Wednesday, December 22, 2010

ஞான சூரியன் - 23

என்பன முதலிய வேத வாக்கியங்களில் இதே கருத்து அடங்கியிருக்கிறது. இக்காலத்தில் பெண் மக்கள் இத்தகைய விதிகளை அறியாதவர்களாயிருப்பது ஸ்திரீ சூத்ரௌ நாதீயேதாம் என்ற விதியில் கல்வி பயிலப் பெண்களுக்கு அதிகாரமில்லை என்று சொல்லியிருப்பது, இந்து ஆண் மக்களின் அதிர்ஷ்டவசமென்றறிய வேண்டும். இக்காலத்தில் நடைபெற்று வருகிற விவாக கருமங்களையும் அவைகளுக்குரிய மந்திர - தந்திரங்களைக் குறித்தும் நன்றாக ஆராய்ச்சி செய்யவேண்டும். விரிக்கிற் பெருகும்.
நான்கு வருணத்தினரின் பெண்களையும், பிராமணன் விரும்பியவாறு மணம் முடித்துக் கொள்ளலாம் என்று ஸ்மிருதிகளிலும், அங்ஙனமே நடந்து வந்திருப்பதைப் புராணங்களிலும் அப்படியே மலையாளத்தில் இப்போதும் நடந்து வருவதையும் பார்க்கலாம். மணப் பெண்களால் அனுஷ்டிக்கத் தகுந்த கருமங்களுள் ஒன்று 2ஸ்பத்நீ பாதனம் என்பதாகும். பதினாறாயிரத்தெட்டுப் பெண் களுக்குக் கணவனான கடவுளை 3அவனை வழிபடுகிற ஒருவனை மணந்துகொள்ள நினைக்கிற கன்னிகை ஆபிசாரத்தி(சூனியம் முதலிய மந்திர வித்தை)யினாலே யினும் தனது சக்களத்திகளை எதிர்த்து நிற்பதில் குற்றம் ஒன்றுமில்லை. 4ஆரோஹோரும் 1. இம்முறை உடற்கூறும், உடல் தொழிலும் நன் குணர்ந்தவர்களால் வகுத்தது. இதனால் உடல் வலிவு, புத்திக் கூர்மை உள்ள புதல்வரைப் பெறலாம். இல்லையேல் பலவகையிலும் கெடுதலே (பிஞ்சில் பழுத்தது)
2. இச்சொல்லிற்குச் சக்களத்தியைத் துன்புறுத்துதல் என்பது பொருளாகிறது.
3. கிருஷ்ணன்.
4. பிறப்பிலாவது இடையிலாவது ஆண் தன்மை இல்லாமை.
தொடைமீது ஏறு முதலிய வேதமந்திரங்களைக் கற்றுக் கொள்ளுகிற மாணக்கன் குருவினிடத்தில் பணிவுடன் நடந்து கொள்வானானால், அது இக்காலத்தில் அர்த்த ஞானமில்லாத (பொருளையுணராத) அத்தியயனத்தினால் உண்டான நன்மையேயாகும். இத்தகைய மந்திரங்களும் அவைகளின் பொருளும் பெற்றோரிடத்தில் தெளிவாகக் கூறப்படும்.
விவாஹேஷ் வன்ருதம் ப்ரூயாத்
விவாக காலங்களில் பொய் சொல்லலாம் என்றும் விதியுள்ளது. புத்திரப்பேறில்லாமல் கணவன் இறந்துபோன ஸ்திரீயானவள் புத்திரனை விரும்பியவளாய், திருதராட்டிர னுடையவும் பாண்டுவினுடையவும் தாய்களைப் போல நடந்து கொள்ளலாமென்றும் விதியிருக்கிறது.
அபுத்ரா குர்வனுஜ்ஞாதாதேவரம் புத்ரகாம்யயா:
ஸபிண்டம்வா ஸகோத்ரம் வாக்ருதாப்யக்தம் ருதரவிராத் (யாக்ஞவல்கியர்)
பொருள்: தனது நாயகன் இறந்துவிட்டால் அல்லது புத்திரனை உண்டு பண்ணத் தகுதியில்லாவிட்டால், புத்திரப் பேற்றை விரும்புகிற ஸ்திரீயானவள் பெரியோர்களின்1 அனுமதியைப் பெற்று ருதுகாலத் தில் உடம்பில் நெய்யைப் பூசித் தன் கணவனது சகோ தரன் அல்லது அந்தக் குலத்தில் யாரையே னும் புணர்ந்து கொள்ள லாம்.
