Saturday, December 18, 2010

ஞான சூரியன் - 20

எப்படியென்றால், அடிப்பதற்குக் கையேனும், கோலேனும் ஓங்கினால் கையை வெட்டுதல்; காலால் உதைக்க முயன்றால் காலை வாங்குதல்; ஒரே ஆசனத்தில் இருக்க விரும்பினால், பிருஷ்ட பாகத்தை அரிந்துவிடவோ, சூடுபோட்டு நாட்டை விட்டுத் துரத்தி விடவோ செய்தல்; எச்சில் உமிழ்ந்தால், உதடுகளைத் துண்டித்துவிடுதல்; பிராமணன் அருகிலிருக்க மலத்தையோ, மூத்திரத்தையோ விட்டால் அந்த அங்கங்களைத் துண்டித்து விடுதல்; தலைமயிர், தாடி, கழுத்து விருஷணம் (விரைக்கொட்டை) இந்த அங்கங்களைப் பற்றி இழுத்தால், கையை வெட்டுதல் -இவ்வகையான தண்டனைகள் விதிப்பதோடு, சூத்தி ரனைப் பிராமணன் துன்புறுத்தினால், சூத்திரன் சரீரத்தில் தோலைப் பிளந்தால், நூறுபொன் அபராதமும், தசைக்குக் கேடு நேர்ந்தால், ஆறு நிஷ்கம் (ஒருவகை நாணயம்) அபராதமும், தசைக்குக் கேடு நேர்ந்தால், ஆறு நிஷ்கம் அபராதமும் விதித்தல், எலும்புக்குக் கேடுவரின் நாட்டை விட்டுத் துரத்தல் முதலியன செய்யத்தக்கன.
இந்தியாவின் பழைய நற்காலம் நமக்கு ஏற்பட வேண்டும். அதன் பொருட்டு ஹோம்ரூல் வேண்டும் என்கிற திலகர் முதலிய தலைவர்களை ஆதரிக்கிற நம்மவர்கள மேற்குறித்த விஷயங்களை ஞாபகப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். ஹோம்ரூல்வாதிகளின் அரசாட்சி மனுவின் அரசாட்சியே. மனுவின் ஆட்சியில் சூத்திரனுடைய நிலையை இன்னும் கேளுங்கள்.
1. நீதியானதால் அதனையே தருமச் சட்டம் என்று கூறுகின்றனர். ஆ! கொடுமை! சூத்திரனை எவ்விதத் துன்பங்களும் செய்யலாம். அதைப் பார்த்தும், கேட்டும் பொறுக்க முடியாத சூத்திரர்கள் யாதாகிலும் சொல்லவோ, தடுக்கவோ செய்தால், அதற்குள்ள தண்டனைகள் ஜனங் களுக்குத் தெரியும் பொருட்டு இங்குக் கூறினேன். இவ்வாறே ரோம் அரசாட்சி நடந்தபோது, யெஹூதிகளும் ரோமன் ஜனங்களும் கலந்து, அந்நாட்டுக் குடிகளை வதைத்து வந்தனர். அத்தருணத்தில் யேசு என்பவர் இந்தியாவில் கல்வி கற்றுத் திரும்பிச் சென்று ஆங்குப் புத்தமதம் போதித்த காரணத்தால், அவரையும் இக்கொடுங் கோல் சட்டமும், இச்சட்டத்தாருடைய மதமும் வேரோடழிய வேண்டியது.
சூத்ரந்து காரயேத் தாஸ்யம் க்ரீதமக்ரீ தமேவவா;
தாஸ்யாயைவ ஹிஸ்ருஷ்டோஸௌப்ராஹ்
மணஸ்ய ஸ்வயம்புவா (மனு)
பொருள்: கூலி கொடுத்தாகிலும், இல்லாவிடிலும் சூத்திரனை வேலை வாங்கலாம். ஏனென்றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே இவன் ஸ்வயம்பூ (பிரம்மன்) வினால் சிருஷ்டிக்கப்பட்டான். பின்னும்,
நஸ்வாமினா நிஸ்ருஷ்டோபி சூத்ரோதாஸ்யாத் பிமுச்யதே;
நிஸர்க்கஜம் ஹிதத்தஸ்ய கஸ்மாத்தஸ்மாத போஹதி (மனு)
பொருள்: எஜமான் விட்டுவிட்டாலும் சூத்திரனின் அடிமைத்தனம் அவனை விட்டொழியாது. இது 1இயற்கையானதால் எங்ஙனம் ஒழியும்?*
சக்தேனாபிஹி சூத்ரேண
நகார்யோதன ஸஞ்சய
சூத்ரேண தனமா ஸாத்ய
பராஹ்மணானேவ பாததே (மனு)
பொருள்: பொருளீட்டத் திறமையிருந்தாலும், சூத்திரன் அங்ஙனம் செய்யலாகாது. சூத்திரனுக்குப் பொருள் சேர்த்தால், பிராமணன் துன்புறுவான்.
1.இயற்கையென்று நூல் கூறினும், அடையாள மொன்றும் காணாததனால், எல்லோரும் ஒரேவித உரிமையைப் பெறத்தக்க மனிதர்களேயன்றிச் சூத்திர னென்று தனிப்பட்ட ஒருவகையினர் இல்லையென்பது திண்ணம். சமஸ்காரம் செய்து கொண்டால் யாவரும் துவிஜரே. இது சூத்திரனுக்குக் கூடாதாம்.
*. ஹே, பார்ப்பனரே! இன்னும் சில காலம் போக ஆங்கில அரசாட்சியார், கிறிஸ்தவர்கள் ஆனால் மட்டும் உத்தியோகமும் இங்கிலீஷ் படிப்பும் கொடுக்கப்படும் என்று விதிவெளிப்படுத்தி 7 கோடி ஜனங்கள் அவ்விதிப்படி உத்தியோகத்திற்கும், படிப்புக்கும் ஆசைப்பட்டுக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தபின், கிறிஸ்துவ மதத்திற்கு இனிமேல் இந்துக்களைச் சேர்ப்பதில்லை யென்று மற்றொரு ஆக்டை பாஸ் பண்ணினால், இந்த மனு உன்னையும் அப்படியே செய்துவிடும். யூரோப்பியன் பிராமணனும், யூரோஷியன் க்ஷத்திரியனும், நேட்டிவ் கிறிஸ்தவன் வைசியனும், இந்தியன் சூத்திரனுமாய் விடுவர்.
உச்சிஷ்ட மன்னன் தாதவ்யம், ஜீர்ணானி வஸனானிச;
புலறகாஸ் சைவதான்யானாம் ஜீர்ணாஸ்சைவ பரிச்சதா
பொருள்: சூத்திரனுக்கு எச்சிலும், கிழிந்துபோன பழைய ஆடையும், நல்ல தானியங்களை எடுத்துக்கொண்டு பதரும் வைக்கோலும் கொடுக்க வேண்டும். இத்தோடு நில்லாமல்
சூத்ரஸ்யது ஜூகுப்ஸிதம் (மனு)
காதில் விழும்போதே அருவருப்பை உண்டு பண்ணத்தக்க பெயர்தான் சூத்திரனுக்கு இடவேண்டும். ஒருவருக்கொருவர் க்ஷேமம் விசாரிப்பதிலும் வேற்றுமை யுண்டு.
ப்ராஹ்மணம் குசலம்ப்ருச்சேத் க்ஷத்ரபந்து மனாமயம்;வைச்ய க்ஷேமம் ஸமாகம்ய
சூத்ரமா ரோக்யமேவச (மனு)
பொருள்: குசலமா? அனாமயமா? க்ஷேமமா? ஆரோக்கியமா? 1(நோயில்லாமல் இருக்கிறாயா?) என்று முறையே பிராமணன் முதலிய வருணத்தினரை விசாரிக்கவேண்டும்.
 - (தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் 
முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை(18-12-2010)


