Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Sunday, September 15, 2013

அறிஞர் அண்ணா தீட்டிய அந்த வசந்தம்-அண்ணாவிடம் - கி. வீரமணி வேண்டுகோள்

தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி விடுதலை மலருக்குக் கட்டுரை வேண்டி அண்ணா அவர்களிடம் கேட்டேன்.
நான் கொஞ்சம் அதிகமாகவே அவருக்குத் தொல்லை  கொடுத்தேன்.
ஏனென்றால், அவருக்கு அவ்வளவு நெருக்கடிகள். அவர் பதவிக்கு வந்து கொஞ்ச நாள் ஆகிறது. 1967 மார்ச்சிலே அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தார். அடுத்து ஆறு மாதத்தில் செப்டம்பரில் அய்யா பிறந்த நாளை ஒட்டி அவரிடம் மலருக்குக் கட்டுரை கேட்டேன். செப் டம்பர் மாதத்தில் ஏராளமான கோப்பு களைப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்களையும் பார்த்துக் கொண்டு இருந்தார். நான்போய் அண்ணா அவர்களிடம் நின்றவுடனே, கட்டுரை தானே  எழுதி கொடுத்துவிடுகிறேனப்பா என்று ரொம்ப மகிழ்ச்சியாகச் சொன்னார்.
அண்ணா அவர்கள் அடுத்து மது ரைக்குச் சென்றார். அண்ணா அவர் களுக்குத் தெரியும் செப்டம்பர் 17 என்றால் அவருக்குத் தெரியும். அய்யா அவர்களுடைய விடுதலை மலரை 16ஆம் தேதியே வெளியிட்டுவிடுவோம். ஆகவே குறிப்பிட்ட காலத்திற்குள் மலர் வர வேண்டியது முக்கியம்.
மதுரை திருமங்கலம் என்ற திருநகர் பகுதிக்குச் சென்று ஆதித்தனார் அவர் களுடைய வீட்டில் அண்ணா அவர்கள் தனியே அமர்ந்து கட்டுரையை எழுதி விடுதலை அலுவலகத்தில் என்னிடம் நேரடியாகக் கொடுக்கும்படி ஒரு ஆளையே போட்டு அனுப்பினார்.
அண்ணா அவர்கள் எழுதிய அந்த கட்டுரையைப் படித்து விட்டு அய்யா அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந் தார். அந்த கட்டுரைக்குத் தலைப்பே அந்த வசந்தம். அந்தக் கட்டுரை வருமாறு:
கலவரம் நடக்காத பொதுக்கூட்டம் எது?
எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு  ஆண்டு பலவற்றுக்குப் பிறகு  அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றையக் கவலைமிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.
வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடுமேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடு களில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.
அப்போது, கலவரம் எழாமல் ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும், பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படு முன்னர், தலைபோகும்  தாடி போகும் தடி போகும்  உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண் டிய நிலை.
பெரியாரால் திருந்திய
தமிழரோ பலப்பலர்!
அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா! என்று ஒரு கடிதத்தை வீசுவார். ஆமாமய்யா! என்று ஒரு கடிதத்தைத் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்க மாட்டார்  வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால். செல்வோம்; பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில், உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந் திருப்பின் அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக மாலை வாங்கிக் கொண்டு தான் வருவார்! அத்தகைய தெளிவும் வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய தெளிவுரை பெற்றுப் பெற்று, தமிழரில் பலர், பலப்பலர் திருந்தினர் என்பது மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது.
வரலாற்றில் தனி இடம் பிடித்தவர்!
ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங் கும் இருந்ததில்லை.
அந்த வரலாறு தொடங்கப்பட்ட போது நான் சிறுவன். அந்த வரலாற்றிலே புகழே டுகள் புதிதுபுதிதாக இணைக்கப்பட்ட நாள்களிலே ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாள்களைத்தான் என் வசந்தம் என்று குறிப் பிட்டிருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர், பற்பலர். அவருடன் மற்ற பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாள்கள் எனக்கு மிகவும் இனிமையான நாள்கள்; இன்றும் நினைவிலே கொண்டு வரும்போது இனிமை பெறுகின்றேன்.
எதையும் தாங்கும் இதயத்தை எனக்குத் தந்தார்!
எத்தனை எத்தனையோ கருத்துகளை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என் பதை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத் தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும், அகமகிழ்வும், மனநிறைவும் பெற்றிடச் செய்தார்.
கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக் கண்டிருக்கிறேன்; கடிந்துரைக்கக் கேட்டிருக் கிறேன்; உன்னை எனக்குத் தெரியும் போ! என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டி ருக்கிறேன்; ஒருநாள் கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. எப் போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தனது குடும்பத் தில் பிறவாப் பிள்ளை எனக் கொண்டிருந்தார்.
தமிழன் வரலாற்றில் முக்கியக் கட்டம்!
நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.
இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார். நான் அவருடன் இணைந்த போது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.
அதற்குமுன் முப்பது ஆண்டுகள் அவர் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்த ஆண்டுகள் தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான ஆண்டுகள். திடுக்கிட வைக்கிறாரே! திகைப்பாக இருக்கிறதே! எரிச் சலூட்டுகிறாரே! ஏதேதோ சொல்கிறாரே! என்று கூறியும், விட்டு வைக்கக் கூடாது! ஒழித்துக் கட்டியாக வேண்டும்! நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று மிரட்டியும் தமிழகத்துள்ளாரில் பலர் பேசினர்; ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர். ஆனால், அவர் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தனர். மூலையில் நின்றாகிலும், மறைந்திருந்தாகிலும்! அந்தப் பேச்சு அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது. எதிர்த்தவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக் கண்டனர்; கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்! அவருடைய பேச்சோ  அது தங்கு தடை யின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது  மலைகளைத் துளைத்துக் கொண்டு, கற்களை உருட்டிக் கொண்டு, காடு கழனிகளை வளம் பெறச் செய்து கொண்டு ஓசை நயத்துடன்  ஒய்யார நடையுடன்! அங்கே பேசுகிறார், இங்கே பேசுகிறார், அதைக் குறித்துப் பேசுகிறார், இது குறித்துப் பேசுகிறார்  என்று தமிழகம் இந்த அய்ம்பது ஆண்டுகளாகக் கூறி வருகிறது.
பெரியார் வாழ்வு முழுவதும் உரிமைப் போரே!
மனதிற்பட்டதை எடுத்துச் சொல்வேன்  எது நேரிடினும்  என்ற உரிமைப்போர் அவருடைய வாழ்வு முழுவதும், அதிலே அவர்கண்ட வெற்றி மிகப் பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர் அந்த வெற்றியின் விளைவு களை. இந்தத் தமிழகத்தில் தூய்மையுடன் மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்துரைக்கலாம் என்ற நிலை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. அறிவுப் புரட்சியின் முதல்கட்ட வெற்றி இது! இதற்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளர் பெரியார்! இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண் டின் அளவு, மிகப் பெரியது.
பெரியார் கண்ட தமிழகம்!
தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட் டுள்ள இந்த நிலை இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாதது. பிற பகுதியினர் இதுபற்றிக் கேள்விப்படும்போது, வியர்த்துப் போகின்றனர். அப்படியா!  முடிகிறதா! நடக்கிறதா!  விட்டு வைத் திருக்கிறார்களா!  என்று கேட்கிறார்கள்  சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு.
அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இவை போன்ற நகர்களில் என்னையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோது, ஒவ்வோர் ஊரிலும் இதுபோலத்தான் கேட்டனர். யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்!
அந்த இடத்துப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள்  பெரிய பெரிய ஏடுகளை; எழுதுவார்கள் அழகழகான கட்டுரை களை; கூடிப் பேசுவார்கள் சிறிய மண்ட பங்களில், போலீசு பாதுகாப்புப் பெற்றுக் கொண்டு! இங்கு?
பழைமையின் பிடிவாதம் பொடிப்பொடியானது!
இங்கா இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழைமை உண்டா? எதைக்கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?
ஏ அப்பா! ஒரே ஒருவர், அவர் நம்மை அக்குவேறு ஆணிவேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே என்று, இந்நாட்டை என்றென்றும் விடப்போவதில்லை என்று எக்காளமிட்டுக் கொண்டிருந்த பழைமை அலறலாயிற்று! புதுப்புதுப் பொருள் கொடுத்தும், பூச்சுமெருகு கொடுத்தும் இன்று பழைமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. என்றா லும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக்கிறது என்பதை அறியாதவர் இல்லை!
எனவேதான் பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல; ஒரு சகாப்தம்  ஒரு கால கட்டம்,  ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை.
அக்கிரமம் தென்படும்போது, மிகப் பலருக்கு அது தன்னைத் தாக்காதபடி தடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக் கொள்வோம் என்ற பாதுகாப்பு உணர்ச்சியும்தான் தோன்றும்; எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் எழுவதில்லை.
நேர்மைக்காகப் போராடிய பெரியார்!
பெரியார் அக்கிரமம் எங்கு இருந்திடக் கண்டாலும், எந்த வடிவிலே காணப் படினும், எத்தனை பக்கபலத்துடன் வந்தி டினும் பெரியார் அதனை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை.
அவர் கண்ட களம் பல; பெற்ற வெற்றிகள் பலப்பல! அவர் தொடுத்த போர் நடந்தபடி இருக்கிறது! அவர் வயது 89! ஆனால் போர்க் களத்திலேதான் நிற்கின்றார்!!
அந்தப் போரிலே ஒரு கட்டத்தில் அவருடன் இருந்திடும் வாய்ப்பினைப் பெற்ற நாள்களைத்தான் வசந்தம் என்று  குறிப்பிட்டேன். மேலும் பல ஆண்டுகள் அவர் நம் முடன், நமக்காக, வாழ்ந்திருக்க வேண் டும். தமிழர் வாழ்வு நல் வாழ்வாக அமை வதற்கு, பன்னெடுங் காலமாக இருந்து வரும் கேடுகள் களையப்படுவ தற்கு, அவருடைய தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் என்பதில் அய்ய மில்லை. வாழ்க பெரியார்!
(பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் 89ஆவது ஆண்டு விடுதலை மலருக்கு எழுதிய கட்டுரை)

Monday, February 11, 2013

திராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா?


நாக்கூசாமல் பொய்சொல்லும் அருகோவின் அடாவடித்தனம்

                                                                                        -   வாலாசா வல்லவன் 


தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்ற ஜஸ்டிஸ் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல. ஒராண்ட காலமாகப் பல்வேறு மாநாடுகளில் விவாதிக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

26-4-43 நண்பகல் 2 மணிக்குச் சேலம் தேவங்கர் பள்ளிக் கூடத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் குழுக்கூட்டம் பெரியார் தலைமையில் கூடியது.  அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் - 2

“ஜஸ்டிஸ் கட்சிக்கு (S.I.L.F) தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்றிருக்கும் பெயரைத் தென்னிந்திய திராவிடர் கழகம் என்றும்,  ஆங்கிலத்தில் South Indian Dravidan Fedration என்றும் பெயர் திருத்தப்பட வேண்டும்.