இவ்விதம் அசர்ப்பஸம்ப வாத கருத்தரிக்கிற வரைக்கும் செய்து கொள்ளலாம். இத னால், கற்புக்கு அழி வில்லையென்றும், ஸ்மிருதி கூறுகின்றது. நாகரிகத்தின் முன்னணியில் நிற்கிற வகுப்பார்களுள் முதன்மையானவர்கள் என்று தங்கள் மூதாதைகளைப் பேசுகிற பார்ப்பனரின் கூற்றையும், மேற்குறித்த பிரமாண வாக்கியங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இங்ஙனமிருக்க, வியபிசாரம் என்று இவர்கள் கூறுவது எத்தகைய தீய ஒழுக்கத்தையோ, நாமறியோம் வியபிசாரத்திற்கும் பிராயச்சித்தம் விதித்திருக்கிறார்கள்.
1. தமிழர்கள் இதனை முற்றும் அருவருப்பார்கள். - இதற்காகவே திண்டுக்கல்லையடுத்த சிறுமலையில் அவிசாரிக் கணவாயென்று ஒன்றுள்ளது. அதில், அவிசாரியாய்ப் போனவளை நிற்கவைத்துத் தள்ளி விடுவது வழக்கம். இன்னும் அப்பெயர் வழங்கி வருகிறது.
ஹ்ருதாதிகாரம் மலிணாம் பிண்டமாத்ரோப ஜிவினீம்;
ப்ரிபூதாமத: சய்யாம் வாஸயேத் வ்யபிசாரிணீம் (யாக்ஞவல்கியர்)
பொருள்: வியபிசாரம் பண்ணினவளின் ஹிமையை எடுத்துவிட்டு, ஓர் உருண்டைச் சோறு மட்டும் கொடுத்து வெறுந்தரையில் படுக்கச் செய்ய வேண்டும். இவ்விதம் ஓர் ஆண்டு வரையில் செய்தால் குற்றமற்றவளாவாள். (இத்தகைய பிராயச்சித்தத்தினால், வியபிசார தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கற்பைக் குறித்துக் கவலைப்படவும் வேண்டியதில்லை.)
அன்றியும், சுலபமான பிராயச்சித்தத்தினால் எத்தகைய குற்றமும் நீங்கிவிடுமென்று விதிக்கிற சமய நூற்கள் மனிதர்களுக்குத் தீமையையே பயப்பனவாம். இந்தப் பிரமாணங்களை நம்பி எண்ணிறந்த தீமைகளை ஒவ்வொரு நாளும் செய்து வருகிறார்கள் என்பது நிச்சயம். கீதை மஹாத்மியம், பிரதோஷ மஹாத்மியம், ஏகாதசி மஹாத்மியம், காயத்திரி மஹாத்மியம் முதலிய புண்ணிய கருமங்களை விரித்துரைக்கிற புராணங்களில் எதைப் பார்த்தாலும் அவைகளில் ஒவ்வொன்றிலும் பார்ப்பனக் கொலை, குரு மனைவியைப் புணர்தல் முதலிய கொடும்பாவங்களைக்கூட போக்கடிக்க வல்லமையுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சில பண்டிதர்கள் இதை அர்த்தவாதம் என்று சொல்லு கிறார்கள். (பொய் என்பதற்கு அர்த்தவாதம் என்ற பரிபாஷைச் சொல்லை உபயோகிக்கிறார்கள் போலும்) 
-(தொடரும்).
நன்றி:விடுதலை(22-12-2010)www.viduthalai.com 

ஞானசூரியன் - 22

அவைகளைப் பிரமாணத்துடன் ஈண்டுக் கூறுவோம்.
1. பிராமண விவாகமும் அதன் இலக்கணமும்
ப்ராஹ்மே விவாஹ அஹூய தீயதே சக்த்யலங்க்ருதா;
தஜ்ஜ: புனாத்யுபதய; புருஷானேகவிம்ச திம்
பொருள்: தகுந்த வரனைத்தேடி அவனுக்குத் தன் பெண்ணைத் தன்னாலியன்றவாறு அணிகலனால் அலங்கரித்து விதிப்படி விவாகம் செய்துகொடுத்தல் பிராம்மண விவாகம். இந்தப் பெண் வயிற்றிற் பிறக்கிற புத்திரன் இருபத்தொன்று தலைமுறைகளைப் பரிசுத்தம் பண்ணுவான்.