Friday, December 17, 2010

கிறித்துவரைப் பார்த்து குடிஅரசு கேட்ட வினாக்கள்!

(எதார்த்தவாதியும் - கிறிஸ்துமத போதகரும் பேசியது)

போதகர்:
 பழைய காலத்திலேயே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும், பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.எதார்த்தவாதி: அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால், எப்பொழுது எழுதப்பட்டது?
எதா: சரி தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சிலவிடங்களில் தெய்வத்துக்குப் பயப்படாதவர்கள்தானே? போதகர்: இல்லை சார். எப்பொழுதும் தெய்வத்துக்குப் பயப்படுகிறவர்கள்தான்.
எதா: நல்லது. அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே?
போதகர்: ஆம் வாஸ்தவந்தான். ஆனால் அவனை (ரை) சில ஆராய்ச்சியாளர்கள் தன் தகப்பனின் மறுமனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்.
எதா: அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகியிருக்கலாம்.
போதகர்: அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியதென்ன?
எதா: உண்மையாக அவன் தீர்க்கதரிசிதானே?
போதகர்: ஆம் வாஸ்தவந்தான், ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளை) தேவனே.. அவன் ஒரு தீர்க்கதரிசி... என்பதாய் சொல்லியிருக்கிறார்.
எதா: அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில்... இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும்... பொருள்படப் பேசியதை தாங்கள் வாசித்ததுண்டா?
போதகர்: அ ஆ ஆம் வாசித்ததுண்டு. ஆனால், அவன் மனைவி ச.ஆ. சாராள் அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.
எதா: மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?
போதகர்: சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
எதா: சரி அய்யா, நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர்களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.
போதகர்: தெய்வமில்லாத காலமிது என்பதாய் முணுமுணுத்துக் கொண்டு நழுவி விடுகிறார்.
எதா: பைபிள் காலத்தில் தெய்வ பயமில்லாத இடமிருந்தது இப்பொழுது காலம் வந்து விட்டது என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும் என்பது எங்கள் துணிபு.
குடிஅரசு, பக்கம் 15,( 5.4.1931)