தீர்மானம் - 4

இத்தீர்மானங்களைச் சேலத்தில் நடக்க போகும் கட்சி மாநாட்டில் உறுதிப்படுத்தி அமலுக்குக் கொண்டு வர வேண்டுமென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது.
(குடி அரசு 4-12-43 பக்கம் 5)

ஜஸ்டிஸ் கட்சிக்கு அமைந்த தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்ற பெயர் இனித் தென் இந்திய திராவிடர் கழகம் என்பதாக அழைக்கப்பட வேண்டும் என்பதாகும்.  இந்தத் தீர்மானமும் ஒரு விதத்தில் திருவாரூர் மகாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்றே சொல்லலாம்.
(குடி அரசு 4-12-43 பக்கம் 11)

கோவையில் 19-11-43 அன்று அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகத்திற்குப் பெரியார் தலைமைத் தாங்கினார்.  அப்போது பெரியாருக்கு வாசித்தளித்த வரவேற்புத் தாளில் கோவை மாவட்ட திராவிட கழகத்தால் என்று அச்சிட்டிருந்தனர்.
(குடி அரசு 18-12-43 பக்கம் 4)

சேலம் நகரில் செவ்வாய்பேட்டை திராவிடர் கழகத்தின் முதலாவது ஆண்டுவிழா 16-1-44 முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது.  தொடக்கத்தில் சேலம் தோழர்கள் பெரியார் ஈ. வெ. ரா., அண்ணாதுரை, என்.அர்ச்தனன், ஜே.எஸ். கண்ணப்பர் ஆகியவர்களை இரட்டைக் குதிரை கோச்சு வண்டியில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
(குடி அரசு 22-1-44 பக்கம் 6)

1943இலேயே இங்குத் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு முதலாமாண்டு விழாவும் நடைபெற்றுள்ளது.  புவனகிரி திராவிடர் கழக ஆரம்ப விழா 6-2-44 காலை 10.30 மணிக்கு சி. பி. சின்னராசு தலைமையில் நடைபெற்றது.  பெரியார் அவர்களுக்குத் திராவிடர் கழகத்தாரால் வாழ்த்து மடல் வாசித்து அளிக்கப்பட்டது.
(குடி அரசு 12-2-44 பக்கம் 5)

சென்னையில் நீதி கட்சியின் சென்னை மாவட்ட மாநாடு 13-2-44 அன்று தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதலாவது
தீர்மானம் கட்சியின் பெயர் மாற்றத் தீர்மானமாகும்.

1.  தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் என்பதைச் சென்னை மாகாண ‘திராவிடர் கட்சி’ என்று மாற்றுமாறு சேலத்தில் நடைபெறப்போகும் மாகாண மாநாட்டிற்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
(குடி அரசு 26-2-44 பக்கம் 14)

திருச்சி மாவட்ட நீதிக்கட்சி 15ஆவது மாநாட்டில் 20-2-44 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கட்சியின் பெயர் மாற்றத் தீர்மானம் பற்றியது ஆகும். அண்மையில் சேலத்தில் நடக்கவிருக்கும் நமது மாகாண மாநாட்டில் நமது கட்சியின் பெயரைத் “திராவிடர் கழகம்” என்று மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை இம்மாநாடு சிபாரிசு செய்கிறது. 

(குடி அரசு 4-3-44 பக்கம் 4)

நாகையில் திராவிடர் கழகம் திறப்பு விழா 9-3-44 முற்பகல் 11.45 மணிக்கு நடைபெற்றது.  நாகை திராவிடர் கழகத்தாரால் பெரியாருக்கு நல்வரவேற்பிதழ் வாசித்து அளிக்கப்பட்டது.  சி. பி. சின்னராசு, எஸ். கே. சாமி ஆகியோர் உரையாற்றிய பின் டி. வி. சொக்கப்பா தலைமையில் பெரியார் திராவிடர் கழகத்தைத் திறந்து வைத்தார்.
(குடி அரசு 18-3-44 பக்கம் 5)

11-3-44 அன்று திருச்சி பொன்மலையில் கற்கண்டார் கோட்டை ‘திராவிடர் கழக’த் திறப்பு விழாவும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.  பெரியாருக்கு 102 காலனாக்கள் பணமுடிப்பளித்தனர்.
(குடி அரசு 18-3-44 பக்ம் 10)

கோவை மாவட்ட திராவிட இளைஞர் மாநாடு 17-4-44 அன்று ஈரோடு சரசுவதி ஹால் என்னும் மண்டபத்தில் கோவை மாவட்ட முதலாவது திராவிட இளைஞர் மாநாடு தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெறும்.  க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.  அனைவரும் வருக.
(குடி அரசு 15-4-44 பக்கம் 5)

மேற்கண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று பெயர் மாற்றத் தீர்மானம் ஆகும்.  அண்மையில் நடக்கவிருக்கும் நீதி கட்சியின் மாகாண மாநாட்டில் அக்கட்சியின் பெயரைத் “திராவிடர் கழக”மென்று மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை இம்மாநாடு வலியுறுத்துகிறது/சேலத்தில் சூன் 18, 19 ஆகிய நாட்களில் நடைபெற்ற சேலம் மாவட்ட திராவிட இளைஞர் மாநாட்டு தீர்மானங்களில்
முதன்மையானது.

1.  நீதி கட்சியையும், தன் மதிப்பியக்கத்தையும், ஒன்றுபடுத்தி திராவிடர் இயக்கமென்று பெயரிட்டு நிதியும், கழகங்களும், தினசரித்தாளும் அமைத்து ஆக்க வேலை செய்ய பெரியால் ஈ. வெ. ரா.வை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(குடி அரசு 8-7-44 பக்கம் 11)

11-7-44 அன்று தஞ்சையில் ஊ. ஆ. பூ. சௌந்தரபாண்டியன் தலைமையில் தஞ்சை மாவட்ட திராவிடர் இளைஞர் மாநாடு நடைபெற்றது.  இம்மாநாட்டில் நீதிக் கட்சியையும் தன் மதிப்பியக்கத்தையும் ஒன்றுபடுத்தி ‘திராவிடர் இயக்கம்’ என்று பெயரிட வேண்டும்மென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(குடி அரசு 29-7-44 பக்கம் 2)

திராவிடர்களே சேலம் மாநாட்டிற்குச் செல்லுங்கள் என்ற தலையங்கம் எழுதப்பட்டது.  அத்தலையங்கத்தில் நாம் திராவிடர், நம் கழகம் திராவிடர் கழகம், நமக்கு வேண்டியது திராவிட நாடு  என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
(குடி அரசு 12-8-44 பக்கம் 6) 
20-8-44இல் நடத்த இருந்த சேலம் மாநாடு சரியான ஏற்பாடு செய்யப்படாததால் 27-8-44க்குத் தள்ளி வைக்கப்பட்டு நடைபெற்றது.

சேலம் மாநாட்டுக்கு வரும் தீர்மானங்கள் கட்சி அரசியல் தீர்மானங்கள்

1. (அ)  இந்த மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்னும் இக்கட்சிக்கு உள்ள தென்இந்தியர் நலஉரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடர் கழகம்  ``Dravidian Association’’ என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது.
(குடி அரசு 26-8-44 பக்கம் 3)

சேலம் மாநாடு ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டதால் மாநாட்டிற்கு வரும் தீர்மானங்கள் முன் கூட்டியே குடி அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

27-8-44இல் நடைபெற்ற சேலம் மாநாடு சேலம் நகரையே உலுக்கியது.  ஊர்வலத்தில் 30,000 பேர், உயிருக்குத் துணிந்த வீரர்கள் 5,000 பேர், 40 குதிரைகள், 2 யானைகள், 4 சக்கர இரட்டைக் குதிரை சாரட்டில் தலைவர் ஊர்வலம் டஜன் கணக்கான கார்கள் பின் தொடர்ந்தன.  புதிய உடையுடனும் கொடியுடனும் 300 தொண்டர்கள், 5 ஜதை பாண்டு, 10 ஜதை மேளம், 100 தப்பட்டை, 40 கொம்புகள் பெரியார் வாழ்க, திராவிட நாடு திராவிடர்க்கே, திராவிடர் கழகம் ஓங்குக என்ற முழுக்கம் பிற்பகல் மாநாடு பெரியார் தலைமையில் மாலை 3 மணிக்கு கூடியது.  ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை அதாவது
தென்னிந்திய நல உரிமைக் கழகம் என்பதைத் திராவிடர் கழகம் என்பதாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் தோழர் அண்ணாதுரை அவர்களால் முன்மொழியப்பட்டது.  தோழர் டி. சண்முகம் அவர்கள் அமோதித்தார். இத்தீர்மானத்தைத் தோழர்கள் சி. ஜி. நெட்டோ, அ. கணேச சங்கரன், எ. வேணுகோபால் ஆகியவர்கள் விஷய ஆலோசனைக் கூட்டத்தில் அனுமதித்து விட்டுப் “போதுமான கால நோட்டீஸ்° கொடுக்கப்படவில்லை” என்பதாக ஆட்சேபித்தார்கள்.  தலைவர் பெரியார் எழுந்திருந்து ஜஸ்டிஸ் என்பது பத்திரிக்கையின் பெயர் என்றும், இக்கட்சியின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதாகவும், சேலத்தில் 26-11-43 இல் கூடிய நிர்வாக சபை கூட்டத்தில் (இவர்களும் கூடியிருந்த நிர்வாகசபைக் கூட்டத்தில்) ஜஸ்டிஸ் கட்சி என்றிருப்பதை ‘திராவிடர் கழகம்’ என்பதாக மாற்ற வேண்டுமென் மாகாண மாநாட்டுக்கு சிபாரிசு செய்திருப்பதாகவும் மற்றும் பல சங்கங்கள் ஆதரித்திருப்பதாகவும் தென்னிந்தியர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்றும் தெரிவித்தார். பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  ஆயிரக்கணக்கான கைகள் உயரத்தூக்கின.  ஆட்சேபிக்கிறவர்கள் கை தூக்கும்படி கேட்கப்பட்ட போது யாரும் கை தூக்கவே இல்லை. ஆட்சேபித்தவர்களும் சும்மா இருந்து விட்டார்கள், எனவே தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
(குடி அரசு 2-9-44 பக்கம் 3)

                                                             சேலம் மாநாடு பற்றிப் பெரியார் அறிக்கை

சேலம் மாநாட்டைப் பற்றி ஒரு சிலர் தாறுமாறான அறிக்கைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.  அவைகள் ஒன்றும் நேர்மையானவை அல்ல, பெரும்பாலான விஷயங்கள் உண்மையுமல்ல.  அந்த அறிக்கைகள் எனக்கு ஒன்றும் அனுப்பவுமில்லை.

மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சிக்கு தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்று, இருந்த பெயரைத் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றப்பட்டது உண்மைதான், ஆனால் அத்தீர்மானம் பொதுக்கூட்டத்தில்  பிரேயித்து ஆமோதித்தவுடன் இதற்குப் “போதிய நோட்டீ° இல்லை”  என்று மாத்திரம் தோழர் நெட்டோ சொன்னார்.  அதை கணேசங்கரன் ஆதரித்தார்.  தலைவர் அதற்குச் சமாதானம் சொன்னார்.

