Sunday, December 5, 2010

இதுதான் ஆரியம்!

சங்கராச்சாரி - யார்? என்று 10 நாள்கள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியபோது தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிப்பிட்டார். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு கொலை வழக்கு. கொலை செய்தவன் பார்ப்பனன். விசாரணை செய்தவர் ஆங்கிலேய நீதிபதி. வழக்கின் போக்கு - குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை நிச்சயம் எனும் நிலையில் அமைந்திருந்தது. இதனை அறிந்த பார்ப்பன திவான், குற்றவாளி பார்ப்பனன் என்பதால் கொல்லப்படக் கூடாது என விரும்பினார். (மனுதர்மம்: கொலை செய்த பார்ப்பனர்க்கு மயிரை மழித்தால் அதுவே தண்டனை என்றிருக்கிறது. இ.பி.கோ. வேறு விதமாக உள்ளது).
நீதிபதியை அணுகி, குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை தராமல் வேறு தண்டனை தரும்படி கேட்டுக் கொண்டார். வெள்ளைக்கார நீதிபதி என்பதால் அவர் மறுத்துவிட்டார். இது அரிதினும் அரிதான வழக்கு, கொலைக் குற்றம் எந்தவித அய்யமும் இல்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆகவே தூக்கு நிச்சயம் எனக்கூறி விட்டார்.
உடனே பார்ப்பன திவான் என்ன செய்தார் தெரியுமா? திருவாங்கூர் மன்னரிடம் கூறி ஒரு உத்தரவைப் பிறப்பித்தார் - அன்றைய தினம் நள்ளிரவிலிருந்து திருவாங்கூர் சமஸ்தானத்தில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்கிற அரசுப் பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது.
அதன் விளைவாக, கொலை செய்த பார்ப்பனர் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்க வைத்த சம்பவம் நடந்ததைத் தமிழர் தலைவர் குறிப்பிட்டு மனுதர்மப்படி ராஜ்ய பரிபாலனம் கேரளப் பகுதியில் நடந்தது என்பதைத் தெரிவித்தார்.
- வைக்கம் சத்தியாக்கிரக 85 ஆம் ஆண்டு விழாவில் தி.க.பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு பேச்சு (26.11.2010)

No comments:

Post a Comment