Thursday, December 16, 2010

ஞான சூரியன் - 19

மகாராஷ்டிர தேசத்தைச் சிவாஜிக்கு முன் துலுக்கர்கள் ஆட்சிபுரிந்து வந்தார்கள். அக்காலத்து வேத சாஸ்திரங் களைக் கற்றறிந்த அவ்வூர்ப் பண்டிதர்களுள் நாற்பதுபேர் பிராமணரல்லாதவர்கள். துலுக்க ஆட்சி சிவாஜியின் ஆட்சியாக மாறினதும், பார்ப்பனர்கள் மனுவின் சட்டத்தைக் சிவாஜிக்கு எடுத்துக்காட்டி, மேற்சொன்ன நாற்பதின்மரையும்
1. குமாரிலப்பட்டரும், திருஞான சம்பந்தரும், மாணிக்க வாசகருமென்று ஏட்டில் காணப்படுகிறது. இவர்கள் சமண புத்தர்களைப்பற்றிச் சொல்லும் கெடுதிகளைக் கேட்டால், இக்கெடுதிக்காக அப்புத்தர்களையும் சமணர்களையும் கொலை புரிந்தது பெரும் பிசகென்று சொல்லத்தகும்.
கொல்வித்தனர். இந்தத் துன்பத்தைப் பொறுக்க முடியாத அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எழுநூறு பேர்கள் அரசனாகிய சிவாஜியிடம் போய் முறையிடவே, அந்த எழுநூறு பேர்களையும் இரக்கம் காட்டாமல் 1வெட்டியெறியச் செய்தனர்.
அன்றியும் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்து வருங்கால், ஸஹஸ்ர சீர்ஷா புருஷ என்ற வேத வாக்கியத்திற்குப் பொருள் தெரிவிக்கும் படி பார்ப் பனரல்லாதானொருவன் அரசனது குருவைக் கேட்கவும், இரக்க மென்பது சிறிதுமில்லாத பார்ப்பனராகிய குரு வானவர், அரசனிடம் சென்று ஒரு முகூர்த்த காலத்திற்குச் 2செங்கோலைத் தன்னிடம் ஒப்புவிக்கும்படி கேட்டுப் பெற்றுக்கொண்டு தன்னிடம் வேதத்திற்குப் பொருள் கேட்டவனை வரவழைத்து, அவனது ஆசனத்துவார வழியாக ஒரு கழுவூசியை உச்சிக்குமேல் பத்து அங்குலம் எழும்பியிருக்கும்படி ஏற்றி, இந்தச் சூத்திரப்பயல் வேதத்திற்குப் பொருள் கேட்டான். சூத்திரர்களுக்கு வேதத்தின் பொருள் இத்தன்மையேயாகும் என்று கூறியதையும், இதைப்போல் நிகழ்ந்த பற்பல கொடுமை களையும் பரம்பரையாகத் தெரிந்து வைத்திருக்கிற அந்தந்த நாட்டுக் குடிகள் இன்னும் நினைத்து வருந்துகின்றார்கள்.
இவ்விதமாகப் பார்ப்பனர்களின் கொடுஞ்செயல்களில் சிலவற்றையும் நாதர்ஷா, மகமது கஜனி, தைமூர் முதலிய துலுக்க அரசர்களின் கொடுஞ் செய்கைகளையும் ஒப் பிட்டுப் பார்த்தால், பார்ப்பனக் கொடுமையின் முன்னால், துலுக்கக் கொடுமைகள் சூரியனுக்குமுன் சிறு மின்மினி போல் தெரியுமென் பதில் சந்தேகமில்லை. சிறிது காலத்திற்குமுன் நம் நாட்டில் பிரிட்டிஷார் ஏற்படுத்திய ரவுலட் சட்டமும் இதற்கு முன் எம்மாத்திரம்? சூத்திரர் களை ஒடுக்கும் பொருட்டுப் பார்ப்பனர்கள் கையாண்டு வந்த ரவுலட் சட்டத்தை சனாதன தருமம் என்ற பெயரால் மறைத்து வைத்துத் தருணத்திற்கேற்றவாறு கையாண்டு வந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாகிய இக்காலத்தில் உண்மை சிறிதாக வெளிப்பட்டு வரவே, தயானந்த சரஸ்வதி யென்ற பிராமணத் துறவி வெளியில் வந்து, அய்யர் முன்னோர் கள் வேதங்களினுடையவும் ஸ்மிருதி களினுடையவும் உண்மைக் கருத்துகளை 1. இத்தகைய உத்தம நீதி மனு அதருமச் சட்டத்தை நிலைநாட்ட வேண்டுமென்று பேராசையை மனத்தில வைத்துக்கொண்டல்லவா ஹோம்ரூல் வேண்டுமென்று கதறுகிறார்கள்? இச் சூதினை ஒரு சிறிதும் உணராத நம்மவர் களும் சேர்ந்து கொண்டு கூத்தாடுகி றார்களே!
2. அரசுரிமை, அதாவது அரசனது அதிகாரம்.
உணரத்தக்க ஆற்றல் படைத்தவர் களென்று. அவைகளை உணர்ந்தவன் நான் ஒருவனே என்று கூறி ஜனங்களை ஏமாற்றும்படியாகப் பொருள்களை வேதத் திற்குக் கற்பித்து ஆரிய சமாஜம் என்கிற பெயரால் பிரச்சாரம் நடத்தி வருகிறார். சகோதரர்களே! அன்னாரின் உபதேச மொழிகளைக் கேட்டு மோசம் போகவேண்டாம்.
பின்னும்,
யேனகேன சிதங்கேன
ஹிம்ஸ்யாச் சேச்ரேஷ்ட மந்த்யஜ;
சேத்தவ்யம் தத்த தேவாஸ்யதன்
மனோரனுசாஸனம்
பாணிமுத்தமய தண்டம்வா
பாணிச் சேதனமர்ஹதி;
பாதேன ப்ரஹரன் கோபத்
பாதஸ்யச் சேதமர் ஹதி.
ஸஹாஸன மபிப்ரேப்ஸு ருத்க்ரிஷ்ட்டஸ்யா
பக்ரிஷ்டஜ;
கட்யாம் க்ருதாங்கோ நிர்வாஸ்ய:
ஸ்பிசம்வாஸ்யா பகர்த்தயேத்.
அவநிஷ்டீபிதோ தர்ப்பாத்
த்வா வோஷ்டௌ கேதயேந்த்ருப;
அவமூத்ரயதோ மேட்ரமவமர்
சயதோ குதம்.
கேசேஷுக்ருஹ்ணதோ ஹஸ்தௌ
சேதயேதவிசாரயன்;
பாதயோர் தாடி காயாம்ச
க்ரீவாயாம் வ்ருஷணேஹுச
த்வக்பேதக: சதம் தண்ட்யோ
லோஹிதஸ்ய சதர்சக;
மாமஸபேத்தாது ஷண்ணிஷ்கான்
ப்ரவாஸ்யஸத் வஸதி பேதக (மனு)
பொருள்: சூத்திரன் உயர்குலத்தோனை எந்தெந்த அவயவங்களில்
துன்புறுத்துகிறானோ அவனது அந்தந்த அவயவங்களை வெட்டி எறிந்திட வேண்டும். இது மனுவின் 1கட்டளையாகும்.
- (தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை 16-12-2010