“சேலத்தில் 26-11-43ம் தேதியில் நடந்த S. I. L. F  நிர்வாகச் சபைக் கூட்டத்தில்” பெயர் மாற்றம் நிறைவேற்றப்பட்டு அதைச் சேலத்தில் நடக்கும் மாகாண (இந்த) மாநாட்டுக்குச் சிபார்சு செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  அதில் தோழர்கள் நெட்டோ, இரத்தினம்பிள்ளை முதலியவர்களுக்கும் இருந்திருக்கிறார்கள்.  அதன் பின் சுமார் 20-க்கு மேற்பட்ட ஜில்லா, தாலுக்கா மாநாடுகளில் இது நிறைவேற்றப்பட்டு சேலம் மாநாட்டுக்குச் சிபார்சு செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்த மாநாட்டிற்கும் இதுபற்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான தீர்மானங்கள் வந்திருக்கிறன்றன, அவை தோழர் நெட்டோ அவர்கள் வசமே இன்னமும் இருக்கின்றன.

அன்றியும் தென் இந்தியர் கழகம் என்பதும் திராவிடர் கழகம் என்பதும் ஆதியில் ஏற்படுத்தினவர்களின் கருத்தில் வித்தியாசம் கொண்டதல்ல, மக்களுக்கு இன எழுச்சியும், நாட்டு எழுச்சியும் ஏற்படுவதற்கும், திராவிட நாடு கேட்பதற்கும் ஊக்கம் அளிப்பதற்கும் ஆகவே அச்சிறு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்.பிரதிநிதிகள் ‘ஓட்டு ஓட்டு’ என்றார்கள், ஓட்டுக்கு விடப்பட்டது; ஏகமனதாய் நிறைவேறிற்று.  அப்போது தோழர் நெட்டோ அவர்களும் மற்றும் இப்போது அறிக்கை விடும் நண்பர்களும் இருந்தார்கள்.  எதிர்ப்புக்கு நெட்டோவாவது இதர நண்பர்களாகவது கை துhக்கியோ, ஓட்டு கொடுக்கவில்லை; வேறு ஒருவரும் எதிர்ப்புக்கு ஓட்டு கொடுக்கவில்லை. 

இதுதான் பெயர் மாற்றத் தீர்மானத்தினுடையவும் அதன் எதிர்ப்பினுடையவும் நடவடிக்கையாகும்.  நெட்டோ முதலியவர்களால் பத்திரிகைகளுக்கு வந்த சேதிகள் பின்னால் யோசித்துச் சொல்லப்படுபவைகளாகும்.மாநாடு வெற்றியாக முடிந்து தலைவர் முடிவுரை ஆனாவுடன் ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை அவர்கள் வரவேற்புக் கழகச் சார்பில் தீர்மானங்களைப் புகழ்ந்து கூறித் தலைவருக்கும், தோழர் பாண்டியனுக்கும், வரவேற்புத் தலைவர், காரியதரிசி, ஆகியவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும், மாநாட்டுக் கொட்டகை உதவிய முனிசிபாலிட்டியாருக்கும் மற்றவர்களுக்கும் பெருத்த கைத்தட்டலிடையே நன்றி கூறினார்கள்.  மாநாடு எவ்வித ஒரு சிறு அபிப்பிராய பேதமோ
மேற்கண்டதைக் தவிர ஒரு சிறு எதிர்ப்போ இல்லாமல் நடைபெற்றது.  தீர்மானங்கள்யாவும் ஏகமனதாய் நிறைவேறின.  இதற்குப் பத்திரிகை நிருபர்களும் சர்க்கார் ஊ. ஐ. னு. சுருக்கெழுத்தாளர்கள், ரிக்கார்டுகளும், அதிகாரிகளும், கட்சியாளர்களும், பிரதிநிகளும் சாட்சியாகும்.
                                                                                                                                                          ஈ. வெ. ராமசாமி
                                                                                                                                                  (குடி அரசு 2-9-44 பக்கம் 8)

குறும்புத்தனமான அறிக்கைகள்

சேலம் மாநாடு முடிந்த பிறகு பத்திரிக்கைகளில் சிலர் குறும்புத்தனமான அறிக்கைகள் விட்ட வண்ணம் இருக்கிறார்கள்.  நம் எதிரிகளான பார்ப்பனர் முதலிய பத்திரிகைக்காராகள் இந்த சமயத்தைத் தங்களுக்கு அனுகூலமாக ஆக்கிக் கொண்டு அதற்கு விஷமத்தனமான பெரிய தலைப்புக் கொடுத்து அதிக விளம்பரம் செய்து வருகிறார்கள். நம் இயக்கம் செய்ய வேண்டிய வேலைகளும் அது அடைய வேண்டிய வெற்றிகளும் இந்த இரு கூட்டத்தினால் தடைப்பட்டு போய்விடாது என்கிற தைரியத்தாலேயே அவைகளை நாம் பிரமாதமாக லட்சியம் செய்வதில்லை என்பதோடு நம் உண்மைத் தோழர்களும் மதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அறிவோம்.
ஒரு சபைக்குப் பெயர் மாற்ற அச்சபை பொது மாநாட்டிற்கு அதிகாரம் இல்லை என்று சொல்லுவது  அறிவுரையாகாதென்றே சொல்வோம்.அடுத்த ஆட்சேபனை போதிய நோட்டீசு (அறிவிப்பு) இல்லை என்பது.  இது பரிகசிக்கத்தக்கதே யாகும்.நோட்டீசு இல்லாமல் மாநாடுகளில் எத்தனையோ தீர்மானங்கள், எத்தனையோ மாகாண மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்றாலும் அந்த முறையையோ, மாத்தியதையையோ இப் பேர் மாற்றத் தீர்மானத்திற்கு நாம் உரிமை பாராட்டவில்லை.

இத்தீர்மானமானது முறைப்படி சேலத்தில் 10 மாதங்களுக்கு மன் கூட்டப்பட்ட நிர்வாக சபைக் கூட்டத்தில் தோழர்கள் இரத்தினசாமி, நெட்டோ, அவர்கள் வீற்றிருந்த கூட்டத்தில் நெட்டோ அவர்களின் ஆதரிப்பின் பேரிலேயே “தென் இந்திய நல  உரிமைச் சங்கம் என்பதை திராவிடர் கழகம் என்று அழைக்கப்பட வேண்டும்” என்று ஏகமனதாக தீர்மானித்து ‘இந்த தீர்மானத்தை மாகாண பொது மாநாட்டுக்கு இக்கமிட்டி சிபார்சு செய்கிறது’ என்று தீர்மானித்து இருப்பதோடு ‘அப்படி கூட்டப்படும் மாநாட்டை சேலத்தில் நடத்த வேண்டும்’ என்றும் அந்த வினாடியிலேயே மாநாட்டை அழைத்தவர்கள் இதே தோழர்கள் இரத்தினம் பிள்ளையும் நெட்டோ அவர்களும் ஆவார்கள்.

அன்றியும் சேலம் நிர்வாக சபைக் கூட்டத்திற்கு பிறகு கூட்டப்பட்ட பல ஜில்லா, தாலுக்கா மாநாடுகளில்
இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

 இவை மாத்திரமல்லாமல் 27-8-44 இல் நடந்த சேலம் மாநாட்டுக்குக் கூட மாநாட்டாரின் அறிக்கைப் படி இது சம்பந்தமாக பல ஸ்தாபனங்களிலிருந்தும், தனிப்பட்டவர்கள் இருந்தும் தீர்மானங்கள் வந்திருக்கின்றன.  இந்த 10 மாதகாலமாக  இவை பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தப் பட்டிருக்கின்றன.  இனி எந்த விதமான முன் அறிவிப்பு (நோட்டீசு) வேண்டுமென்று இவர்கள் கருதுகிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

அன்றியும் விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டத்தின் போது இந்த ஆலோசனைக்காரர்கள் இருந்து இத்தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஒரு அதிருப்தியும் காட்டாமல் ஆதரவாளர்களாக இருந்து விட்டு, வேறு காரியங்களுக்காக இவர்கள் மீது ஒழுங்கு முறை நடவடிக்கைத் தீர்மானம
நிறைவேறியவுடன் அத்தீர்மானம் தங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ள இடமிருக்கிறதென்று கருதி பயந்து போய் அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு தந்திரமாக இந்தச் சாக்கை ஒரு சிலர் உபயோகிக்க, பின்னால் யோசனை செய்து கண்டு பிடிக்கப்ப பட்டதல்லாமல் இதில் வேறு உண்மையோ, நியாயமோ, நாணயமோ என்ன இருக்க முடியும் என்று கேட்கிறோம்.
(குடி அரசு 9-9-44 பக்கம் 6, 7)

சேலம் மாநாட்டின் செயலாளராக இருந்தவர் நெட்டோ, சேலம் மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவராக இருந்தவர் இரத்தினம் என்பவர் இவர்கள் இருவரும் தான் திராவிடர் கழகம் என்பதற்குப் பதிலாக பழைய ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரே இருக்க வேண்டும்.  பெயர் மாற்றம் தேவையற்றது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிக்கை விட்டவர்கள்.

சேலம் மாநாட்டில் பெரியாரின் தலைமையை மாற்ற வேண்டுமென்று செயல்பட்டவர் பாலசுப்பிரமணியம் ஆவார், அவரும் பின்னர் தன்பேச்சை பின் வாங்கிக் கொண்டார்.

கி. ஆ. பெ. விசுவநாதம் மாநாட்டுத் திறப்பாளர்.  அவர் பெரியாரைப் பற்றி கிண்டலும் கேலியுமாகச் சில வார்த்தைகள் பேச எதிரே இருந்தவர்கள் அவரை உட்காரும்படி முழுக்கமிட்டவுடன் பெரியரைப் புகழ்ந்து பேசிவிட்டுப் பெரியாரின் சர்வாதிகாரத் தன்மை தேவைதான் என்று கூறி முடித்துவிட்டார்.

அருகோபாலன் கூறுவது போல கி. ஆ. பெ. விசுவநாதம் எந்தத் தீர்மானமும் கொண்டு வரவில்லை 
(குடி அரசு 2-9-44 பக்கம் 2)

கி. ஆ. பெ. அவர்களைப் பற்றி 1984இல் எம்ஃபில் ஆய்வு செய்த மணிமேகலை என்பவர் அவர் உயிருடன் இருக்கும் போதே அவரிடம் நேர் காணல் செய்துள்ளார்.  சேலம் மாநாட்டைப் பற்றி அவரிடம் கேட்டு பதிவு செய்துள்ளதில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் பெயரைத் ‘தமிழ் நாடு நீதிக்கட்சி’ என்ற பெயரில் மாற்றி அமைத்து ஆதரவு திரட்ட வேண்டுமென்ற தமது  விருப்பத்தைத் தெரிவித்தார் என்று தான் பதிவு செய்துள்ளார்.
(முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம், வ. மணிமேகலை பக்கம் 48) கி ஆ. பெ. விசுவநாதம் நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து 1942ல் விலகும்போது அதற்கான பல காரணங்கள் கூறியிருந்தார்.