2.தெய்வ விவாகம், 3. ஆர்ஷ விவாகம் இவை இரண்டின் இலக்கணங்கள்
யஜ்ஞஸ்த ரித்விஜே தைல
ஆதாயார்ஷஸ்து கோத்வயம்:
சதுர்க்த சப்ரதமஜ:
புனாத்யுத்தரஜஸ் சஷட் (யாக்ஞவல்கியர்)
பொருள்: யாகம் செய்விக்கிற ருத்விக்குகளுக்குள் (புரோகிதர்களுக்குள்) ஒருவனுக்குக் கன்னிகையைக் கொடுப்பது தெய்வ விவாகம். வரனிடத்தில் இரண்டு பசுக்களைப் பெற்றுக்கொண்டு கன்னிகையைக் கொடுப்பது ஆர்ஷ விவாகம். இந்த விவாகங்களிலிருந்து பிறக்கிற புத்திரர்கள முறையே பதினான்கு அல்லது ஆறு தலைமுறையைப் பரிசுத்தம் பண்ணுவார்கள்.
4. பிரஜாபத்திய விவாகமும், அதன் இலக்கணமும் ஸஹதர்மஸ்சர்ய தாமித் யுக்த்வா
யாதீய தேர்த்திஸே;
ஸ்காய: பாவயத்யாத்ய:
ஷட்ஷட்வம்ஸ்யான் ஸஹாத்மனா (யாக்ஞவல்கியர்)
பொருள்: பெண்ணை விரும்பிக் கேட்கிற வரனுக்குப் பெண்ணைக் கொடுப்பது பிரஜாபத்தியம். இதிலுண்டாகும் புதல்வன் ஏழு தலைமுறையைப் பரிசுத்தமாக்குவான்.
5. ஆசுர விவாகமும், அதன் இலக்கணமும்
ஜ்ஞாதிப் யோத்ரவிணம் தத்வா
கன்யாயாஸ்சைவ சக்தித;
கன்யாதானம் துஸ்வாச்சந்தி
யாதாஸுரோதர்ம உச்யதே (யாக்ஞவல்கியர்)
பொருள்: சுற்றத்தார்களுக்குப் பணம் கொடுத்து கன்னிகையைப் பெற்றுக்கொள்ளுதல் ஆசுரவிவாகம்.
6. காந்தர்வ விவாகமும், அதன் இலக்கணமும்
இச்சயான்யோன் யஸம்பந்த;
கன்யாயஸ்ச; வாஸ்யச;
காந்தர்வ: ஸ்விதிர் ஜ்ஞேயோ
மைதுன்ய காமஸம்பவ
பொருள்: ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் விருப்பத்தினால் கலந்துகொள்ளு தலே காந்தர்வ விவாகம்.
7. இராக்ஷஸ விவாகமும், அதன் இலக்கணமும்
ஹத்வா, சித்வாச பித்வாச
க்ரோசந்தீம் ருததீம் க்ருஹாத்;
ப்ரஸஹ்ய கன்யாஹரணம்
ராக்ஷஸோ விதிருச்யதே (மனு)
பொருள்: வீட்டிற்குள் புகுந்து அங்குள்ளவர்களைச் கொன்றும் பயமுறுத்தியும் பெண்ணைத் தூக்கிக் கொண்டு போவதே இராட்சச விவாகம்.
8. பைசாச விவாகமும், அதன் இலக்கணமும்
ஸுப்தாம் மத்தாம் ப்ரமத்தாம் வா
ரஹோ யத் ரோபகச் சதி;
............................................. பைசாச:
ப்ரதிகோஷ்டம் (மனு)
பொருள்: தனிப்பட்ட இடத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போதோ, மூர்ச்சித்து விழுந்திருக்கும் போதோ, புணர்ச்சி செய்தல் பைசாச விவாகம்.
இத்தகைய எண் வகை 1மணங்களுள் விரும்பியவாறு ஏதேனும் ஒன்றின் முறையைப் பின்பற்றி நடந்து கொள்ளலாம். இதனால், அக்காலத்தில் நடந்துவந்த விவாக முறையை ஊகித்து உணருவதே நலம். இம்முறைகளைக் கண்டிக்க இந்துக்களுக்கு உரிமையில்லை. போதாயனனுடைய விதியையும் கேளுங்கள்.