Wednesday, December 15, 2010

ஞான சூரியன் - 18

பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமடைய விரும்புவார் களாயின், முதன் முதல் பார்ப்பனர்கள் நம்மைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணத்தையும், அவர்களின் சமயத்தையும் உதறித்தள்ள வேண்டும். தங்களது முன்னேற்ற வழியை மறித்து வைத்திருக்கிற இப்பெருங் கற்பாறைகளைப் பார்ப்பனரல்லாதார் ஒன்று சேர்ந்து உடைத்துப் பொடி பண்ணிவிட வேண்டும் (இதற்காகவே சாம்மியவாதம் தோன்றியது)
முற்காலத்தில் பார்ப்பனரல்லாதார், பார்ப்பனர் செய்யும் கொடுமைக்கு ஏதேனும் திருப்பிச் செய்தால், தண்டனை விதித்து வந்த வேடிக்கையையுங் கேளுங்கள்.
சதம் ப்ராஹ்மணமாக்ருச்ய,
க்ஷத்ரியோ தண்டமர்ஹதி:
வைச்ய: ஸார்த்தசதம் சைவ
சூத்ரஸ்து வதமர்ஹதி (மனு)
இதன் பொருள்: பிராமணனது மனம் நோகும்படி க்ஷத்திரியன் ஏதேனும் மொழிந்தால் அவனுக்கு நூறு பொன்னும், வைசியன் அங்ஙனம் செய்தால், அவனுக்கு நூற்றைம்பது பொன்னும் அபராதம் விதிக்க வேண்டும். பிராமணர்களைத் திட்டுகிற சூத்திரனைக் கொன்றுவிட வேண்டும்.
மற்றும்,
ஆர்யஸ்த்ர்ய பிகமனே லிங்கோத்தார:
ஸ்வஹ ரணஞ்ச (கோதமதர்மசூத்திரம்)
பொருள்: மூன்று வருணத்தாருடைய பெண்களில் எவளையேனும் சூத்திரன் கைப்பற்றினால், அவனது பொருளைக் கொள்ளையிடுவதோடு, ஆண் குறியையும் அறுத்துவிட வேண்டும். எதிர்மறையாக,
ஸ்த்ரீ ரத்தம் துஷ்குலாதபி
சூத்திரனது அழகிய பெண்ணை த்விஜர்கள் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றும் பிரமாணமுண்டு. மற்றும், ஏகஜாதிர் த்விஜாதீம்ஸ்து
வாசா தாருணயாக்ஷிபன்
ஜிஹ்வாயா: ப்ராப் நுயாச்தேசம்
ஜகன் யப்ரபவோ ஹிஸ: (மனு)
பொருள்: மூன்று வருணத்தினரில் யாரையேனும் சூத்திரன் திட்டினால், அவனது நாக்கை அறுத்துவிட வேண்டும். ஏனெனில், அவன் தாழ்ந்த அங்கத்தினின்றும் பிறந்தவனன்றோ?
முற்காலங்களில் இந்தச் சட்டத்தின்படி பலரைக் கொன்றும், நாக்கறுத்தும் பயமுறுத்தியதன் வாயிலாகவே இன்றும் இவர்களைப் பார்த்தவுடன் பயந்து எழுந்து நின்று, சுவாமி என வணங்குவது 1ப்ராஹ்மணா யமகாதக என்ற பழமொழியும் இதற்குச் சான்றாம். பார்ப்பனர்கள் மலையாளத்தில் செய்த தீச்செயல்கள் அளவிறந்தன. மனுஸ்மிருதியின் படிக்குள்ள உரிமை போதாதென்று பேராசையினால், சங்கரஸ்மிருதி எனத் தங்களுக்கு மட்டும் ஒரு ஸ்மிருதி எழுதி வைத்துக் கொண்டு, அங்குள்ள நாயர் பிரபுக்களை மயக்கி, அவர் களைத் தங்களின் துணைக்கருவியாக வைத்துக்கொண்டு ஏழைகளைத் துன் புறுத்தி வருகிறார்கள். ஆனால், இந்த நாயர் பிரபுக்களையா வது ஒழுங்காக வாழச் செய்தார் களா? 2ஊராண்மை முதலிய அய்ந்து ஆண்மைகளும், கோன்மையும் எங்களுக்குச் சொந்தம். இந்த நாட்டிற்கே நாங்கள்தான் தலைவர்கள் என்று வீரம் பேசுகிற இப்பிரபுக்களின் குடும்ப ஒழுக்கங்களைப் பற்றிக் கேட்கிற மறுநாட்டார் யார்தான் அருவருப்படைய மாட்டார்கள்?
இக்காலத்தில் நம்மவர்கள் அடைந்து வருகிற கஷ்டங்களுக் கெல்லாம் முதற்காரணம், புத்த பகவானுடைய கொள்கைகளைக் கைநழுவ விட்டதோடு, கருணையே உருவாய் விளங்கிய அம்மதத் துறவிகளையும் இரக்க மின்றிக் கொலை புரிந்ததுவேயாகும். புத்தமதக் கொள்கை களையும் துறவிகளையும் நாசம் பண்ணிய பல பார்ப்பனர் களுள், சங்கராச்சாரியார் 1. எமனைப் போல் உயிர்களை வதைக்கிறவர்கள்.
2. ஊராண்மை, நகராண்மை, வேளாண்மை, ஆசாண்மை, நாட்டாண்மை என்பதுடன் கோன்மை என்பது அரசுரிமையாம்.
1முதன்மையானவராவார். இவர்களின் சூழ்ச்சியாகிய வஞ்சகச் செய்கையினால் வருந்தும் இக்காலமே நமது நற்காலமென்றறிய வேண்டும்.
கும்பகோணக் கிருதம் பாபம்
கும்பகோணே வினஸ்யதி
கும்பகோணத்தில் செய்த பாபம் கும்பகோணத்திலேயே ஒழியும் என்றவாறு நமதுநாட்டில் நடந்த இந்தச் செயலுக்கு நமது நாட்டிலேயே பிராயச்சித்தம் செய்தாக வேண்டும். (பார்ப்பனச் சமயத்தையும் அறவே ஒழித்து, விடுதலை யடைவதே தக்க பிராயச்சித்தமாம்)
சூத்திரனும், தண்டனையும்
நாம ஜாதிக்ரஹம் த்வேஷாமபித்ரோ
ஹேணகுர்வத:
நிக்ஷேப்யோ யோமய: சங்கு
ஜ்வலன்னாஸ்யே தசாங்குலம்:
தர்மோபதேசம் தர்ப்பேண
விப்ராணா மஸ்யகுர்வத:
தப்தமாஸே சயேத்தைலம்
வக்த்ரே ஸ்ரோத்ரே சபார்த்திவ: (மனு)
பொருள்: பிராமணனுடைய பெயரோ, அவனது குலப்பெயரோ கேட்கிற சூத்திரனுடைய வாயில் பத்து அங்குல அளவுள்ள இரும்பாணியைப் பழுக்கக் காய்ச்சிச் செலுத்த வேண்டும். பிராமணனுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கிற சூத்திரனுடைய காதுகளில் எண்ணெயைக் காய்ச்சிவிட வேண்டும்.
இத்தகைய தண்டனைகள் முற்காலத்தில் ஆங்காங்கு நடந்திருக்கின்றன. (தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை 15-12-2010

