Wednesday, December 22, 2010

ஞானசூரியன் - 22

அவைகளைப் பிரமாணத்துடன் ஈண்டுக் கூறுவோம்.
1. பிராமண விவாகமும் அதன் இலக்கணமும்
ப்ராஹ்மே விவாஹ அஹூய தீயதே சக்த்யலங்க்ருதா;
தஜ்ஜ: புனாத்யுபதய; புருஷானேகவிம்ச திம்
பொருள்: தகுந்த வரனைத்தேடி அவனுக்குத் தன் பெண்ணைத் தன்னாலியன்றவாறு அணிகலனால் அலங்கரித்து விதிப்படி விவாகம் செய்துகொடுத்தல் பிராம்மண விவாகம். இந்தப் பெண் வயிற்றிற் பிறக்கிற புத்திரன் இருபத்தொன்று தலைமுறைகளைப் பரிசுத்தம் பண்ணுவான்.
2.தெய்வ விவாகம், 3. ஆர்ஷ விவாகம் இவை இரண்டின் இலக்கணங்கள்
யஜ்ஞஸ்த ரித்விஜே தைல
ஆதாயார்ஷஸ்து கோத்வயம்:
சதுர்க்த சப்ரதமஜ:
புனாத்யுத்தரஜஸ் சஷட் (யாக்ஞவல்கியர்)
பொருள்: யாகம் செய்விக்கிற ருத்விக்குகளுக்குள் (புரோகிதர்களுக்குள்) ஒருவனுக்குக் கன்னிகையைக் கொடுப்பது தெய்வ விவாகம். வரனிடத்தில் இரண்டு பசுக்களைப் பெற்றுக்கொண்டு கன்னிகையைக் கொடுப்பது ஆர்ஷ விவாகம். இந்த விவாகங்களிலிருந்து பிறக்கிற புத்திரர்கள முறையே பதினான்கு அல்லது ஆறு தலைமுறையைப் பரிசுத்தம் பண்ணுவார்கள்.
4. பிரஜாபத்திய விவாகமும், அதன் இலக்கணமும் ஸஹதர்மஸ்சர்ய தாமித் யுக்த்வா
யாதீய தேர்த்திஸே;
ஸ்காய: பாவயத்யாத்ய:
ஷட்ஷட்வம்ஸ்யான் ஸஹாத்மனா (யாக்ஞவல்கியர்)
பொருள்: பெண்ணை விரும்பிக் கேட்கிற வரனுக்குப் பெண்ணைக் கொடுப்பது பிரஜாபத்தியம். இதிலுண்டாகும் புதல்வன் ஏழு தலைமுறையைப் பரிசுத்தமாக்குவான்.
5. ஆசுர விவாகமும், அதன் இலக்கணமும்
ஜ்ஞாதிப் யோத்ரவிணம் தத்வா
கன்யாயாஸ்சைவ சக்தித;
கன்யாதானம் துஸ்வாச்சந்தி
யாதாஸுரோதர்ம உச்யதே (யாக்ஞவல்கியர்)
பொருள்: சுற்றத்தார்களுக்குப் பணம் கொடுத்து கன்னிகையைப் பெற்றுக்கொள்ளுதல் ஆசுரவிவாகம்.
6. காந்தர்வ விவாகமும், அதன் இலக்கணமும்
இச்சயான்யோன் யஸம்பந்த;
கன்யாயஸ்ச; வாஸ்யச;
காந்தர்வ: ஸ்விதிர் ஜ்ஞேயோ
மைதுன்ய காமஸம்பவ
பொருள்: ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் விருப்பத்தினால் கலந்துகொள்ளு தலே காந்தர்வ விவாகம்.
7. இராக்ஷஸ விவாகமும், அதன் இலக்கணமும்
ஹத்வா, சித்வாச பித்வாச
க்ரோசந்தீம் ருததீம் க்ருஹாத்;
ப்ரஸஹ்ய கன்யாஹரணம்
ராக்ஷஸோ விதிருச்யதே (மனு)
பொருள்: வீட்டிற்குள் புகுந்து அங்குள்ளவர்களைச் கொன்றும் பயமுறுத்தியும் பெண்ணைத் தூக்கிக் கொண்டு போவதே இராட்சச விவாகம்.
8. பைசாச விவாகமும், அதன் இலக்கணமும்
ஸுப்தாம் மத்தாம் ப்ரமத்தாம் வா
ரஹோ யத் ரோபகச் சதி;
............................................. பைசாச:
ப்ரதிகோஷ்டம் (மனு)
பொருள்: தனிப்பட்ட இடத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போதோ, மூர்ச்சித்து விழுந்திருக்கும் போதோ, புணர்ச்சி செய்தல் பைசாச விவாகம்.
இத்தகைய எண் வகை 1மணங்களுள் விரும்பியவாறு ஏதேனும் ஒன்றின் முறையைப் பின்பற்றி நடந்து கொள்ளலாம். இதனால், அக்காலத்தில் நடந்துவந்த விவாக முறையை ஊகித்து உணருவதே நலம். இம்முறைகளைக் கண்டிக்க இந்துக்களுக்கு உரிமையில்லை. போதாயனனுடைய விதியையும் கேளுங்கள்.
த்ரீணி வர்ஷாண் யருதுமதீ
சாங்க்ஷேத பிதிர் சாசனம்
ததஸ் சதுர்த்தே மாஸேத்
விந்தேத ஸத்ருசம் பதிம்.
1. தமிழ் நூற்களில் களவியல் எனவும், கற்பியல் எனவும் இரண்டே
அல்ப்ய மானே ஸத்ருசே
குணஹீனம் ஸமாஸ்ரயேத் (போதாயனர்)
பொருள்: ருதுமதியான கன்னிகையானவள் 1மூன்று ஆண்டுகள் வரையிலும் பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பிறகு தானாகவே தக்க வரனைத் தேடி அடையலாம். தன் மனத்திற்கேற்றவாறு வரன் கிடைக்காதவிடத்து எத்தகைய புருஷனை யேனும் மணந்து கொள்ளலாம்.
உதவையாசன் தாதாரம் லபத ஏவ,
அதேச பார்த்தா பார்யாம்
(தொடரும்).
நன்றி:விடுதலை(21-12-2010)
-

No comments:

Post a Comment