த்ரீணி வர்ஷாண் யருதுமதீ
சாங்க்ஷேத பிதிர் சாசனம்
ததஸ் சதுர்த்தே மாஸேத்
விந்தேத ஸத்ருசம் பதிம்.
1. தமிழ் நூற்களில் களவியல் எனவும், கற்பியல் எனவும் இரண்டே
அல்ப்ய மானே ஸத்ருசே
குணஹீனம் ஸமாஸ்ரயேத் (போதாயனர்)
பொருள்: ருதுமதியான கன்னிகையானவள் 1மூன்று ஆண்டுகள் வரையிலும் பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பிறகு தானாகவே தக்க வரனைத் தேடி அடையலாம். தன் மனத்திற்கேற்றவாறு வரன் கிடைக்காதவிடத்து எத்தகைய புருஷனை யேனும் மணந்து கொள்ளலாம்.
உதவையாசன் தாதாரம் லபத ஏவ,
அதேச பார்த்தா பார்யாம்
(தொடரும்).
நன்றி:விடுதலை(21-12-2010)
-

Sunday, December 19, 2010

ஞான சூரியன் - 21

ஆசீர்வாதத்திலும் வேற்றுமை பாராட்ட வேண்டுமென்று பிரத்திய பிவாதே சூத்ரே என்ற சூத்திரத்தினால் வடமொழி இலக்கண ஆசிரிய ராகிய பாணினி என்பவர் விதித்திருக்கிறார். பரவித்தையைப் போதிக்கிற பகவத்கீதையிலும் இவ்வேற்றுமை காணப்படுகிறது.
யேபிஸ்யு பாபயோனய (கீதை. அத். 9 சுலோ. 32) என்று தொடங்கிய வாக்கியங்களாலும் மற்றும் சூத்தி ரர்களைப் பாவிகள் என்று சொல்லுகிற இடங்களையும் பாருங்கள். வேதாந்த சூத்திரத்திற்குப் பாஷியம் செய்ய வந்த சங்கராச்சாரியார், சூத்திரன் சந்நியாசத்திற்கும், சிரவணத்
1. சூத்திரனிடத்தில் பிராமணன் க்ஷேமம் விசாரிப்பது, நீ நோயில்லாமல் இருக்கிறாயா? என்று மட்டுமே. வேறு, குசலம், அனாமயமா, க்ஷேமமா? என்று கேட்கக்கூடாது. நோயில்லாமல் இருந்தாலல்லவோ தின ராத்திரியும் பார்ப்பனர்கட்கு வேலை செய்யலாம். இதுவே கருத்து.
திற்கும், ஞானத்திற்கும் உரியவனன்று என்கிற தனது பொறாமைக் கொள்கையை நிலைநிறுத்தும் பொருட்டு அபசூத்ராதிக்ரணத்தில்,
பர்ஹமசூத்திர - ச்ரவணாத்ய யனார்த்த
ப்ரதிஷேதாத் ஸ்ம்ருதேஸ்ச
(அ. 1 பாகம் 3, சூத்திரம் 38)
இந்தச் சூத்திரங்களின் பாஷியத்தில் மேற்கோளாக எடுத்துக்காட்டிய ஸ்மிருதி வாக்கியங்கள் வருமாறு:-
1அதஹாஸ்ய வேதமுபஸ்ருண்வத; ஸரோத்ரௌத்ர
புஜதுப்யாம் பூரயேத பூரயேத (கோதமதர்ம சூத்திரம்)
பொருள்: வேதம் ஓதுங்கால், அதைக் காதால் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கிவிட வேண்டும்.
பத்யுஹவா ஏதத் ஸ்மசானம் வைசூத்ரஸ்த
ஸ்மாத் சூத்ரஸ் மீபே நாத்யேதவ்யம்
பொருள்: சூத்திரன் நடமாடுகிற இடம் சுடுகாடானதால், அவன் பக்கத்தில் வேதமோதலாகாது2
உச்சாரணே ஜிஹ்வாச்சேதோ தாரணே சரீரபேத:
பொருள்: சூத்திரன் வேதத்தை வாயினால் சொன்னால், நாக்கை அறுக்கவேண்டும். உணர்ந்து வைத்திருந்தால், நெஞ்சைப் பிளக்க வேண்டும்.