Tuesday, December 14, 2010

ஞானசூரியன் -17

அரசும், அமைச்சும்
அக்காலத்தில் சுயராஜ்யம் கேட்ட நமது பார்ப்பனத் தலைவர்கள் அருவருக்கத் தகுந்த தங்கள் சமயத்தைப் பாட்டிற் பொதிந்து, நமது வேதத்தில் அரசு முறையைக் குறித்து வெகுவாகக் கூறியிருக்கிறது. கவுடில்யர் தமது அர்த்த சாஸ்திரத்தில் குடிகளுக்கு இணங்கியே அரசன் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முற்காலத்திய அரசர்களும் குடிகளின் கருத்துக்கிணங்கிய ஆட்சிபுரிந்து வந்தார்கள். கவுடில்யர் ராஜ்யம் அல்லது இராம ராஜ்யம்தான் நமக்குத் தேவை என்று கூறு கிறார்களே; நம்மவர்களிற் சிலரும் இவர்களின் பாட்டிற்கு இசைந்து கூத்தாடுகிறார்களே!
இது முறையன்று. நமது நிலைமை 1சீர்படாதவரையில் (பிறப்பினால் உயர்வு - தாழ்வு என்கிற வேற்றுமை ஒழிந்து போமளவும்) பிரிட்டிஷ் ஆட்சியே தேவை. கவுடில்ய ராஜ்யமும், ராமராஜ்ஜியமும் பார்ப்பனர்களுக்கே இருக்கட்டும்.
அமைச்சுத் தன்மைக்கு உரியவன் பார்ப்பனனே என்பதற்கு மனுவின் கூற்று வருமாறு:
ஜாதிமாத்ரோபஜீவீவா காமம்ஸ்யாத் ப்ராஹ் மணப்ருவ;
1. கல்வியிலும், மக்கள் சமூகத்திலும், சமயத்திலும் (கொள்கையிலும்) கோவில்களிலும் சமத்துவமாகிய சீர்திருத்தம் ஏற்படாத வரையிலும் ராஜாங்கச் சீர்திருத்தம் மெல்ல மெல்லப் பெறுவதற்காக வேண்டிய வேலை செய்வதே ஜஸ்டிஸ் கட்சியாகும். தமிழர் கட்சி (சாம்மியவாத கட்சி) அதையே கேட்கிறது.
தர்மப்ரவக்தா, ந்ருபதேர்
நது சூத்ர; கதாசன (மனு)
பொருள்: (பஞ்சமா பாதகங்களுக்கு விளை நிலமாயிருந்தாலும்) பிறவியினாலேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும், சூத்திரன் ஒருபோதும் அரச சபைக்கு உரியவனாகமாட்டான். இதை மீறிச் சூத்திரன் மந்திரியாயிருந்தால், அந்நாடு சீர்கெடு மென்பதற்கு மனு கூறியதாவது:-
யஸ்ய சூத்ரஸ்து குருதே
ராஜ்யே தர்ம விவேசனம்
தஸ்ய ஸீததிதத்ராஷ்ட்ரம்
பங்கே கௌரிவ பஸ்யத;
யத்ராஜ்யம் சூத்ர பூயிஷ்டம் நாஸ்தி காக்ராந்தமத்விஜயம்,
வினஸ்யத்யாசு தத்ச்ரித்ஸ்னம்
துர்ப்பிக்ஷம் வ்யாதி பீடிதம்
பொருள்: எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாகயிருக்கி றானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப்போலப் பார்த்துக் கொண்டிருகுக்கம் போதே அழிந்துபோகும். எந்த இடம் சூத்திரர்களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து 1வேதியர்கள் இல்லாததாகவும் இருக்கிறதோ, அந்தநாடு பஞ்சநோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்து போகும். கல்வியை விரும்புகிற சூத்திரன் மனுவின் சட்டப்படி தண்டிக்கத்தக்க வனாவான். இத்தகைய சட்டம் அமலில் இருக்கு மிடத்து, எங்ஙனம் முன்னேற்றம் அடைய முடியும்? சூத்திரன் என்கின்ற சொல்லிலேயே தாழ்ந்தோன்; அடிமை, முன்னேற் றத்திற்கு உரிமை யில்லாதவன் இவை முதலிய இழிவுப் பொருட்களும் மற்றும் அடங்கி யிருக்கின்றன.
ந சூத்திர ராஜயே நிவஸேந் நதார்மிக ஜனாவ்ருதே;
1. பார்பனர்களாகிய ஆரியர்களை என்க.
ந பாஷண்டி ஜனாக்ராந்தே
நாபஸ்ருஷடேந்த்ய ஜேந்ருபே (மனு)
பொருள்: சூத்திரன் ஆட்சிபுரிகிற நாட்டிலும் குடியிருக்கலாகாது.
இக்கருத்தின்படி பார்ப்பனரல்லாதார் ஆட்சிபுரியும் நாட்டில் பார்ப்பனர்கள் குடியிருக்கலாகாதே? இக்குறை தீர்க்கும் பொருட்டு அரசர்களை 2ஹிரண்ய கருப்பம் என்ற விதியினால் க்ஷத்திரியர்களாகச் செய்துகொள்ள வேண்டியது என்கிற தந்திரத்தையும் செய்தார்கள்; செய்து கொண்டு வருகிறார்கள். இது திருவாங்கூர் சமஸ் தானத்தில் இப்போதும் நடைபெற்று வருகிறது. இவ்விதம் க்ஷத்திரியத் தன்மையை அடைந்த அரசனைத் தங்கள் சுயநலத்தைச் சாதிக்க ஒரு கருவியாகவும் வைத்துக் கொள்ளுகிறார்கள். ஓணான் பெருத்தது உடும்பு, உடும்பு பெருத்தது முதலை என்று மலையாளத் தில் ஒரு பழமொழியுண்டு. அதைப்போலச் செய்கை. க்ஷத்திரியர் களும் தங்களை உயர்ந்தோர்களென்றும், சூத்திரர்கள் இயற்கையாகவே தாழ்ந்தவர்களாகையால், மனுஸ்மிருதிப் படி அவர்களை முன்னுக்கு வரவொட்டாமல் ஒடுக்குவதே தங்கள் கடமை என்றும் நினைக்கிறார்கள். இத்தகைய செயற்கைச் சனியன்கள் இல்லாவிடில், நம்மினத்தவர் என்கிற அபிமானத்திலேனும் சற்று இரக்கங் காட்டுவார் களல்லவா? இவ்வாறு க்ஷத்திரியர்கள் என்று சொல்லி, அவர்களையும் ஏமாற்றிப் பணத்தையும் பறித்து வருகிறார்கள். இச்சூதினை இன்னம் உணராமலிருப்பதே பெரும் வியப்பு!
ஆனால், இங்கு ஒரு அய்யம் நிகழுகின்றது. இவர்களின் நீதி அனுபவத்திற்குப் பொருந்தவில்லை. அய்ரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சைனா முதலிய பிற நாடுகளில் பிராமணர்களும் அவர்களின் சமயமும் கிடையாது. அங்ஙனமிருந்தும், அந்நாடுகள் முன்னேற்ற மடைந்தும், பிராமணர்கள் இருக்கிற இந்நாட்டின் குடிகளும் செல்வமும், அறிவும் வரவரத் தாழ்வடைந்து வருவது என்ன காரணம் பற்றியோ? இதைப் பற்றிப் 2. தங்கத்தால் பசுவின் உருவைச் செய்து, அதன் வயிற்றுள் புகுந்து வெளிப்படுதல் இரணிய கருப்பம். இத்தங்கப் பசுவைப் பார்ப்பனர்களுக்குத் தானம் கொடுக்க வேண்டுமாம். (திருவனந்தபுரம் முதலிய) சில ராஜாக்களைப் பட்டத்திற்கு வருமளவும் சூத்திர ஜாதியாகவேயிருந்து பட்டத்திற்கு வந்தவுடன், ஷத்திரிய ஜன்மமெடுக்கச் செய்கிறது என்பது பொருள்.
பிராமணக் கடவுளையோ,மனுவையோ நேரில் கண்டுதான் கேட்க வேண்டும்!
-(தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010