ஜஸ்டிஸ்  கட்சி எல்லோராலும் போற்றப்பட வேண்டுமானால் அடியிற்கண்ட வேலைத் திட்டத்தைப் போன்ற ஒரு முறையைக் கொண்டு கட்சியை பலம் பொருந்திய ஸ்தாபனமாக ஆக்குவதில் மூலம் தான் முடியும் என்ற எனது எண்ணத்தில் இன்றும் கூட மாறுதல் அடைய விரும்புவதில்லை என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி நீதிக் கட்சியின் வளர்ச்சிக்குப்  பல ஆக்கப்பூர்மான யோசனைகள் தெரிவித்துள்ளார்.கட்சியின் பெயர் மாற்றம் பற்றியோ பெரியார் கன்னடர் என்பது பற்றியோ ஒருவரி கூட இல்லை.  கடிதத்தை முடிக்கும் போது கூட இவைகளை எனது ஆலோசனைகளாகக் கட்சியின் நலனுக்காகக் குறிப்பிட்டுள்ளேன்.  நான் சாதாரண அங்கத்தினன் என்ற முறையில் என்னால் இயன்ற உதவிகளையும் எக்காலத்திலும் செய்யக் காத்திருக்கின்றேன் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
(மேற் கண்ட ஆய்வு நூல் பக்கம் 121-127)

மேற் கண்ட அறிக்கையின் மூலமும், சேலம் மாநாட்டில் அவர் கொண்டு வர நினைத்த தீர்மானம் ‘தமிழ் நாடு நீதி கட்சி’ என்ற பெயரின் மூலம் அவர் பெரியாரைக் கன்னடர் என்று வெறுத்தார் என்பதற்கோ, தமிழர் கழகம் எனப் பெயர் மாற்ற முயன்றார் என்பதற்கோ எந்த வித சான்றும் இல்லை.  எனவே அருகோபாலனின் கூற்றாகிய காலையில் தமிழர் கழகம் என்ற பெயரை மாலையில் பெரியார் மாற்றினார் என்பது சுத்தமான வடிக்கட்டின பொய் என்பது புலப்படும்.

அருகோ கூறும் இன்னொருவர் அண்ணல் தங்கோ, சுவாமிநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் அன்றைய வடஆர்க்காடு மாவட்டம்  (வேலூர் மாவட்டம்) குடியேற்றம் பகுதியைச் சேர்ந்தவர்.  அவர் இந்திய தேசிய காங்கிரசில் தீவிரமாக வேலை செய்து வந்தவர். 1934இல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்த போது அவரைத் தமது பகுதியில் பேச செய்வதற்கு முன் அனுமதி பெற்று குடியற்றம் பாலற்றங்கரையில் மிகப் பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.  இவருடைய வளர்ச்சியை விரும்பாத பார்ப்பன இராசாசி காந்தி அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதபடி பாதையை மாற்றி அழைத்துச் சென்று விட்டார்.  இதனால் வெறுப்புற்ற சுவாமிநாதன், பார்ப்பன எதிர்ப்பியக்கமான சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார்.  வடஆர்க்காடு மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்தவர் சேலம் நீதிகட்சி மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரும் அளவுக்குச் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.  அவருடைய பெயர் அந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலிலோ, இதழ்களிலோ இல்லை.  இவர் கி. ஆ. பெ.வுடன் சேர்ந்து தமிழர் கழகம் எனப் பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வந்தார் என்பது அருகோவின் கற்பனையே ஆகும்.

 24.25-8-1940நாள்களில் திருவாருரில் நடைப்பெற்ற தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் 15ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதன்மையானது  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய  அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது நாம் அனைவரும் திராவிடர் என்றே பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்துக்கள் என்று பதிவு செய்து  கொள்ளக் கூடாது. என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசியவர் அண்ணல் தங்கோ ஆவார். அதே திருவாருர் மாநாட்டில் திராவிட நாடு பிரிவிணைத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. திராவிடநாடு பிரிவிணைக்கோரிக்கையை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் கி. ஆ. பெ.  விசுவநாதமும் ஒருவராவார். அப்போது அவர் நீதிக்கட்சியின் செயலாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

(குடிஅரசு 1-9-1940 பக்கம் 12)

சேலம் மாநாடு முடிந்த பிறகும் கி. ஆ. பெ. விசுவநாதம் நாங்கள் தான் உண்மையான ஜஸ்டிஸ் கட்சி என்று கூறிக் கொண்டிருந்த பி. டி. இராசன், பாலசுப்பிரமணியம் குழுவில் நீதிக் கட்சியில் தான் இருந்தார்.
சில ஆண்டுகள் கழிந்த பின்பே அவர் 1947இல் தமிழர் கழகம் என்ற அமைப்பையும் ‘தமிழர் நாடு’ என்ற இதழையும் நடத்தி வந்தார்.  அவர் 21-6-1959இல் நடத்திய திருச்சி வானொலி நிலையத்தில் எழுதப்பட்டிருந்த ‘ஆகாசவாணி’ பெயர்ப் பலகையைத் தார்ப் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்திய போது பெரியார் சென்று அதில் கலந்து அவருடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
(மேற் கண்ட நுhல் பக்கம் 89)

மா.பொ.சி. இந்திய தேசிய காங்கிரசில் ராசீவ் காந்தி தலைமையில் சேருகின்றவரையில் தமிழரசு கழகத்தை வைத்துக்கொண்டுதான் இருந்தார். தமிழரசு கழகம் என்ற பெயரை வைத்துக்கொண்டுதான் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென்றும் அதன் தலைவர் பிரபாகரனை பயங்கரவாதி என்று கூறிக்கொண்டு ராசீவ் செயவர்தனே ஒப்பந்தத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் துக்ளக் சோ  மற்றும் ஜெயகாந்தன் போன்ற தமிழின துரேகிகளுடன் இணைந்து பரப்புரைச் செய்தார்.
 (ம. பொ. சி.: ஈழத்தமிழரும் நானும் பக். 186).

எனவே தமிழர் என்ற பெயர் கொண்ட அமைப்பை எல்லாம் திராவிட இயக்கத்தினர் அழித்தனர் என்பதெல்லாம் வடிகட்டின பொய்யேயாகும்

Tuesday, January 22, 2013

பெரியாரின் தத்துவ நோக்கு!


பேரா. கருணானந்தனின் பெரியாரியல் அறக்கட்டளைச் சொற்பொழிவு - (4.9.2012 சென்னைப் பல்கலைக் கழகம்)

பெரியாரை ஒரு சமூகப் போராளியாகத்தான் பலரும் அறி வார்கள்; அவர் ஒரு  தத்துவவாதியும் கூட. இது விஷயத்தில் அவரின் சம  கால முன்னோடிகள் - அயோத்தி தாசர், சிங்காரவேலர், அம்பேத்கர்.
அயோத்திதாசர் பூர்வ பவுத்  தத்தை நாடிய ஒரு பவுத்தவாதி. சமூக  நீதித் தளத்திலிருந்து தத்துவதளம் நோக்கிப் பயணித்தவர். அதற்காகவே அவர் பவுத்தத்தை தேர்ந்தெடுத்தார். அதனாலேயே மூல பவுத்தத்தை நோக்கிச் சென்றார். அங்கே கடவு ளுக்கு வேலையில்லை என்பதை அறிவார். அதே நேரத்தில் பவுத்தம் நாத்திகவாதம் அல்ல என்றும் வாதிட் டார். கடவுள் என்பதற்கு நன்மை என்று பவுத்தம் பொருள் கொண்டதாகச் சொல்லி அந்தக் கடவுள் உண்டு. ஆனால் பிரபஞ்ச சிருஷ்டிகர்த்தா எனும் கடவுள் இல்லை என்றார்.
1914இல் காலமான அயோத்தி தாசரின் சிந்தனைகள் பெரியாரை எட்டினவா என்று தெரியவில்லை. 1924-25-இல் அவர் சுயமரியாதை இயக்கம் கண்ட போது அயோத்தி தாசரின் சிந்தனைகள் புழக்கத்தில் இல்லாமல் போயிருக்கக் கூடும் அல்லது மறைக்கப்பட்டிருக்கக் கூடும்.
1899-இல் புத்தர்பிரான் மறைவின் 2443ஆம் ஆண்டு விழாவைத் தனது இல்லத்தில் கொண்டாடினார் சிங்கார  வேலர். புத்தர் பற்றி தான் எழுதியிருந்த சிறு நூல்களை அங்கு வந்திருந்தவர்களிடையே விநியோகித் தார். இதே விழாவில் அயோத்தி  தாசரும் பேசினார். ஆனால் 1920-லேயே மார்க்சியத்திற்கு மாறிவிட்டார் சிங்காரவேலர். அதில் காலூன்றிக் கொண்டுதான் பெரியாரின் சுயமரி யாதை இயக்கத்தோடு 1930களில் நல்லுறவு கொண்டிருந்தார். குடி  அரசு ஏட்டில் தத்துவக் கட்டுரைகள் எழுதிய அந்த மேதை 1946இல் இயற்கை எய்தினார்.
அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் எனும் அருமை யான படைப்பு பிராமணியவாதிகளால் கீழே அழுத்தப்பட்டிருந்த பூர்வ பவுத் தத்தை தோண்டி எடுத்து மீண்டும் மக்கள் முன்பு வைக்கிற அரிய சித்  தாந்த முயற்சி, அயோத்திதாசரைப் போல இவரும் சமூக நீதிக்கான தத்துவ - சமூக ஸ்தாபன வழிமுறை  யாகவே மூல பவுத்தத்தைத் தேர்ந்  தெடுத்தார். 1956 அக்டோபரில் தனது ஆயிரக்கணக்கான நேசர்களோடு அந்த மதத்தை தழுவினர். அந்த ஆண்டு இறுதியில் காலமானார்.
இந்த மூவரில் ஒரு பொதுமையாக பூர்வ பவுத்தம் இருந்தது. அதிலிருந்து சிங்காரவேலர் எப்போதோ விலகி மார்க்சியத்தைத் தேர்ந்தெடுத்திருந் தார். அயோத்திதாசர் ஆரம்பம் முதல் இறுதிவரை பவுத்தத்தில் உறுதி காட்டினார். அம்பேத்கர் தனது இறுதிக் காலத்தில் அதில் சங்கமித்தார்.
அம்பேத்கரின் இந்த மாற்றத்தை நெருங்கி நின்று கவனித்திருந்தாலும் பெரியார் அதைத் தன்னளவில் ஏற்க  வில்லை. சமூகநீதிக் களத்திலும் சரி, சித்தாந்த தளத்திலும் சரி மதமாற்றம் ஒரு சரியான தீர்வாகாது என்பதில் தெளிந் திருந்தார். அதே நேரத்தில் அவர் மார்க் சியத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் தனக்கென வகுத்துக் கொண்டே ஒரு தனிப்பாதையில் நடைபோடத் துவங்கினார்.
இதற்கான காரணத்தையும், அவரது தத்துவ நோக்கத்தையும் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப் பெரியாரின் சமகாலச் சித்தாந்த எதிரிகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவர், பெரியாரின் காலம் முழுக்க வாழ்ந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்  திரர். இன்னொருவர் ரமண மகரிஷி. இந்த அளவுக்கு நேரடியாக இல்லா  விட்டாலும் நடைமுறையில் இருந்த மற்றொருவர் காந்திஜி.
சகலமும் பிரம்மத்தில் அடக்கம் என்ற முறையில் உலகம் ஒரு மாயை எனச் சொன்ன ஆதிசங்கரின் தத்துவத்தைப் பின்பற்றுகிறவர்கள் சங்கராச்சாரிகள் என்பதை அறிவோம். அவர்கள் வருணா சிரமத்தை பின்பற்றுகிறவர்கள் என்ப  தையும் அறிவோம். இதில் அடிப்படை முரண் உள்ளது. உலகம் வெறும் மாயை என்றால் அதில் சாதிய - ஆணாதிக்க ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, பராமரிக்கிற வருணாசிரமத்தை மட்டும் நிஜமாகக் கடைப்பிடிப்பது ஏன் எனும் கேள்வி எழுகிறது. இதைச் சந்திரசேக ரேந்திரர் தீர்த்து வைத்த விதம் அலாதி  யானது.
அவர் கூறியுள்ளார் - பாவாத்வைதம் ஸதா குர்யாத்: க்ரியாத்வைதம் நகதஞ் சன என்று சொல்லியிருக்கிறது. அதா  வது எல்லாம் ஒன்று என்ற அத்வைதம், பாவனையில்தான் எப்போதும் இருக்க வேண்டும். காரியத்தில் ஒரு போதும் அல்ல என்று அர்த்தம். பிராமணியம் எனும் சமூகக் கட்டமைப்புக்கும் அத்  வைதம் எனும் தத்துவ நிலைப்பாட்டுக்கும் இடையே மோதல் ஏதுமில்லை என்றார். சொல்லப் போனால் முன்னதைக் காப்  பாற்ற பின்னது உதவுகிறது என்பதுதான் அவர்கள் நடைமுறையில் கண்டது. சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறவர்  களை மடக்கிப் போட, செயலற்றுப்போக வைக்க இவர்களது அத்வைதம் பயன்  பட்டது.
இதை ரமண மகரிஷி இன்னும் வெளிப் படையாகவே சொன்னார். 1916இல் திருவண்ணாமலையில் ஆசிரமம் க ண்டவர் 1950இல் காலமானார். உலகம் என்று தனியாக உமக்கு அயலாய் வெளியே ஏதும் இல்லை என்று நம்மை நம்பச் சொன்னார். இதன் பொருள் புறவுலகில் சீர்திருத்தம் தேவையில்லை. வேண்டியது எல்லாம் அகவுலக ஏற்பே என்பதுதான். அநீதிகளையும், அசிங்கங் களையும் அப்படியே ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவம் வர அத்வைதம் உதவுகிறது என்பதுதான் அவரது நிலைப்பாடு. ஆகவேதான், சமூக சீர்திருத்தவாதிகள் பற்றிய ஒரு கேள்விக்கு ரமணர் இப்படி பதில் சொன்னார் - முதலில் தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்வதில்  கவனம் செலுத்தினால் சமூக சீர்திருத்தம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்.
1920-40-களில் இந்திய அரசியல் வானில் உச்சத்தில் இருந்தவர் காந்திஜி என்பதை அறிவோம். கூடவே காந்தியம் எனப் பிற்காலத்தில் அறியப்பட்ட ஒருவித தத்துவ நோக்கையும் அவர் வெளிப் படுத்தி வந்தார். ஆரம்ப நிலையில், இந்து ராமராஜ்ஜியம் வருணாசிரமம், கீதை எனும் சொல்லாடல்களை எல்லாம்  பொது வாகப் பழைமைவாதிகளின் கண்ணோட் டத்திலிருந்தே பிரயோகித்து வந்தார். 1930களில் தீண்டாமை ஒழிப்பில் இறங் கிய பிறகுதான், இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு குரல் கொடுக்கத் துவங்கிய பிறகுதான் இந்தச் சொற்களுக்குத் தனது சொந்த வியாக்யானத்தைத் தரத் துணிந்தார். அதிலும் முழுச் சாதியத்திற்கு  எதிராகவே தான் இருப்பதாக அவர் சொன்னது கடைசி கட்டத்தில், அதனால்தானோ என் னவோ அவர் இந்துத்துவா குண்டுக்கு பலியானார்.
பெரியார் காலத்து இந்தியாவைப் பொறுத்தவரை நடைமுறை வாழ் நிலையிலிருந்தே சமூக மாற்றத்திற்  கான போராளிகளும் சரி, அதை விரும் பாத சனாதனிகளும் சரி, தங்களின் தத்துவ நிலைபாட்டை எடுத்தார்கள். பெரியாரும் அந்தபடியாகவே இது விஷயத்தில் பயணப்பட்டார்.
வகுப்புவாரித் தீர்மானம் எனப்பட்ட இடஒதுக்கீட்டைக் காங்கிரஸ் ஏற்காத நிலையில் அதிலிருந்து 1925-இல் வெளி யேறிய பெரியார் சுயமரியாதை இயக் கம் எனப்பட்டதைத் துவக்கினார், குடிஅரசு ஏடு நடத்தினார். செங்கற் பட்டில் 1929இல் நடைபெற்ற அந்த இயக் கத்தின் முதல் மாநாட்டில் சமூகநீதி தொடர்பாக பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டதைப் பலரும் அறிவர். அங்கே இப்படியொரு தீர்மானமும் போடப்பட்டது - மக்கள் பிறவியினால் உயர்வு, தாழ்வு உண்டென்ற கொள்  கையை இம்மாநாடு அடியோடு மறுப்பதுடன் அதை ஆதரிக்கும் மதம், வேதம், சாஸ்திரம்,  புராணங்களை எல்லாம் பொது ஜனங்கள் பின்பற்றக் கூடாது என்று தீர்மானிக்கிறது.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு என்றால் ஜாதி மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுகிற இந்து மதத்தைப் பின்பற்றக் கூடாது என்பதாகும். அதன் அங்கங்களாகிய வேதம், சாஸ்திரம், புராணங்களை மதிக் கக் கூடாது என்பதாகும்.  இதன் அர்த்  தம் அப்போதே இந்து மத மறுப்புக்குப் பெரியார் வந்துவிட்டார் என்பதாகும். மற்ற மதங்கள் பற்றிய அவரது  பார்வை என்ன?
1931-இல் விருதுநகரில் சுயமரி  யாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. அதில் இப்படி  யொரு தீர்மானம் - மனிதத் தன்மையை தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால் அப்படிப்பட்ட  எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டும் என்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராது என்றும் இம்மாநாடு அபிப்பிராயப்படுகிறது.
                                                                                                                                                                           விடுதலை-21.1.2013