1. சூத்திரத்தில் அதஹ என்றும் பூரயேத பூரயேத என்றும் மீண்டும் மீண்டும் கூறியிருப்பது கோதமனுக்குச் சூத்திரர்களிடத்திலிருக்கிற பகையை வெளிப்படுத்துகிறது. இவ்விதம் பார்ப்பனன் இங்கிலீஷாவது பைபிளையாவது வாசித்தால், இவ்விதத் தண்டனையுண்டு என்று சொல்லுவதுடன், இந்திய நாட்டிலுள்ள எந்தப் பாஷையும் வாசிக்க வசதியும், இந்தக் கிறிஸ்தவ கவர்ன்மெண்டு கொடாவிடில், இப்பார்ப்பனர்க்கு எவ்வளவு வருத்தம் உண்டாகுமோ, அவ்வளவு வருத்தம் பாக்கியுள்ள அப்பிராஹ்மண சமூகத்திற்கு உண்டென்று நினைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறேன்.
2. ஆதலால்தான், அய்யங்கார் வீட்டுக்கு அய்யர் போனாலும், அய்யர் வீட்டுக்கு அப்பிராமணன் போனாலும் இவர்கள் குடியிருக் கும் தெருவுக்கு நாடார்கள், பறை யர்கள் வந்தாலும், மயானத்துக் கொப் பிட்டுச் சாணித் தண் ணீர் கொட்டுகிறார் கள். இது ஒரு பரம் பரை வழக்கம்.
நசூத்ராய மதிம் தத்யாத்
பொருள்: சூத்திரனுக்குப் பகுத்தறிவு உண்டாகும்படி யாதுஞ் செய்யலாகாது (யாது ஞான நூலும் கற்பிக்க லாகாது) இவை முதலியன.
பிரமாண வசனங்கள் இப்படியிருக்க, இக்காலத்தில் பார்ப்பனரல்லாதாரில் 1சிலர் சந்நியாசி வேஷம் போட்டுக் கொண்டவர்களும், ஏனையோரும் பகுத்தறிவில்லாது சங்கராச்சாரியார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லித் திரிகின்றார்களேயெனில், இது இவர்களின் அறியாமையையும், இதனால் இவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லாமல் வாழ்ந்து வருவது பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையும் விளக்குகிறது. தங்களின் கட்டளைப்படி நடக்காத பார்ப்பனரல்லாதாரைத் தண்டிக்க, மனுவின் சட்டப்படி பார்ப்பனருக்கு உரிமை இருந்தாலும் பிரிட்டிஷ் ஆட்சியின் பீரங்கி முனையிலும், கத்தி முனையிலும் அது செல்லாது.
பார்ப்பனன் ஒருவன் எதிர்ப்பட்டதும் பார்ப்பனரல்லா தவர் எழுந்து வணங்குவதை இப்போதும் பார்க்கிறோம். இது பார்ப்பனரிடத்தில் தங்களுக்கிருக்கிற பேரன்பைப் பொறுத்தல்லவென்றும், வெகு நாள்களாகப் பார்ப்பனரால் துன்புறுத்தப்பட்டு, வழி வழியாக வந்த பயமே இதற்குக் காரணம் என்றும் அறியவேண்டும். இதைப்போலவே பார்ப்பனரல்லாதாருக்குள்ளேயே உயர்ந்த ஜாதியா னொருவனைக் கண்ட தாழ்ந்த ஜாதியானும் எழுந்து வணங்குவது பயத்தினாலேயாகும். இறந்துபோய் 2பிரேதங்களான பிறகுங்கூட இவ்வேற்றுமைகள் ஒழிந்தபாடில்லை. சூத்திர பிரேதத்தால் உண்டான துன்பம் வைசியப் பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும் வைசியப் பிரேதத்தின் உபத்திரவம், க்ஷத்திரியப் பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும், க்ஷத்திரியப் பிரேதத்தின் துன்பம் பிரம்மராக்ஷசுக்குப் பூசை போடுவதாலும் நீங்குவதைக் கண்கூடாகக் காணலாம். பாலக்காட்டிற்கு அருகில் ஒரு கோயில் இருக்கிறது. 1. தென்னாட்டில் காவி கட்டியிருந்தாலும், வெள்ளை கட்டியிருந்தாலும், சூத்திரனைப் பதேசி, பண்டாரம் என்பர். இல்லறத்திலுள்ள பார்ப்பானைச் சாமி சாமியென்று அழைப்பது சகஜமாகிவிட்டது. வேதத்தில் கருமம், பக்தி, ஞானம் என்னும் முக்காண்டங்கள் உள்ளன. கரும காண்டத்தில் ஒரு சிறிதும் அதிகாரமில்லாதவர்கள் ஞான காண்டத்தைப் படிக்கவோ, சந்நியாசம் செய்து கொள்ளவோ உரிமை கிடையாதென்பதை மறந்து கதறுகின்றார்கள். இவர்களுக்கு நல்லுணர்வை இறைவன் அருள் புரிவானாக.   