ஞானசூரியன் -16


1. திருநாவுக்கரசரால் புகழ்ந்தோதப் பெற்ற சிவபக்தன் இவன். இராவணன் மனைவி மண்டோதரியை மணி வாசகர் புகழ்ந்துள்ளார். இவர் தாய் சிவநேசமுடைய மாது. இவன் தங்கை தாடகை அன்பினால் அணியும் பூமாலைக் காகத் திருப்பனந்தாளில் எழுந்தருளிய சிவக்கொழுந்து தலை சாய்ந்ததும், இதனை நிமிரச் செய்வதற்குக் குங்கிலியக்கலய நாயனார் வந்து, தலைசிறந்து விளங்கிய பத்திமையால் நிமிரச் செய்தவருமாவார். விபீஷணன் விஷ்ணு பக்தன். இத்தகைய குடும்பத்தைக் கொடியரென்பது சூதே.
இந்த ஸ்ரீராமன் ஏனைய அரசர்களைப்போல ஒருவனா கவே இருந் திருப்பான். ஆயினும், பார்ப்பனர்களின் சொற் களைக் கொஞ்சமேனும் அலட்சியம் செய்யாமல் இவன் நடந்துகொண்டு வந்திருப்பவன். 1புத்தருடைய கொள்கை களைப்பற்றி உலகத்துக்கு நன்மையே செய்து வந்த அசோகச் சக்கரவர்த்தியை உலகமெல்லாம் புகழ்ந்து கூறுவதைக் கேட்டு மனம் பொறாத பார்ப்பனர்கள், எங்களுக்கும் ஓர் அரசனிருந்தான்; அவன் பெயர் இராமன்; அவனும் உலக உபகாரி என்று பலவித கற்பனாலங்காரங் களுடன் புகழ்ந்து இராமாயணக் கதையைப் பாடி, இப்போது சக்தி வாய்ந்த நவீன நாவல்களில் கற்பித்துக் கூறுவது போல இராமாயணத்தை அரங்கேற்றி, இந்தியா முழுவதும் நம்மவர்களை ஏமாற்றிவிட்டார்கள். புத்த பகவானிடத்தும், அவரைப் பின்பற்றி ஒழுகிவந்த நம் ஆன்றோர்களிடத்தும், இவர்களுக்கு இருந்த பொறாமையை இராமாயணத்தி னின்று அறியலாம்.
யாதாஹி சௌர: ஸ்யததாஹி புத்த:
ததாகதம் நாஸ்திகமத்ரவித்தி(வால்மீகி இராமாயணம்)
பொருள்: திருடனும், புத்தனும் ஒப்பாவார். இங்குத் ததாகதனே (புத்தனை) நாஸ்திகன் என்று அறியற்பாலது என்ற வசனங்களால் கண்டு கொள்க.
கேளுங்கள்! மன, மொழி, மெய்களால் எவ்வுயிருக்கும் தீங்கு நேரா முறையைக் கற்பித்து, அதன்படி ஒழுகிக் காட்டிய பெரியாரும், தனூவித்ய சூத்திரத்தில் மோட்சத்தைப் பற்றிக் கூறுமிடத்துப் பரஹ்ம ஸஹவ்யத்தய (பிரமத்தில் இரண்டறக் கலத்தல்) என்று கூறியவருமான பகவான் புத்தரைத் திருடனுக் கொப்பாகவும், அவரது கொள்கை களை நாஸ்திகக் கொள்கை யாகவும் கூறும் பார்ப்பனர்கள் வேறு என்னதான் கூறவும், செய்யவும் துணிய மாட்டார்கள்? அவரை அப்படிச்சொன்னதனால் அல்லவோ இன்றைக்கு இந்நாவலந் தீவிலிருக்கும் ஜனங்கள் சேற்றில் புகுந்த பசுவைப் போலுள்ள தன்மையை அடைந்தது?
சூத்திரனும், அவன் பொருளும்
பிராமணன் சூத்திரன் பொருளைக் கொள்ளை அடிக்குமாறு அரசனுக்குக் கட்டளையிடுவதோடு, கொள்ளையிடத் தங்களுக்கு உரிமை
1. எப்பவோ, நிரூபிக்க இயலாத ஒரு காலத்தில் நடந்ததாகச் சொல்லும் இராமாயணத்தில், சாத்திர வரலாற்றின்படி கணக்கிடப்பட்ட கொஞ்ச காலத்திற்கு முன்னே யிருந்த புத்தருடைய பெயர் வருவதால், புத்தருடைய காலத்திற்குப் பிறகு கற்பிக்கப்பட்ட நூலே அது என்றறியவும். அப்படியே யோக வாசிஷ்டமும் (ஞான வசிஷ்டம்).
யுண்டு என்று பர்த்ரு ஹார்யதனோஹிஸ (சூத்திரன் அடிமையானதால் அவனது பொருளைத் தலைவனாகிய பிராமணன் எடுத்துக் கொள்ளலாம்) என்ற வாக்கியத் தினால் உறுதிப் படுத்தினார்கள். இதுதான் சனாதன தர்மம் (மனுமுறை யாட்சி). இத்தகைய வசனங்களால் பார்ப்பனர்களே அரசர்களாகவும், க்ஷத்திரியர்கள் அவர்களின் ஏவலாட் களாகவும் இருந்து வந்தார்கள் என்பது வெளிப்படை. இவர் களின் கருத்துக்கு இசையாதவர் களை எவ்வகையிலும் அரசு இழக்கும்படியே செய்வது 1வழக்கம்.
இன்னும் இச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிற 19 கோடி மக்களும் உருவத்தில் மனிதர்களாகயிருந்தாலும், சமய விஷயத்தில் ஒருவகையான உரிமையும் இல்லாதவர் களாய் விலங்கினங்கள் போல வருந்தி வாட்ட முறுகிறார்கள்.
கடவுள் இங்ஙனம் ஓரவஞ்சனையாக நடத்துவாரா? சூத்திரனுக்கு ஓர் அதிகாரமும் இல்லையே; இது நியாயமா? என்று கேட்டால், இதற்குச சில பார்ப்பனர்கள், ஈசுவரன் கருணாமூர்த்தி; அவருக்குச் சூத்திரர் களிடத்திலும் கருணை அதிகம். ஏனெனில், பிராமணனுக்குப் பணிவிடை செய்வது ஒன்றினாலேயே சூத்திரர்கள முன்னேற்றம் அடைவார்கள் என்று தரும நூல் கூறுகிறதே; என்ன சுகம்? பிராமணனுக்குச் சம்ஸ்காரம், கல்வி, ஞானம், பொருளீட்டல், ஜபம், தவம், ஈசுவர சை, கவர்ன்மெண்டு உத்தியோகம் முதலிய எவ்வளவு தொல்லைகள் இருக் கின்றன. எனவே, பிராமணக் கடவுளின் அருள் திறம்! மனுவின் வாக்கியமும் இதே கருத்தில இருக்கிறது.
ஏகமேவது சூத்திரஸ்ய
ப்ரபு: கர்மஸமாதிசத்!
எதேஷாமேவ வர்ணானாம்
சுஸ்ரூஷா மனஸூயயா
பொருள்: பொறாமையின்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். பின்னும் விஸ்ரப்தம் ப்ராஹ்மண: சூத்ராத்
த்ரவ்யோ பாதானமாசரேத்;
1.மைசூரில் நவாப்புக்கு மந்திரியாக இருந்த பூரணையன் சரித்திரம் சான்று பகரும், தமிழ் நாடும் இத் தொல்லைக் குட்பட்டதே!
நஹிதஸ்யாஸ்தி கிஞ்சித்
ஸ்வம் பர்த்ளுஹார்யதனோஹிச
பொருள்: சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால், அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவன் அடிமையாதலால், அவனுக்கென்று பொருள் சிறி தேனுமில்லை.
இத்தகைய வாக்கியங்களை ஒரு சிறிதுகூட மீறாமல் நேபாளத்தில் இப்போது அரசியல் நடைபெற்று வருகிற தென்று முன்னரே கூறியுள்ளோம். இதற்கு முன் அரசு புரிந்துவந்த க்ஷத்திரியர் ஆளுகையும் இத்தன்மையதே யாகும் என்று அறியத்தக்கது.
 -(தொடரும்)

ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 20 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை(13-12-2010)

ஞான சூரியன் - 15

ஆனால், உதவி புரிந்தோர்களையாவது தங்களுடன் சேர்த்துக் கொண்டார்களா? இல்லை. அவர்களையும் குரங்குகள் ஆயினும், பக்தியுள்ளவைகள் என்றும் இழிவாகவே பேசினார்கள். இராமனால் செய்யப்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் மனிதர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆயினும் இத்தருணத்திற்கேற்ற ஒரு கதையை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். இது இராமாயணம், உத்தரகாண்டத்தில் சீதையைக் காட்டில் கொண்டுபோய் விட்ட பிறகு, அஸ்வமேத யாகஞ் செய்யப்போகும் தருணத்தில் நடந்ததாகச் சொல்லப் பட்டுள்ளது.
ஒரு நாள் ஒரு பிராமணன் இறந்துபோன தனது பிள்ளையினுடைய உடலைத் தாங்கிக் கொண்டு அரச சபைக்கு வந்து, உனது கொடுங் கோலாட்சியில் நடந்த கதியைப் பார் என்று பலவிதமான வசைமொழி களைப் பொழிந்து கதறினான். அரசன் ஒன்றும் தோன்றாமல் திகைத்திருக்கும்போது, சம்பூகன் என்கிற ஒரு சூத்திரன் காட்டில் தவம் பண்ணுகிறான். அவனைக் கொல்லாமலிருந்த குற்றத்தால், இக்குழந்தையின் உயிர் நீங்கிற்று. ஆயினும், காலங்கடவாமல் சென்று அவனைக் கொன்றால், குழந்தை திரும்பவும் உயிர் பெற்றெழும் என்று அசரீரி வார்த்தை மொழிந்ததாம். உடனே கோடை காலத்தில் காட்டுத்தீயின் நடுவில் அகப்பட்டவன் மழையினால், எங்ஙனம் மகிழ்ச்சியுறுவானோ, அத்தகைய மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்று,
1. குரங்குகள் இப்போது பேசுவதாகத் தெரிந்தால், அப்போது பேசி இருந்திருக்கும். ஆனதால், தென்னாட்டிலுள்ளாரை இழிவு படுத்தவே இப்படிக் கூறியதென்க. அனுமான் 9 வியாகரணம் வாசித்த குரங்காம். அவர் தோளில் இராமனும், இலட்சுமணனும் சவாரி செய்ய இடம் கண்டனர். அந்தத் துறவியைப் பார்த்து, நீ எதன் பொருட்டுத் தவம் பண்ணுகிறாய்? என வினவ, அதற்கு அவர், இவ்வுலகப் பொருள்கள் எதையும் நான் விரும்பவில்லை, உண்மை நிலை ஒன்றினையே விரும்புகிறேன் என்று விடைபகர, இந்த ராமன் சற்றுத் தயங்கியும் உடனே, சூத்திரன் தவம் பண்ணலாமா? இதனாலன்றோ பிராமணச் சிறுவன் இறந்தான்! ஆதலால், துறவியாயினும் இந்தச் சூத்திரனைக் கொல்லும், பாவமாகாது. எதிர் மறையாக, இவனைக் கொல்லுவதால், இறந்து போன பிராமணச் சிறுவன் உயிர் பெற்றெழுந்து, அதனால் பெரும் புண்ணியத்தை அடைவோமே என்று எண்ணியவனாய்த் தன் கையைப் பார்த்து இங்ஙனம் கூறுகிறான்:-
ஹே! ஹஸ்த தக்ஷிண மருதஸ்யசி சோர்த்விஜஸ்ய
ஜீவாதலே விஸ்ருஜ சூத்ர முனௌக்ருபாணம்:
ராமஸ்ய காத்ரமஸி ............................................
பொருள்: ஓ! வலக் கையே, இறந்துபோன 1பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர்பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால், கூசாமல் இவனை வெட்டிவிடு, நீ இராமனது அங்கங்களில் ஒன்றன்றோ?