பகுதி 2 
மனிதம் என்பதற்கு எதிராகவே எல்லாப் புனிதங்களும் உள்ளன என்ற முடிவுக்கு தன்னளவில் பெரியார் அப்போதே வந்துவிட்டது தெரிகிறது. எனினும், சுயமரியாதை இயக்கம் எனும் நேரடி சமூக நீதிப் போராட்ட  அமைப் பிற்கு சகல மதங்கள் ஒழிப்பு என்பது உடனடிக் குறிக்கோளாக இருக்க முடியாது என்கிற காரியார்த்தமான புரிதல் இருந்ததால் இது வொரு அபிப்  பிராயமாகவே அங்கே கூறப்பட்டி  ருந்தது எனலாம்.
பெரியார் வெகு விரைவிலேயே தத்துவத்தின் அந்தச் சிகரத்தைத் தொட்டார். அதுதான் 1933-இல் வெளி வந்த அவரின் மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம் எனப்பட்ட சிறு நூல். குடிஅரசு ஏட்டில் 1932-ல் சிங்காரவேலர் எழுதிய கட்டுரைகள் கடவுளும் பிரபஞ்சமும் எனும் தலைப்பில் வெளிவந்தது. அதன் தாக்கம் பெரியாரின் படைப்பில் உண்டு என்ற போதிலும் இது உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தனித்து நின்றது. Proactical Philosophy எனப்பட்ட நடைமுறைத் தத்துவ நிலையிலிருந்து Speculative Philosophy எனப்பட்ட சிந்தனா ரீதியான தத்துவ வெளிக்கு அவர் பாய்ந்ததன் வெளிப்பாடு இந்த நூல். கடவுள், ஆத்மா போன்ற புலன றிவு கடந்த (Metaphysics) விஷயங் களின் இருப்பு பற்றிய ஊடகங்கள் இதில் கேள்விக்கு உட்படுத்தப்பட் டிருந்தன.
பிறர் சொல்லிக் கொடுத்த பிறகு தான் கடவுள் நினைப்பு வருகிறதே தவிர தானாக அல்ல என்றார். நிஜம்தானே? பசி உணர்வு, அதற்காகத் தாய்ப்பாலைத் தேடும் உணர்வு பிறக்கும் போதே வந்து விடுகிறது. அதுபோல தன்னை பற்றிய நினைப் பையும் கடவுள் அப்போதே சொல்லி அனுப்புகிறாரா? இல்லையே. பிறந்த குழந்தை மட்டுமல்ல வளர்ந்த குழந்தை கூட பிறர் சொல்லித்தராமல் எதையும், யாரையும் கும்பிடுவதில்லை. இதிலிருந்தே கடவுள் இல்லை என்பது தெளிவாகிறதல்லவா என்றார்.
அப்படியென்றால் கடவுள் பற்றிய எண்ணம் எப்படி உருவானது? அது எண்ணம்தான், மனிதனின் கருத்துத் தான். மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவைகளுக்கு கடவுள் சக்தி என்று சொல்லி விடுகின்றான் என்று அதி முக்கியமானதொரு விஷயத்தை சர்வ சாதாரணமாகச் சொல்லிச் சென்றார் பெரியார். கடவுள் எனப்பட்டது மனிதனின் கற்பிதம் என்பதே உண்மை. ஆனால் இந்தக் கற்பிதம் எனும் உண் மையைக் கொண்டே அதன் இருப்பும் மெய்யானது எனும் திருகல் வாதத்தை முன் வைத்தார்கள்.
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதர் அன்செல்ம்  வைத்த வாதம் இது தான். கடவுள் எனப்பட்டவர் இருப்ப திலேயே முழுநிறை என்று வரையறை செய்யப்பட்டுள்ளார்.
அப்படியென்றால் அவரது இருப்பும் நிஜம்தானே, இல்லை யெனில் அவர் எப்படி முழுநிறை ஆவார், ஆகவே கடவுள் இருக்கிறார். இருப்ப  திலேயே  முழுநிறை என்று இவர்களாலே இலக்கணம் வடித்துக் கொண்டு, அதைக் கொண்டே அதன் இருப்பும் நிரூபணமாகிப் போனது என்றார்கள். கற்பிதத் தைக் கொண்டே நிஜம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். பெரியாரோ கடவுள் எனப்பட்டவர் முழுநிறை, எல்லாம் வல்ல வர் என்பதெல்லாம் மனிதனால் முடியாத வைகளுக்கு மனிதன் கொடுத்துக் கொண்ட பெயர்கள் என்றார். கடவுள் எனும் கற்பிதத்திற்கு அடிப்படை மனி  தனின் இயலாமையே தவிர வேறில்லை என்றார். கடவுள் எனும் கற்பிதத்தின் மூலம் நிரூபிக்கப்படக் கூடிய ஒரே விஷயம் அந்தக் கற்பிதத்தை உருவாக்கிய மனிதனன்றி வேறில்லை.
சர்வ சக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்தால் சர்வத்திலும் புகுந்து சர்வத் தையும் ஒன்று போலவே சிருஷ்டித் திருக்கலாமன்றோ? வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்பது தான் பதிலாகும் என்றும் கூறினார் பெரியார். பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதர் தாமஸ் அக்யுனஸ், கடவுளின் இருப்பை அய்ந்து வழிகளில் நிரூபிக்க முடியும் என்று முரசறைந்தார்.
அவையெல்லாம் பிரபஞ்சத்தின் இயங்கு நிலை மற்றும் உன்னதம் அல்லது குறை பாடு கண்டு அதிசயித்து, ஆகவே அதற் கொரு சிருஷ்டிகர்த்தா இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டதாகும். பிரபஞ்சத்தின் இயல்புநிலை என்று கருதினால் சிருஷ்டிகர்த்தாவின் தேவை இல்லாமல் போகிறது எனும் எளிய மெய்மையை அவர் உணரவில்லை.
அவர் சொன்ன அய்ந்து வழிகளில் ஒன்று உலகில் உள்ள வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அவரது கூற்று: நல்லது, உண்மை, மேன்மை போன்றவற்றில் ஜீவன்களிடையே கூடுதல், குறைச்சல் இருக்கிறது. கிட்டத்தட்ட அதுபோல இருக்கிறது என்றால் அது, அந்த உச்சபட்சம் இருக்கிறது என்று அர்த்தம். சூடு இருக்கிறது என்றால் மகாச்சூடு இருக்கிறது என்று அர்த்தம். எல்லாச் சூட்டுக்கும் உச்சபட்சமாக J.P இருப் பது போல அந்த உச்சபட்சம் இருக்க வேண்டும். அதையே கடவுள் என்கி றோம்.
இது விநோதமான வாதம். வேறு பாடுகள் இருப்பதாலேயே வேறுபாடு அற்ற ஒன்று இருக்க வேண்டும் எனக் கூறுகிற கோணல் வாதம். பெரியார் இந்த வாதத்தைத் திருப்பிப் போட்டார், நேர் செய்தார். வேறுபாடு அற்ற ஒன்று இருக்கிறது என்றால், சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சமத்துவமும் உள்ள ஒன்று இருக்கிறது என்றால் அது சகலத்தையும் ஒன்றுபோல ஆக்கி யிருக்க வேண்டியதுதானே? ஏன் ஆக்கவில்லை?  ஏனிந்தக் குழப்ப வேலை? ஏன் ஒருபுறம் செல்வம் குவி கிறது. மறுபுறம் வறுமை மண்டுகிறது? ஏன்  ஒருபுறம் ஆதிக்க சாதியினர் கொட்ட மடிக்கிறார்கள், மறுபுறம் ஒடுக்கப்பட்ட சாதியினர் நொந்து கிடக்கிறார்கள்? ஏன் ஒருபுறம் ஆணா திக்கவாதிகள் உருமுகிறார்கள். மறுபுறம் பெண்கள் அடங்கிக் கிடக்கிறார்கள்? இப்படி வேறு வேறாகச் சமுதாயம் இருப்பதிலிருந்து சர்வ சக்தியும், சர்வவியாபகமும், சமத்துவமும் உள்ள கடவுள் இல்லை என முடிவுக்கு வருவதுதான் நேர்வழி வாதமாகும், சரியான தர்க்க நியாயம் ஆகும் என்றார் பெரியார்.
                                                                                                                                                                            விடுதலை-22.1.2013