-(தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை(19-12-2010) 

Saturday, December 18, 2010

BRAHMINS ONLY-பிராமணர்களுக்கு மட்டும்

1. தாங்கள் சிறை சென்ற தியாகத்தைப் பற்றி ஏ வகுப்புக் கைதியாகப் போடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதும், பிறகு அதிலும் பிறரைவிட அதிக வசதிகள் வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொண்டதும், பிறகு ஜஸ்டிஸ் கட்சியாரைக் கொண்டு சிபாரிசு செய்து ஆஸ்பத்திரிக்கு வந்ததும், பிறகு அதை விட்டு குறித்த காலத்திற்கு, முந்தி விடுதலையாவதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் சிபாரிசு செய்ததுமான விஷயங்கள் இருக்கும்போது, ஜஸ்டிஸ் கட்சியைத் தூற்றுவதும் தியாகம் என்று சொல்லிக் கொள்வதும், யோக்கியமான செயலாகுமா?
2. பெண்களில் ஒரு கூட்டத்தாராகிய தேவதாசிகளைக் கோவிலில் ஆடவிட்டால்தான் இந்து மதம் நிலைக்கு மென்று சொல்லி பெண் சமுகத்தை இழிவுபடுத்திய தங்கட்கு பெண்களுடைய ஓட்டுகளைக் கேட்க வெட்கமில்லையா?
3. ஜஸ்டிஸ் கட்சியை வகுப்பு வாதக் கட்சியென்று கூறும் தாங்கள், உங்களுடைய இனத்தார்களாகிய பிராமணர்களின் வீடுகளில் 100-க்கு, 99இல்  tolet for Brahmins only (பிராமணர்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்படும்) என்று போர்டுகள் போடப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் சொல்லுகிறீர்கள்?
4. வகுப்பு வாதக் கட்சி என்று நீங்கள் கூறும் ஜஸ்டிஸ் கட்சியின் பிரமுகர்களால் நடத்தப்படும் பச்சையப்பன் காலேஜ், தொண்டை மண்டலம் ஹைஸ்கூல் முதலிய பள்ளிக்கூடங்களிலுள்ள உபாத்தியாயர்களில் 100-க்கு சுமார் 65 பேருக்கு மேல் பிராமணராயிருக்க, வகுப்புவாதமே கடுகளவும் இல்லாததாக வேஷம் போடும் தங்கள் இனத்தாரால் (பிராமணரால்) நடத்தப்படும் மயிலாப்பூர் p.s.ஹைஸ்கூல், திருவல்லிக்கேணி இந்து ஹைஸ்கூல் (hindu high school) முதலிய பள்ளிகளில் 100-க்கு 2 பேர் கூட பிராமணரல்லாத உபாத்தியாயர்கள் இல்லாதிருப்பதற்குக் காரணம் என்ன?
5. இந்திய சட்டசபையில் மொத்த அங்கத்தினர்கள் 145, இதில் 40 பேர் சர்க்காரால் (நாமினேஷன்) நியமிக்கப்படும் சர்க்கார் தாசர்கள், 9 பேர் அய்ரோப்பியர்கள்; 7 பேர் நிலச்சுவான்தார்கள்; 30 பேர் முஸ்லீம்கள்; 4 பேர் வர்த்தகத் தொகுதியைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் சீக்கியர்கள். ஆக மொத்தம் 92 போக பாக்கி 53. இதில் காங்கிரஸ்காரர்கள் எத்தனை பேர் வர முடியும்? அப்படியே 53-ம் வந்தாலும் 92 பேருக்கு எதிரிடையாக எதைச் சாதிக்க முடியும் என்பதை விளக்க முடியுமா?
