Friday, December 17, 2010

கிறித்துவரைப் பார்த்து குடிஅரசு கேட்ட வினாக்கள்!

(எதார்த்தவாதியும் - கிறிஸ்துமத போதகரும் பேசியது)

போதகர்:
 பழைய காலத்திலேயே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும், பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.எதார்த்தவாதி: அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால், எப்பொழுது எழுதப்பட்டது?
எதா: சரி தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சிலவிடங்களில் தெய்வத்துக்குப் பயப்படாதவர்கள்தானே? போதகர்: இல்லை சார். எப்பொழுதும் தெய்வத்துக்குப் பயப்படுகிறவர்கள்தான்.
எதா: நல்லது. அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே?
போதகர்: ஆம் வாஸ்தவந்தான். ஆனால் அவனை (ரை) சில ஆராய்ச்சியாளர்கள் தன் தகப்பனின் மறுமனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்.
எதா: அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகியிருக்கலாம்.
போதகர்: அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியதென்ன?
எதா: உண்மையாக அவன் தீர்க்கதரிசிதானே?
போதகர்: ஆம் வாஸ்தவந்தான், ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளை) தேவனே.. அவன் ஒரு தீர்க்கதரிசி... என்பதாய் சொல்லியிருக்கிறார்.
எதா: அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில்... இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும்... பொருள்படப் பேசியதை தாங்கள் வாசித்ததுண்டா?
போதகர்: அ ஆ ஆம் வாசித்ததுண்டு. ஆனால், அவன் மனைவி ச.ஆ. சாராள் அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.
எதா: மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?
போதகர்: சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
எதா: சரி அய்யா, நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர்களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.
போதகர்: தெய்வமில்லாத காலமிது என்பதாய் முணுமுணுத்துக் கொண்டு நழுவி விடுகிறார்.
எதா: பைபிள் காலத்தில் தெய்வ பயமில்லாத இடமிருந்தது இப்பொழுது காலம் வந்து விட்டது என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும் என்பது எங்கள் துணிபு.
குடிஅரசு, பக்கம் 15,( 5.4.1931)

No comments:

Post a Comment