Sunday, October 14, 2012

புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (2)


பேராசிரியர் அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி, சென்னை.

கருவுற்றிருந்த மாயாதேவியின் கனவில் ஒரு யானை அவரது வயிற் றுக்குள் புகுவதைப் போலக் கண் டாராம். கனவு நிமித்தம் என்னவென்று வினவ கனவியல் நிபுணர்கள் பிறக்கப்போவது ஒரு சக்கரவர்த்தி யாகவோ அல்லது ஒரு புத்தராகவோ ஆகப்போகிறது என்று கூறினார்களாம். பௌத்த பக்தர்களுக்கு கருவிலே நுழைந்த யானை புனிதப் பொருளா யிற்று. கஜேந்திரன், கஜபதி பெயர்களின் மூலமும் அதுவே.
அது மட்டுமா?
பிறந்தவுடனேயே அக்குழந்தை தனது பாதங்களால் ஏழு அடிகள் வைத்து முன் சென்று பின்வந்ததாம். அந்த தெய்வீகக் குழந்தை எடுத்து வைத்த பாதங்கள் பின்னர் தர்ம பாதங் களாகின. புத்தரை ஒரு விஷ்ணு அவ தாரமாகப் பார்க்கும் வைஷ்ணவர்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு தர்ம பாதம் என்ற பெயரைச் சூட்டுவதுண்டு.
உலகின் துன்பத்தைப் போக்கும் மார்க்கத்தைத்தேடி சித்தார்த்தன் என்னும் அரசன் அல்லது ராஜன் தனது அரசையும், குடும்பத்தையும் தியாகம் செய்து துறவுக் கோலம் பூண்டதால் அவருக்குத் தியாகராஜன் என்னும் பெயரையும் பௌத்த மரபுகள் தந்தன. ஆனால் அதே பெயர் இன்று அது பிராமணீயமாக்கப்பட்ட சிவனைக் குறிக்கிறதாம். பாற்கடலில் கடைந்த போது முதலில் தோன்றிய ஆலகால விஷத்தால் தேவர்கள் சாகாமல் காப் பாற்ற, அதனை சிவனே விழுங்கினராம். உடனிருந்த பார்வதி பதறிப்போய் தன் பர்த்தாவின் குரல்வளையை இறுகப் பிடித்து முறுக்கியதால் அந்த ஆல காலவிஷம் சிவன் தொண்டையிலேயே நின்று நீலகண்டன் ஆனாராம் நீலகண்டன் சரி. எதையும் தியாகம் செய்யாமல் தொண்டையிலேயே விஷத்தைத் தேக்கி கொண்ட பரமசிவன் ஈசன் தானே? எப்படி ராஜன் ஆக முடியும்?
வேத விநாயகர் அதாவது பிராமணீய விநாயகர் தோன்றுவதற்கு முன்னே விநாயகம்-கணபதி-விக்னேசுவரன்-தியாக ராஜன் போன்ற வழி படு பெயர்கள் இருந் தன. அவையாவும் புத்தனைக் குறித்தன. ஏதாவது முதலில் இருந்தது புத்த விநாயகர், புத்த கணபதியே.
புத்தர் தமது வாழ் நாளில் கடவுளை ஏற்றதில்லை. தம்மைக் கடவுளாக்கு வதையும் ஒப்புக் கொண்டதில்லை.
அவரது மறைவுக்கு அவரது நினைவைப் போற்ற விரும்பியவர்கள் அவரது சின்னங்களையே பயன்படுத் தினர்.
யானை ஏற்கெனவே புனிதமாக்கப் பட்டு விட்டது.
புத்தர் தெளிவடைந்தது அரச மரத் தடியில் அதாவது போதிமரத்தடியில், அதனால் அரசமரம் அல்லது போதி மரம் வழிபாட்டுப் பொருளாயிற்று. அரசனாயிருந்த புத்தன் ஞானம் பெற்ற மரம் என்பதால் அது அரசமரம், போதம் (ஞானம்) பெற்ற மரமென் பதால் போதிமரம். அரச மரத்தடிகளில், அதுவும் குறிப்பாக ஆற்றங்கரை அரச மரத்தடிகளில் (புத்தர் தியானம் செய்து ஞானம் பெற்ற அரசமரம் நிரஞ்சனா நதிக்கரையில் இருந்தது) யானை உருவம் வைக்கப்பட்டால் அது மும்மடங்கு சிறப்பு பெறுவதாக ஆயிற்று.
புத்தரைக் குறிக்கும் மற்றொரு சின்னம் சக்கரம். சாரநாத்தில் புத்தர் ஆற்றிய முதல் பேருரை தம்ம சக்க பவத்தன (தர்ம சக்கர பரிவர்த்தன அதாவது, புத்தநெறி உலகெங்கும் பரவுவதற்காக சக்கரம் போல் இயங்கத் துவங்கிற்று என்று பொருள்) என்பர். சக்கரம் புத்தநெறியைக் குறிக்கலாயிற்று. (அதனால்தான் சுதந்திரம் அடைந்த பின்னர், அரசியலமைப்பு சபையின் உட்குழு தேசியக் கொடியில் அசோக சக்கரம் அதாவது, பௌத்த சக்கரத்தை வைப்பது என்று முடிவெடுத்தபோது இந்து மகாசபை போன்ற இந்துத்துவ வாதிகள், காந்தியின் ராட்டையை வேண்டுமென்றாலும் போட்டுக் கொள் ளுங்கள். அசோக சக்கரம் தேசியக் கொடியில் இடம்பெறக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்).
வேறொரு பௌத்த சின்னம் பாதங்கள் (தர்ம பாதம்) பௌத்த துறவிகள் இந்தியாவெங்கும் பரவினர். பரவிய இடங்களிலெல்லாம் யானை உருவங்களும், அரச மரங்களும், தர்ம பாதங்களும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாயின.
இமயத்திலிருந்து கன்னியாகுமரி வரை பாறைகளில் பொறிக்கப்பட்ட பாதங்களைக் காணமுடியும். அரச மரத்தடிகளிலெல்லாம் யானை உருவங்கள் வைக்கப்பட்டன.
புத்தம் மதமானது, மூடநம்பிக்கைகள் பெருகின, நேர்த்திக்கடன்களும் பெருகின.
பக்தி இயக்கம் என்ற போர்வையில் பிராமணீயம் பௌத்தத்தை வேரறுக்க சைவ-வைணவ  வெறிகளைப் பரப்பிய போது பல பௌத்த-சமணக் கோயில் கள் பிராமணீயமாக்கப்பட்டன. கொடுங்கலூர், சபரிமலை, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோயில்கள் மதமாற்றம் செய்யப்பட்டன.
திகம்பர அருகதர் பழனியாண்டவரானார். ஜேஷ்டாதேவி என்னும் மூத்தோள் மூதேவி என இழிவுபடுத்தி விரட்டப் பட்டாள்.
யானை உருவங்களுக்கு தொப்பையும், சுணங்கயி கைகால்களுடனான மனித உடல்கள் தரப்பட்டு தொந்தி விநாயகராக்கினர்.
புத்தர் பிறந்த விசாக நட்சத்திரம், கார்த்திகையில் பிறந்தவரெனப்படும் முருகனுக்கு சிறப்பு நாளாயிற்று.
புத்தரது தர்ம சக்கரம், விஷ்ணுவின் சக்கராயுதமாயிற்று.
வீடுகளில் போற்றப்ட்ட பௌத்த யானை உருவங்கள் களிமண், சாணி உருவாங்களாகின. முற்றத்தில் வைக்கப் பட்டவை பின்னர் நீரில் கரைக்கப்பட் டன. புத்தரின் மீதான பிராமணீய வெறுப்பு விநாயகரைச் சாணியாக்கிற்று, கணிமண்ணாக்கிற்று. கொம்பை ஒடித் தது, தெருவோரச் சிறு தெய்வமாக் கிற்று, அழுக்கிலிருந்து பிறந்தவராக கதை கற்பித்தது. கோமாளித்தனமான எலி வாகனம் தந்தது. ஞானத்திற்காக ஆற்றங்கரை அரசமரத்தடியில் தியானம் செய்த புத்தர் அழயான பெண்களை எதிர்பார்த்து ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளவராகச் சித்தரிக்கப்பட்டார்.
புத்தரது தர்ம பாதங்கள் ராம பாதங்களாகவும், தேவி பாதங்களாகவும், பீம-அனுமன் பாதங்களாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இந்தியாவெங்கும், மக்களிடையே பிரபலமாக இருந்து வந்த புத்த யானை - புத்த அரச மரம் - புத்த தர்ம சக்கரம் - புத்த தர்மபாதம் போன்றவற்றை இழிவுபடுத்தி, ஓரங்கட்ட முயன்ற பிராமணீயம், அது வெகுமக்களிடம் எடுபடாது எனத் தெரிந்த பிறகு அவற்றையே பிராமணீயப்படுத்தினர். புத்த சின்னங்களைத் திரிபு செய்தே புத்தத்தின் தர்மத்தை அழித்தனர்.
இதற்கு பக்தி இயக்கம் வசதியாக இருந்தது.
கணாபத்தியம் உருவானது; கணபதி சிவனின் அல்லது அவரது மனைவியின் மகனானார் கந்தனின் தமையனானார்.
தெற்கே கட்டை பிரம்மச்சாரியாக வும், வடக்கே கலியாண விநாயகராகவும் இரட்டை வேடம் அணிந்தார்.
வேத எதிர்ப்பு - கடவுள் எதிர்ப்பு - சனாதன எதிர்ப்பு புத்த விநாயகர் வேத விநாயகரானார்;பிராமணப் பூசகர்களின் வடமொழி மந்திரங்களில் பூணூலுடன் புல்லரித்துப் போனார்.
புத்த எதிர்ப்பு வெறியர்களால் ஒழிக்கப்பட்ட ஒரு கொம்பு, வியாசரும் படிக்கும் மகாபாரதத்தை, அவரது எழுத்தராக இருந்து விநாயகர் பனையோலைகளில் எழுதுவதற்கான எழுத்தாணி என்ற புண்ணியம் தரப் பட்டது. அகத்தியரின் கமண்டலத்தை காக்கை உருவில் வந்து கவிழ்த்து காவி ரியை உற்பத்தி செய்த மகாத்மியமும் வேத விநாயகருக்கு அளிக்கப்பட்டது.
வைணவர்கள் ஒரு படி மேலே சென்று, வைதீகத்தை ஏற்காத அசுரர் கூட்டத்தில் மித்திரபேதம் செய்வ தற்காகவே நாத்திகம் பேசும் புத்த அவதாரமாக விஷ்ணுவின் தசாவதாரப் பட்டியலில் இடம் பெறச் செய்தனர்.
அழிக்க முடியாமலிருந்த புத்தர் நினைவுகளை, சின்னங்களை பிரா மணீயம் அணைத்து, போற்றி, திரிபுகள் செய்து, சனாதனத்திற்குச் சாதக மாக்கியது.
இத்தகை கலை-பண்பாட்டு-தத்துவ மோசடிகளை நமது அறிவாளர்கள் உரிய வண்ணம் புரிந்துள்ளனரா?
பக்திகால சைவர்களும் விஷ்ணு பெரிதா, சிவன் பெரிதா போராட்டத் தில் ஈடுபட்டபோது உருவான ஒரு கதை சிவனின் அடி முடியை விஷ்ணு வும் பிரம்மனும் தேடிய ஒன்றாகும். பன்றி உருவிற் சென்ற மாலும், அன்னப் பறவை உருவில் முடி தேடிச் சென்ற பிரம்மனும் தோல்வியடைந்தனர் ஆனாலும், பிரமன் தான் முடியைக் கண்டுவிட்டதாகப் பொய் சொன்னார், தாழம்பூ பொய்ச் சாட்சியம் கூறியது. விளைவு, பிரமனுக்குக் கோயில் இல்லை என்று ஆயிற்றாம். மற்றொரு சிவக்கதை சைவர்கள் திருப்திபட்டுக் கொள்வதற் காக உருவாக்கப்பட்ட கதை பிரமனின் அய்ந்தாவது தலையை சிவபெருமான் கிள்ளியெறிந்த கதையாகும். பிரணவ மந்திரம் தெரியாத பிரமன் முருகனிடம் குட்டுப்பட்ட கதையும் உள்ளது. பிரம்மனுக்கு கோவில் இல்லாததற்கு சைவ சிவனின் சாபம்தான் காரணமா? சைவர்கள் தங்களைத் தாங்களே சொறிந்துகொள்ள மட்டுமே இக்கதைகள் பயன்படும். உண்மை நிலவரம் வேறு. சங்கரர் உருவாக்கிய சண்(ஆறு) மதங்களில் பிரம்மன் ஏன் தவிர்க்கப்பட்டார். மற்ற கடவுளர்களை பிராமணர் அல்லாத மற்றவர்களுக் காகப் பட்டியலிட்டவர். வேதம் கூறும் பிரம்மனுக்கு ஏன் ஒரு வழிபாட்டு அடையாளத்தைத் தரவில்லை. பிரம் மன் அல்லது பிரம்மம் பிராமணர் களுக்கே உரியவன். பிராமணனே பிரம்மமாகிறான். அவனை மற்றவர்கள் நெருங்காமல், அவனது தனித்தன்மை பாதுகாக்க வேண்டும், பிராமணீய புனிதத்தை, தனித்துவத்தை நீர்த்துப் போகச் செய்யக்கூடாது என்பதற் காகவே சண்மத (சைவம்-வைஷ்ணவம்-சாக்தம்-சௌரபம்-கௌமாரம்-கணபத்யம்)ப் பட்டியலிலிருந்து பிரம்மனை விலக்கி வைத்தனர். ஆனாலும், ஆகமத்திற்குரிய கோவில் களில் பூசகர் உரிமைகளையும், அரசவை யாகங்களுட்கான யக்ஞ உரிமை களையும், ஸ்மிருதி-ஸ்ருதி விளக்க உரிமைகளை ஏகபோகமாக பிராமணர் களும் வைத்துக்கொண்டனர். இந்த ஆறு மதங்களும், வேத-பிராமண-யாக முறைகளும் முதன்மைப்படுத்திப் பாது காத்தன. சங்கரக் கதியில் பிராமணனும் பிரம்மமும் தனியாகவும், உயர்வாகவும் வைக்கப்பட்டனர். சண்மதக் கடவுளர்களுக்காவது சுயமரியாதை இருக்க வேண்டாமா?
எது எப்படியாயினும் ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள்!
18 புராணங்களில் விநாயகருக்கு என்று எதுவுமில்லை
18 உபபுராணங்களில் கணேசனுக்கு ஒன்றுமில்லை
ஆகமங்கள் சிவனுக்கும், விஷ்ணுவுக் கும், சக்திக்கும் தானே தவிர விநாய கருக்கு என்று எதுவுமில்லை.
புத்த மூலத்தைக் கொண்டிருந்த விநாயகருக்கு வைதீகம் தந்த மரியாதை இதுதான்.
பிறரது உழைப்பை மட்டுமல்ல, பண்பாட்டையும், நம்பிக்கையையும், படைப்பாற்றலையும், கற்பனைகளைக் கூட பிராமணீயம் மோசடியாக தனது லாபத்திற்காக மோசடியாக எடுத்து திரிபு செய்யும் என்பதற்கு விநாயகர் விவகாரம் மற்றுமோர் எடுத்துக்காட்டு.
எதுவும் அற்புதங்களாகத் தரப் பட்டால், கடவுளாக்கப்பட்டால் விபரீதவிளைவுகளே ஏற்படும். புத்தரும் அதற்கு விதிவிலக்கல்ல.
பிராமண மோசடியிலிருந்து உண்மைகளை வெளிக்கொணர பகுத் தறிவு வரலாற்றாளர்கள் இனியும் பணியாற்றுவர் என எதிர்பார்க்கிறோம்.