6. அப்படியே ஒரு வேளை தங்களுடைய பேச்சு வன்மையால் இதர 144 பேரையும் தங்கள் கொள்கைக்குத் திருப்ப முடிந்தாலும், வைசிராயினுடைய (certification சர்டிபிகேஷன்) அதிகாரம் இருக்கும் வரையில் தங்களால் என்ன செய்ய முடியும்?
7. பெண்கள் உரிமை, தீண்டாமை ஒழித்தல் முதலிய சகல சமுதாய சீர்திருத்தத் துறைகளிலும் விரோதமான கொள்கை கொண்ட தங்களையும், தங்களுடைய கட்சிக்காரர்களையும் சட்டசபைக்கு அனுப்புவதால் ஜன சமூகத்திற்கு என்ன பிரயோஜனம் இருக்கிறது?
8. சென்ற சட்ட மறுப்பு சமயத்தில் திரு. பக்தவச்சல முதலியார், திரு. முத்துரங்க முதலியார் போன்ற பல பிரமுகர்களும், இன்னும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் போலீசாரால் எவ்வளவோ அடிபட்டிருக்க, திரு. பாஷ்யமய்யங்கார் அவர்கள் அடிபட்டதற்கு மாத்திரம் சென்னை சட்ட சபையில் ஒத்திவைக்கும் தீர்மானம்; இந்திய சட்டசபையில் சரமாரியான கேள்விகள்; பார்லிமெண்டில் கேள்விகள்; இவ்வளவும் போதாமல், திரு. காந்தியவர்கள் இர்வினுக்கு எழுதிய கடிதத்திலும் இதைப் பற்றிய குறிப்பு - இவ்வளவும் செய்ததிலிருந்து காங்கிரஸ் ஸ்தாபனமானது பார்ப்பனர்களுடைய கோட்டை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
9. திரு. காந்தியவர்கள் வந்தபோது மாத்திரம் ஹரிஜன சேவை என்ற பெயரில் சேரியைக் கூட்டியதும், சேரிக் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து முழுக்காட்டினது மான நாடகமெல்லாம் ஹரிஜனங்களின் பெயரால் பணம் திரட்டியதோடு சரியாய்ப் போய்விட்டதா? அந்தப் பணம் என்னவாயிற்று?
10. சோம்பேறிப் பிச்சைக்காரர்கள் தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக திருப்பதி வெங்கடா சலபதியையும், பழனி முருகனையும் சொல்லி பணம் கேட்பது மாதிரி தங்களுக்கு சொந்த யோக்கியதை இருந்தால் மகாத்மாவின் பெயரையும் காங்கிரஸ் பெயரையும் சொல்லி ஓட்டு கேட்பீர்களா?
11. சென்ற சட்டமறுப்பில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அடிபட்டிருந்தபோது, தாங்களும், திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் மாத்திரம் வாடகை மோட்டாரில் சொகுசாகப் போய் துண்டு நோட்டீஸ் கொடுத்து கைதியாகி விட்டு, இப்போது அடிபட்ட பார்ப்பனரல்லாத தொண்டர்கள் பெயரால் ஓட்டுக் கேட்டது யோக்கியமான செயலாகுமா?
12. காங்கிரஸ் பெயரினால் ஒரு பெண்ணைக் கூட தேர்தலுக்கு நிறுத்தாததுமின்றி சுயேச்சையாக நிற்கிறேன் என்று சொன்ன தேசியவாதியான சிறீமதி ராதாபாய் சுப்பராயன் அவர்களை போட்டியின்றி நிற்பதற்கு இடமும் கொடாமல் செய்த காங்கிரசின் பிரதிநிதியான தங்க
ளுக்குப் பெண்கள் ஓட்டுக் கொடுப்பார்கள் என்று நீங்கள் கனவிலும் கருத முடியுமா?
13. ஜஸ்டிஸ் கட்சியில் பிராமணர் உட்பட எல்லோரும் சேர உரிமையுண்டு என்று சமீபத்தில் நடந்த மகாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றி, அதன்படி விதிகளைத் திருத்தம் செய்த பிறகும் கூட வகுப்புவாதக் கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள், என்று தாங்களும், திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் பிற பிரச் சாரகர்களும் சொல்லி வருவதன் காரணம் உங்களுடைய அறியாமையா? அல்லது வேண்டுமென்றே செய்யும் சூழ்ச்சியா? பார்ப்பனத் தந்திரமா?