இவ்வாறு அந்தத் 2துறவியைக் கொன்றவுடனேயே சிறுவன் உயிர்த்தெழுந்து விட்டதாயும், இராமாயணத்தில் எழுதியிருப்பதை யாவரும் வெளிப்படையாயறிந்ததே. என்னே இராமனின் கருணையிருந்தவாறு! இவ்வரும் பெரும் காரியஞ் செய்த அந்த ராமன், சாட்சாத் விஷ்ணு வின் அவதாரமாம். இக்காலத்திலும் இராமனைப் போன்ற அரசன் இருந்தால், சூத்திரர்கள் கதி என்ன?
இராமாயணம் கதை எழுதியதன் முக்கியக் கருத்து இக்கதைக்குள் அடங்கியிருக்கிறது. தேவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி விஷ்ணு 1. பிராமணரல்லாதாருடைய நாசம் பார்ப்பனரின் முன்னேற்றம் என்று பொருள்.
2. அழகுடைய மகளிரையும், ரத்தினத்தையும், ஞானத்தையும் சண்டாளனிடத்திலிருந்து பெறலாமென்ற ஸ்மிருதி வசனத்துக்கு முற்றிலும் மாறுபட்டதோடு, வேதத்தில் ரைக்வர் என்ற இருடி தோல் பதனிடுஞ் ஜாதியன்றோ? சஙகராச்சாரியரை எதிரே நின்று கேட்டவன் புலையனன்றோ? இவைகளைக் கவனித்தால், இராமா யணம் முழுப் பொய் என்பது விளங்கும்.
இராமனாக அவதரித்து 1இராவணன் முதலிய இராட்சதர்களை ஒடுக்கி உலகத்திற்கு எண்ணிறந்த நன்மைகளைச் செய்தாரென்றும், குடிகளை மகிழ்விக்கும் பொருட்டுப் பதிவிரதையான தம் மனைவியையும் காட்டிற்கு ஓட்டிவிட்டார் என்றும் மற்றும் பலவிதமாகப் புகழ்ந்து கூறி, நம்மவர்களுக்கு அவரிடம் ஒரு விதமான அன்பை உண்டு பண்ணிய பிறகு மேற்சொன்னவாறு சூத்திரத் துறவியைக் கொன்ற கதையும் சொல்லிவிடுகிறார்கள். இதைப்பற்றி யாதேனும் கேள்விகள் கேட்டால், அது திரேதாயுகம்; அக்காலத்தில சூத்திரன் தவம் பண்ணக்கூடாது. இது கலியுகம் பிராமணர்கள் கெட்டுப்போனார்கள். சூத்திரர்கள் தவம் பண்ணுகிறார்கள். இது யுகதருமம் என்று சொல்லி ஏமாற்றிவிடுகிறார்கள். உண்மையாகச் சொல்லுமிடத்து இவ்வஞ்சகர்கள் சொல்லும் கலியுகமாவது, கிருதயுக மாவது கிடையாது. இந்த உண்மையை. ஸதாம் ஸத்யுக; ஸாக்ஷாத் ஸர்வதை வாஸதாம் கலி
பொருள்: நல்லோர்களுக்கு எக்காலத்துங் கிருதயுகமும், தீயவர்களுக்கு எப்போதும் கலியுகமுமாம் என்கிற வாக்கியத்தினால் அறியக் கிடக்கின்றது.
இந்த இராமாயணக் கதையானது, சூத்திரர்கள் ஒரு குற்றமில்லாமல், மறுமையிலேனும் நற்கதியடையலா மென்று காட்டில் சென்று தவம் பண்ணிக் கொண்டிருந் தாலும், அத்தவத்திற்கு ஆதாரமாகிய உடலை ஒழித்துவிட வேண்டும் என்று ஏனைய அரசர்களுக்கும் போதிப்பதா யிருக்கின்றதன்றோ? இதனால் சூத்திரர்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்படுகிற மற்ற சுயமான ஜாதியார் களை, என்றென்றைக்கும் எவ்வழியிலும் முன்னேற வொட்டாமல் தடுக்கவேண்டுமென்ற தீய எண்ணம் பார்ப்பன ஜனங்களுக்கு இருந்து வருகிறதை வெள்ளிடை மலைபோலக் காணக் கிடக்கிறதன்றோ? உண்ட வீட்டுக்கே இரண்டகம் புரியும் வஞ்சக ஜனங்களின் சுயநலத்தை மட்டுங்கோரி, அவர்கள் சொல்லுகிற வழியே ஒத்துக் கொண்டு நடக்கிற அரசனே க்ஷத்திரியன் என்று சொல் லியிருக்கிறார்கள்.

ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 20 ஆம் பதிப்பு : 2010
(தொடரும்)
நன்றி:விடுதலை(12-12-2010)