Wednesday, March 14, 2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 3

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்

இந்தியா என்பது பெரிய நாடு. இதில் பல திறப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்றா லும் இந்நாட்டில் இரண்டு பெரிய கலாச்சாரங்களே அடிப் படைக் கலாச்சாரங்களாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் பெரிதும் முரண்பட்ட கலாச்சாரங்களாகவும்  இருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்று ஆரியச் கலாச்சாரமாகும். மற் றொன்று திராவிடக் கலாச்சார மாகும். வடநாட்டில் பெரும் பாலும் ஆரிய கலாச்சாரமும், தென்னாட்டில் பெரும்பாலும் திராவிட கலாச்சாரமும் நிலவி வருகிறது.
இவற்றுள் ஆரியக் கலாச் சாரம் சுரண்டலையும் ஏமாற்று தலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதைப் பின் பற்றி வருபவர்கள் தமது சுரண்டு தலுக்காக அந்நிய நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டு முயற்சி செய்து வரு கிறார்கள். திராவிட கலாச்சாரம் சமதர்மத்தை, சோஷலிசத்தை அடிப்படை யாகக் கொண்டதாக இருப்பதால் அதைப் பின்பற்று பவர்கள் பிறர் சுரண்டலை ஒழித்துச் சுதந்திரமாக வாழ விழைகிறார்கள். எனவேதான் பிரிந்து வாழ நினைக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தமிழ்நாடு மிகமிக உயர்ந்திருந்தது. பிறகு ஆரியத்தின் சுரண்டலுக்கு ஆட்படவே இன்று மிகமிகத் தாழ்ந்துவிட்டது.
சுரண்டலுக்கு உள்ளாக்கிய வடநாடு மிகமிக உயர்ந்து நிற்கின்றது இன்று.
திராவிடம் தனித்து வாழமுடியுமா? என்று இன்று  கேட்பது போல் அன்றும் கேட்டார்கள். இன்று சிலர் கூறுவது போலக் கேரளம் கேட்கவில்லை, கன்ன டம் காது கொடுக்கவில்லை, ஆந்திரம் ஆதரிக்கவில்லை. அப்படியிருக்கையில் திராவிடம் என்ற பேச்சு எதற்கு? அதுவும் இப்போது எதற்கு என்று கேட்பது போல அன்றும் கேட்டவர்கள் இருந்தனர். எனவே அவர்களுக்கும் திராவிடர் கழகமோ தந்தை பெரியாரோ பதில் கூற வேண்டாத அளவுக்குத் திரு.வி.க. கேள்வியையும் கேட்டுப் பதிலையும் கூறி னார். இத்தகைய அருமையான விளக்கம் கூறிய திரு.வி.க. இன்றும் திராவிடர் மனத்தில் இருக்கிறார். எண்ணத்தில் என்றும் நிறைந்து நிற்கிறார்.
இன்று சிலர் கேட்கிறார்கள், திராவிட நாடு பிரிந்தால் தனித்து வாழமுடியுமா? என்று. நிச்சயமாகத் தனித்து வாழமுடியும். இன்றைய நிலையைக் காட்டிலும் பன்மடங்கு உயர்நிலையில் வாழ முடியும் என்று அதி திடமாகச் சொல்வேன். இந்நாட்டில் எதுதான் இல்லை? மலைகள் இல்லையா?  இருபுறமும் கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் இருக் கின்றனவே. செழிப்பான நெல் விளையும் நிலப் பரப்பில்லையா?  எரிமலைச் சாம்பல் நிரம்பிய இயற்கை வளம் பொருந்திய மண்ணல்லவோ இந்நாட்டு மண். அதில் என்ன விளையாது?  ஆறுகள் இல்லையா?  இந்நிலப் பரப்பை வளம் செய்ய, அதற்கும் குறைவில்லாத வகை யில் கோதாவரியுண்டு, கிருஷ்ணா வுண்டு, காவிரி உண்டு, பாலாறு உண்டு, பெண்ணையாறு உண்டு, இன்னும் எத்தனை வேண்டும்?  உலோகங்கள் இல்லையா?  கோலார் தங்க வயல்கள் எந் நாட்டைச் சேர்ந்தவை?  அய்தராபாத்தி லுள்ள மணிமலைகள் எந்நாட்டைச் சேர்ந்தவை? அந்த மணிமலைகளை வெட்டி எடுப்போமானால் இந்த அகண்ட உலகத்தையே விலைக்கு வாங்கிடலாமே, இந்நாட்டில் என்ன இரும்புக்குத்தான் குறைவா?  கவலையோடு பூமியைத் தோண்டிப் பார்த்து ஆராய்ச்சி நடத்தி வந்தால் இந்நாட்டில் எதுதான் கிடைக் காது என்று நினைக்காதீர்கள். எல்லாம் கிடைக்கும்.! கிடைக்காவிட்டால்தான் என்ன?  மற்ற மேலை நாடுகளைப் போலக் கிடைத்த உலோகத்தைக் கொண்டு  நமக்குத் தேவையான உலோகத்தைச் செய்து கொள்ள முடியாதா?  எல்லா உலோகப் பொருள்களும் ஒரே மூல தாதுப் பொருள்களிலிருந்து தான் உண்டா கின்றன. எனவே ஒன்றோடு ஒன்றைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது ஒன்றிலி ருந்து மற்றொன்றைப் பிரிப்பதன் மூலமோ எப்பொருளையும் உண்டாக்கிக் கொள்ள முடியும் விஞ்ஞான முறைப்படி என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாம் என்ன சோடைகளா? ஒரு பொருளை வேறு நாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்க.
இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்த நாட்டில் வாழும் எங்களுக்குப் பிழைக்கும் வழிதானா தெரியாது? வாணிபம் செய்யத் தெரியாதா?  அல்லது துறைமுகங்கள்தான் இல்லையா?  எங் களுக்கு  முதன் முதலாகக் கப்பல் வழி வாணிபம் நடத்தியவர்கள் திராவிடர் களாயிற்றே. உலகம் உணரா முன்னமே உள்நாட்டு நகரத்திற்கும் கடற்கரையோர நகரத்திற்கும் வெவ்வேறு பெயர் கொடுத்து வழங்கியவர்களாயிற்றே தமிழர்கள். பட்டினமும், பட்டணமும் என்கிற இரு சொற்கள் எத்தனையோ காலமாகத் தமிழ்நாட்டில் வெவ்வேறு பொருளுடன் வழங்கி வருகின்றனவே. ஆங்கிலம் வந்த பிறகு இவ்வேற்றுமை கூடச் சிலருக்கு மறைந்து போயிருக்கும். சென்னைப் பட்டினம் என்பதற்குப் பதிலாக சென்னைப் பட்டணம் என்று தானே பலர் வழங்கி வருகின்றனர். ஹிந்தி வருமுன்னரே இந்நாடென்றும் ஹிந்தி வந்த பிறகு என்னவாகும் என்று சொல்லவும் வேண்டுமோ?  இன்று விசாகப்பட்டினம் என்கிற ஒரு இடத்தில் தான் கப்பல்தளம் இருக்கிறதென்றால் திராவிட நாடு பிரிவினையானதும் எத்தனையோ விசாகைகளைக் காண முடியுமே.
எத்தனையோ வழிகளில் இந்நாட்டில் தலை விரித்தாடிக் கொண்டிருக்கும் தரித்திரத்தை எங்களால் போக்கிக் கொள்ள முடியுமே. தனித்தியங்கும் நாடுகளைப் பிரித்துத் தனியாக இயங்கும்படிச்செய்து ஏதோ சொற்ப அதிகாரங்களை மட்டும் மேலெழுந்த வாரியாக மத்திய சர்க்காருக்கு வைத்துக் கொள்வதைவிட்டு இமயம் முதல் குமரி வரை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டுமென்று பாடுபட்டு வரு கிறார்களே?  அது சாத்யமா?  யோசித்துப் பார்த்தார்களா?  வங்காளத்தை ஒன் றாக்க முடிகிறதா?  அய்க்கிய மாகாண மக்களுக்குச் சமாதானம் சொல்ல முடிகிறதா?  எங்கே இருக்கிறது ஒற்றுமையும் ஒருமைப்பாடும். காங்கிரஸ் காரர்களிடையேயாவது காணப்படுகிறதா ஒருமைப்பாடு?  இவர்கள் கூறும் இந்தியாவில் ஒருமைப்பாடு இருக்கிறதா?
                                                                                                                                                                        - விடுதலை 14.3.2012