14. காங்கிரஸ் தனது நிர்மாணத் திட்டங்களாகிய கீழ்க் கண்ட வேலைகளில் இதுவரை எது எதில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தயவு செய்து சொல்வீர்களா?
 கள்ளுக்கடை மறியல்.
 அன்னியத் துணிக்கடை மறியல்
 நீல் சிலை சத்தியாக்கிரகம்.
 காலேஜ்களை அடைத்து விடுதல்
 வக்கீல் கோர்ட்டுக்குப் போவதை நிறுத்துதல்
 உப்புச் சத்தியாக்கிரகம்
 தக்ளியினாலேயே நூல் நூற்றுக் கொண்டிருத்தல்
 சட்டசபைகளில் சென்று சிங்கத்தை அதன் குகையில் எதிர்த்தல்
 ஹரிஜனங்களுக்கு கோவிலில் நுழைய விடுதல்
 வீட்டுக்கு வீடு ராட்டினத்தில் நூல் நூற்கும்படி செய்தல்.
 சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்தல்
 Census’ ஜன கணிதம் கொடுக்கவும் கூடாது என்று 1931இல் பிரச்சாரம் செய்தது முதலியவைகளில் எதைச் சாதித்தது?
இப்படிக்கு
சென்னை அஸெம்பிளி ஓட்டர்கள்
- பகுத்தறிவு - கட்டுரை - 28.10.1934

முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?
கோயம்புத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட் மீது சுமார் 30 மெம்பர்கள் சேர்ந்து நிர்வாக ஊழல் களைப் பற்றியும், போர்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் ஒரு பிராது தயாரித்து கையொப்பமிட்டு சர்க்காருக்கு அனுப்பிய விஷயமும், மற்றும் பிரசிடெண்ட் கனம் வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கு காரண கனவான்கள் முதலியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த விஷயமும் நேயர்கள் அறிந்ததாகும்.
பிறகு உடனே கனம் பட்டக்காரர்களுக்கும், சில மெம்பர்களுக்கும், கனம் கவுண்டர் அவர்களுக்கும் ஒரு வித சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், அதன் பயனாய் அப்பிராதில் கையெழுத்து செய்திருந்த கனவான்களில் ஒரு சிலர் தங்கள் கையெழுத்துக் களை வித்ட்றா செய்து கொண்டதாகவும் தெரிய வருகிறதோடு சமாதானத்தில் ஒரு நிபந்தனை, கனம் கவுண்டர் அவர்கள் பிரசிடெண்டுஸ்தானத்தை ராஜினாமா செய்து விடுவதாகப் பெரிய இடத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப் படுகிறது.
இதன் உண்மை எப்படி இருந்தாலும் அதைப்பற்றி பொது ஜனங்களுக்கு அக்கறை இருக்காது. ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களில் காண்ட்ராக்ட்டு வேலை களும், சிப்பந்திகள் நியமிக்கும் வேலைகளும் பிரசிடெண்டுகளுக்கும், சேர்மென்களுக்கும் இருப் பதினாலேயே போர்டுகளிலும், கவுன்சில்களிலும் தகராறுகள் ஏற்படுவதற்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வருவதற்கும் பெரிதும் அவசியம் ஏற்பட்டு விடுகின்றன. இதைப் பற்றி நாம் பல தடவைகளில் எழுதிவந்த பிரகாரம் போர்டுகளின் தலைவர்களிடமிருந்து அந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டால் பிறகு சேர்மென்களும், பிரசிடெண்டுகளும், கவுன்சிலர்களுக்கும், மெம்பர்களுக்கும், யோக்கியர்களாகவும், சினேகிதர்களாகவும் ஆகி விடுவார்கள். தகராறுக்கும் சிறிதும் இடமிருக்காது.
ஒரு சமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருவதாய் இருந்தாலும் கமிஷனர்கள் மீதுதான் வரக்கூடுமே ஒழிய வேறில்லை. அதனால் கமிஷனர் களுக்கும் நஷ்டம் இருக்காது. அவர்கள் வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடலாம். மெம்பர்களுக்கும் அவசியமான காரியங்கள் கவனிக்க சவுகரிய மேற்படும். ஆகவே முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?
- பகுத்தறிவு - கட்டுரை - 28.10.1934