகியோர் இந்த இயக்கத்தின் முன்னேற்றம் பற்றி தொகுத்து வைத்திருக்கும் செய்திகளை, ஆவணங்களை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எனது நலம் விரும்பிகள் கருதினர்.  அதன் காரணமாக, நீதிக்கட்சி உருவான 1917ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்த இயக்கத்தின்  நிகழ்வுகளைக் கொண்ட இந்த நூலை வெளிக் கொணர நான் துணிந்துள்ளேன். மான்ட்ஃபோர்டு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு இந்த ஆண்டு. இது பற்றி நமது கட்சியின் கருத்துகளைத் தெரிவிக்கும் முகத்தான் சில சமகால அரசியல் ஆவணங்களையும் இதில் நான் சேர்த்துள்ளேன்.

இந்த நூல் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  நடைமுறைப் படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டிருந்த சீர்திருத்தங்கள் பற்றியும் மற்ற விஷ யங்கள் பற்றியும் நமது கட்சித் தலைவர் களின் கருத்துகளைக் கொண்டது முதல் பகுதி.  இந்த ஆண்டு நடத்தப்பட்ட முதல் மாநாடு மற்றும் இதர பார்ப்பனர் அல்லாதாரின் மாநாடுகளின் நடை முறைகளைக் கொண்டது இரண்டாம் பகுதி. 1917 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் கொண்டிருந்த விதிகள், மற்றும் அச்சங்கத்தின் அமைப்பு விதிகள் இந்நூலின் இணைப்புகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

பார்ப்பனர் அல்லாத மக்களின் பிரகடனம் (டிசம்பர் 1916)

சென்னையிலும், வெளி ஊர்களிலும் நல்ல நிலையில் இருப்பவர்களும், பொது மக்கள் செல்வாக்கு பெற்றவர்களுமான பார்ப்பனர் அல்லாத பல முக்கியமான பெரியவர்கள் கலந்துகொண்ட, 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி  சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட் டில், பார்ப்பனர் அல்லாத மக்களின் நலன்களை மேம்படுத்தும் நடவடிக்கை களை ஆதரிப்பதற்காக ஒரு செய்தித் தாள் வெளியிட ஒரு நிறுவனத்தைத் துவங்க நடவடிக்கை மேற்கொள்வ தென்று தீர்மானிக்கப்பட்டது. பார்ப்பனர் அல்லாத மக்களின் நலன்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான ஓர் அரசியல் அமைப்பை உருவாக்குவதென் றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நாளிதழ்களைத் துவங்க வும், தென்னிந்திய  நலஉரிமைச் சங்கம் என்ற பெயரில் ஓர் அரசியல் அமைப்பை உருவாக்கவும், தென் இந்திய மக்கள் சங்கம்  என்ற பெயரில் ஒரு கூட்டுப் பங்கு நிறுவனம் துவங்கப்பட்டது. இந்தத் தென்னிந்திய மக்கள் சங்கத் தின் தலைவர் ராவ்பகதூர் பி. தியாகராயர் செட்டியார் கையெழுத்துடன் வெளியிடப் பட்ட பார்ப்பனர் அல்லாதாரின்   பிர கடனம் ஒன்று சென்னை ராஜதானி முழுவதிலும் இருந்த பார்ப்பனர் அல்லாத முக்கியப் பிரமுகர்களுக்கு அனுப்பப் பட்டது.

பிரகடனம்

இந்திய ஹோம் ரூல் இயக்கத்தைப் பற்றி, சென்னை ராஜதானியில் உள்ள முக்கியமான பார்ப்பனர் அல்லாத சமூகங்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்ய முயற்சி மேற்கொள்வதற்கும், அவர்களின் தற்கால அரசியல் நிலையைப் பற்றிய சில உண்மைகளைச் சுட்டிக் காட்டுவதற்குமான  நேரம் வந்துவிட்டது.

இந்த ராஜதானியின் மொத்த மக்கள் தொகையான 4.1 கோடியில் 75 விழுக்காடு அளவுக்குக் குறையாமல் பார்ப்பனர் அல்லாத  மக்கள் உள்ளனர்.  பெருவாரியான ஜமீன்தார்கள், நிலச் சுவான்தார்கள், விவசாயிகள் போன்ற வரிசெலுத்தும் மக்களில் பெரும் அளவிலானவர்களும் அவர்களே உள்ளனர்.

ஆனால் சென் னையில் நடைபெறும் அரசியல் என்ன வென்றால், அவர்களுக்கு உரிமையான பங்கை அவர்கள் எடுத்துக் கொள்ள வில்லை என்பதுதான்.  நாட்டின் பொது அரசியல் முன்னேற்றத்திற்காக, பொது மக்களிடையே தங்களுக்கு உள்ள செல்வாக்கை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை அல்லது மிகக் குறைந்த அளவே  பயன்படுத்திக் கொண்டனர்.

அமைப்பு ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற இக்காலகட்டத்தில், அவர்களின் பொது நலன்களைப் பாதுகாக்கவும்   முன்னேற் றம் பெறச் செய்யவும்,  நாட்டில் எந்த வித முக்கியத்துவமும் அற்ற அரசியல்வாதி கள் சிலர் தங்கள் சார்பாக பேசுவதாகக் கூறிக் கொள்வதைத் தடுக்கவும் முறையான அமைப்பு எதையும் அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

அவர் களின் சார்பாக உண்மைகளைப் பேசு வதற்கான பத்திரிகைகளும் அவர் களிடம் இல்லை.  மக்கள் தொகையில் 15 லட்சம் பேர் மட்டுமே உள்ள பார்ப்பனர் களுடன் ஒப்பிட்டுக் காணும்போது, பார்ப்பனர் அல்லாத மக்களின் நலன்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

நன்றி:விடுதலை 22.02.2011
(தொடரும்)

No comments:

Post a Comment