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 2

- முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்
திராவிட என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சிச் சரித்திரத்தில் திராவிடர்களைப் பற்றிய குறிப்பு காணப்படு கிறது. ஸ்மிருதியிலும், பஞ்ச திராவிடம்  என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழகம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு மராத்தி தேசம் ஆகிய அய்ந்து திராவிடங்கள் குறிப்பிடப்பட்டி ருக்கின்றன. மலையாள தேசத்தில் பிறந்து வளர்ந்து வடமொழி கற்று சவுந் தர்யலகரி என்ற சமஸ்கிருத நூல் எழுதிய சங்கராச்சாரியாரும் அப்புத்தகத்தில் திராவிடர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள் ளார். எல்லையப்பர் அவர்களின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறிய லாம் என்று கூறுவதோடு,
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்கின்ற தமிழ்வாணரால் எழுதப்பட்ட திராவிட பிரகாசிகா என்கின்ற நூலிலும் திராவிடம் என்கிற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப் பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்றும் இதுவரை எவரும் சுட்டிக் காட்டாத புதிய தகவலைக் கூறுகிறார். சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க நூறாவது ஆண்டுத் தொடக்க விழாவில் தலைவர் கலைஞர் இரவீந்திரநாத் தாகூரின் ஜனகண பாடலில் திராவிட என்ற சொல்லாட்சி இடம் பெற்றிருப்பதைப் பாடிக் காட்டினார்.
திரு.வி.க.வோ விடுதலை பெற்ற அடுத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் 1949இல் தமது உரையில் இன்று இந்நாட்டின் தேசியப் பாட்டாக வழங்கி வரும் ஜனகணமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உட்கல வங்கா என்ற வரியில் திராவிட நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்  என்று கூறுகையில் சிந்திப்பவர்கள் கருத்து ஒரே திசை நோக்கிச் செல்லும் என்பது சான்றாகிறது.
மேலும் அவர் அழுத்தந்திருத்தமாக, திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதாரங்களே போதும் என நினைக்கிறேன். இத் திராவிட நாட்டுக்கு எல்லை குறிப்பது மிகச் சிரமமான காரியம் அல்ல. சரித்திரமே சுலபமாக நிர்மாணித்துவிடும் எந்தெந்தப் பகுதிகள் திராவிட நாட்டைச் சேர்ந்தவை என்று.
எனவே திராவிடம் என்று ஒரு பகுதி இருந்து வருகிறது என்பது பற்றியோ அல்லது அதன் எல்லையைக் குறிப்பிடு வது பற்றியோ யாரும் நம்மோடு சர்ச் சைக்கு வர முடியாது என்று எல்லை குறித்த சர்ச்சைக்கும் கூட முற்றுப் புள்ளி வைக்கிறார்.
நம் திராவிடப் பண்பாடு வேறு, ஆரியப் பண்பாடு வேறு - அடிப்படையிலேயே ஒட்டாது. இரண்டுக்கும் உள்ள தொலைவு அதிகம் என்று கூறும்போது, தாம் தூம் தையாதக்கா என்று சில ஆரிய, வைதீக ஆதரவாளர்கள் குதி, குதியென்று குதித்து, ஆரியமாவது, திராவிடமாவது, எல்லாம் ஒன்று கலந்து விட்டது என்றெல்லாம் கூறி வருவதை அறிவோம்.
அவர்களுக்கு இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னே - அருமை யான விளக்கத்தைத் தமிழ்த் தென்றல் கூறி ஆரியம் வேறு, திராவிடம் வேறு என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.
நாம் கூட ஆரியர்களில் சிலர் - சில நடிகர்கள் - பார்ப்பனர்கள் - பகுத்தறிவு பேசுவதுகண்டு, பூணூல் மேல் வெறுப் பாகப் பேசுவது கண்டு ஏமாந்துவிடுவது உண்டு. எனவேதான் தமிழர் தலைவர் ஆசிரியர், எந்தப் பார்ப்பானாவது, கட வுள் மறுப்புக் கொள்கையைக் கூறினால் ஏமாந்துவிடாதீர்கள். ஏனென்றால் அவனுக்குக் கல்லிலும், செம்பிலும் கடவுள் இல்லை என்பது நம்மைவிட அவனுக் குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால் வகுப்புரிமைக் கோட்பாட்டை இடஒதுக் கீட்டினை ஏற்கிறானா என்று பாருங்கள். அப்போது தெரியும் அவன் உண்மையான ஆரியனா, திராவிட ஆதரவாளனா என்று தெரியும் என்று கூறுவார்.
சென்னையில் நடைபெற்ற திராவிடர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் உரை யாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று கண்டறிய வேறோர் அளவு கோலை எடுத்து வைத்தார். பிறப்பொக் கும் எல்லாவுயிர்க்கும் என்ற கோட் பாட்டை எவனொருவன் ஏற்கிறானோ அவன்தான் திராவிடன். பிறவியில் வேற் றுமை பாராட்டி நிற்பவன் ஆரியன் என்று.
இவ்வாறான சிந்தனைகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மவர்களுக்கு அளவு கோல் வைத்திடத் தோன்றியுள் ளது. ஏன் தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூற வேண்டியதற்கும் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டார்.
தமிழ் பேசுவதாலேயே, தமிழ் நாட்டில் பிறந்ததாலேயே திராவிடன் என்று கூறுவோமேயானால் கல்கியும், கவிஞர் வாலியும் கூடத் தமிழர் என்று கூறும் இடம் உண்டு. ஆனால் திராவிடர் என்று தங்களை அவர்கள் கூறுவார்களா? திருஞான சம்பந்தர் திராவிட சிசு என்று அழைக்கப்பட்டாலும், இவர்கள் அழைத் துக் கொள்ள மாட்டார்கள்.
தந்தை பெரியார் நம்மை ஏன் பார்ப் பனர் அல்லாதார் என்று எதிர்மறையாக அழைத்துக் கொள்ள வேண்டும்?  சூத் திரர் எனும் இழி மொழியால் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திராவிடர் என்று வகுத்தார் என்பது வரலாறு. அதனாலேயேதான் சுயமரி யாதைத் திருமணம் எனும் பார்ப்பனர் மேற்கொள்ளாத, பார்ப்பனர் உயர்வாகக் கருதிக் கொள்கின்ற பார்ப்பனீயத் திருமண முறை ஒழித்த திருமண ஏற் பாட்டை வலியுறுத்தி லட்சக் கணக்கில் அவற்றைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அத்திருமணங்களை ஏற்பு செய்து அண்ணாவின் ஆட்சி சுயமரி யாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் நிறைவேற்றியபோது அகம் மகிழ்ந்து தம் கனவு நிறைவேறியது கண்டு வாழ்நாளிலேயே கண்டு மகிழ்வுற்றார். இந்தப் பின்னணியில் அன்றே திரு.வி.க. இரண்டு பண்பாடுகளும் எதிர் எதிரானவை. ஒன்றுக் கொன்று ஒட் டாதவை என்று தெளிவுபடுத்தி இரண் டையும் வேறுபடுத்திக் காட்டும் அருமை யான விளக்கத்தை அளித்தது இன்றும் நமக்கு ஆரியப் பண்பாடு எது?  திராவிடப் பண்பாடு எது? என்று பகுத்துப் பிரித்துக் காட்டுகிறது.
                                                                                                                                                                            - விடுதலை 13.3.2012