Wednesday, December 15, 2010

ஞான சூரியன் - 18

பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமடைய விரும்புவார் களாயின், முதன் முதல் பார்ப்பனர்கள் நம்மைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணத்தையும், அவர்களின் சமயத்தையும் உதறித்தள்ள வேண்டும். தங்களது முன்னேற்ற வழியை மறித்து வைத்திருக்கிற இப்பெருங் கற்பாறைகளைப் பார்ப்பனரல்லாதார் ஒன்று சேர்ந்து உடைத்துப் பொடி பண்ணிவிட வேண்டும் (இதற்காகவே சாம்மியவாதம் தோன்றியது)
முற்காலத்தில் பார்ப்பனரல்லாதார், பார்ப்பனர் செய்யும் கொடுமைக்கு ஏதேனும் திருப்பிச் செய்தால், தண்டனை விதித்து வந்த வேடிக்கையையுங் கேளுங்கள்.
சதம் ப்ராஹ்மணமாக்ருச்ய,
க்ஷத்ரியோ தண்டமர்ஹதி:
வைச்ய: ஸார்த்தசதம் சைவ
சூத்ரஸ்து வதமர்ஹதி (மனு)
இதன் பொருள்: பிராமணனது மனம் நோகும்படி க்ஷத்திரியன் ஏதேனும் மொழிந்தால் அவனுக்கு நூறு பொன்னும், வைசியன் அங்ஙனம் செய்தால், அவனுக்கு நூற்றைம்பது பொன்னும் அபராதம் விதிக்க வேண்டும். பிராமணர்களைத் திட்டுகிற சூத்திரனைக் கொன்றுவிட வேண்டும்.
மற்றும்,
ஆர்யஸ்த்ர்ய பிகமனே லிங்கோத்தார:
ஸ்வஹ ரணஞ்ச (கோதமதர்மசூத்திரம்)
பொருள்: மூன்று வருணத்தாருடைய பெண்களில் எவளையேனும் சூத்திரன் கைப்பற்றினால், அவனது பொருளைக் கொள்ளையிடுவதோடு, ஆண் குறியையும் அறுத்துவிட வேண்டும். எதிர்மறையாக,
ஸ்த்ரீ ரத்தம் துஷ்குலாதபி
சூத்திரனது அழகிய பெண்ணை த்விஜர்கள் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றும் பிரமாணமுண்டு. மற்றும், ஏகஜாதிர் த்விஜாதீம்ஸ்து
வாசா தாருணயாக்ஷிபன்
ஜிஹ்வாயா: ப்ராப் நுயாச்தேசம்
ஜகன் யப்ரபவோ ஹிஸ: (மனு)
பொருள்: மூன்று வருணத்தினரில் யாரையேனும் சூத்திரன் திட்டினால், அவனது நாக்கை அறுத்துவிட வேண்டும். ஏனெனில், அவன் தாழ்ந்த அங்கத்தினின்றும் பிறந்தவனன்றோ?
முற்காலங்களில் இந்தச் சட்டத்தின்படி பலரைக் கொன்றும், நாக்கறுத்தும் பயமுறுத்தியதன் வாயிலாகவே இன்றும் இவர்களைப் பார்த்தவுடன் பயந்து எழுந்து நின்று, சுவாமி என வணங்குவது 1ப்ராஹ்மணா யமகாதக என்ற பழமொழியும் இதற்குச் சான்றாம். பார்ப்பனர்கள் மலையாளத்தில் செய்த தீச்செயல்கள் அளவிறந்தன. மனுஸ்மிருதியின் படிக்குள்ள உரிமை போதாதென்று பேராசையினால், சங்கரஸ்மிருதி எனத் தங்களுக்கு மட்டும் ஒரு ஸ்மிருதி எழுதி வைத்துக் கொண்டு, அங்குள்ள நாயர் பிரபுக்களை மயக்கி, அவர் களைத் தங்களின் துணைக்கருவியாக வைத்துக்கொண்டு ஏழைகளைத் துன் புறுத்தி வருகிறார்கள். ஆனால், இந்த நாயர் பிரபுக்களையா வது ஒழுங்காக வாழச் செய்தார் களா? 2ஊராண்மை முதலிய அய்ந்து ஆண்மைகளும், கோன்மையும் எங்களுக்குச் சொந்தம். இந்த நாட்டிற்கே நாங்கள்தான் தலைவர்கள் என்று வீரம் பேசுகிற இப்பிரபுக்களின் குடும்ப ஒழுக்கங்களைப் பற்றிக் கேட்கிற மறுநாட்டார் யார்தான் அருவருப்படைய மாட்டார்கள்?
இக்காலத்தில் நம்மவர்கள் அடைந்து வருகிற கஷ்டங்களுக் கெல்லாம் முதற்காரணம், புத்த பகவானுடைய கொள்கைகளைக் கைநழுவ விட்டதோடு, கருணையே உருவாய் விளங்கிய அம்மதத் துறவிகளையும் இரக்க மின்றிக் கொலை புரிந்ததுவேயாகும். புத்தமதக் கொள்கை களையும் துறவிகளையும் நாசம் பண்ணிய பல பார்ப்பனர் களுள், சங்கராச்சாரியார் 1. எமனைப் போல் உயிர்களை வதைக்கிறவர்கள்.
2. ஊராண்மை, நகராண்மை, வேளாண்மை, ஆசாண்மை, நாட்டாண்மை என்பதுடன் கோன்மை என்பது அரசுரிமையாம்.
1முதன்மையானவராவார். இவர்களின் சூழ்ச்சியாகிய வஞ்சகச் செய்கையினால் வருந்தும் இக்காலமே நமது நற்காலமென்றறிய வேண்டும்.
கும்பகோணக் கிருதம் பாபம்
கும்பகோணே வினஸ்யதி
கும்பகோணத்தில் செய்த பாபம் கும்பகோணத்திலேயே ஒழியும் என்றவாறு நமதுநாட்டில் நடந்த இந்தச் செயலுக்கு நமது நாட்டிலேயே பிராயச்சித்தம் செய்தாக வேண்டும். (பார்ப்பனச் சமயத்தையும் அறவே ஒழித்து, விடுதலை யடைவதே தக்க பிராயச்சித்தமாம்)
சூத்திரனும், தண்டனையும்
நாம ஜாதிக்ரஹம் த்வேஷாமபித்ரோ
ஹேணகுர்வத:
நிக்ஷேப்யோ யோமய: சங்கு
ஜ்வலன்னாஸ்யே தசாங்குலம்:
தர்மோபதேசம் தர்ப்பேண
விப்ராணா மஸ்யகுர்வத:
தப்தமாஸே சயேத்தைலம்
வக்த்ரே ஸ்ரோத்ரே சபார்த்திவ: (மனு)
பொருள்: பிராமணனுடைய பெயரோ, அவனது குலப்பெயரோ கேட்கிற சூத்திரனுடைய வாயில் பத்து அங்குல அளவுள்ள இரும்பாணியைப் பழுக்கக் காய்ச்சிச் செலுத்த வேண்டும். பிராமணனுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கிற சூத்திரனுடைய காதுகளில் எண்ணெயைக் காய்ச்சிவிட வேண்டும்.
இத்தகைய தண்டனைகள் முற்காலத்தில் ஆங்காங்கு நடந்திருக்கின்றன. (தொடரும்)
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
நன்றி:விடுதலை 15-12-2010

No comments:

Post a Comment