Sunday, December 12, 2010

பெரியார் தலைமையில் ஒரு பட்டிமன்றம்

பெண்களுக்கு உரிமை கொடுக்கலாமா? கூடாதா? என்பது பற்றி ஈரோட்டில் ஒரு பட்டிமன்றம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. 18.10.1935 அன்று ஈரோடு லண்டன் மிஷன் கம்யூனிட்டி டிரெயினிங் பள்ளிக்கூட மாணவர்கள் சங்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

ஆதியிலே பெரியவர்கள் முடிவு செய்து வைத்துவிட்டார்கள் தசரதன் கெட்டது, இராமன் அவஸ்தைபட்டது, இராவணன் சூர்ப்பனகை என்ற பெண்ணால் அழிக்கப்பட்டது, பல வியாதிகள் பெண்களால்தான் வருகின்றன. வீட்டு வேலைக்குப் பெண்கள் வேண்டும் என்றவாறு பேசினார்கள். பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று பேசியவர்கள் குறிப்பிட்டதாவது.தோழர்கள் வி.ராமசாமி. மாணிக்கம். கே. பெரியண்ணன், அனுகூலம். ஆர். செல்லமுத்து. எஸ். தானியேல். டி.ராஜன். ஜி. அருமைநாதன். பி. குழந்தைசாமி அத்தியப்பன், ராஜகோபால் முதுலியோர் ஒட்டியும் வெட்டியும் பேசினார்கள். பெண்களுக்கு உரிமை கொடுக்கக்கூடாது என்று பேசியவர்கள் குறிப்பிட்டதாவது. பெண்களுக்கு இயற்கையிலேயே அறிவு, பலம், வீரம், பராக்கிரமக் குறைவு. பெண்களுக்கு கற்பு இல்லையென்றால் உலகம் கெட்டுக் கட்டுப்பாட்டில் இருக்காது.
வீட்டுவேலையை ஆண்களும் பார்க்கலாம். இயற்கை அறிவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுதான். படிக்கிற பெண்கள் ஆண்களைப் போலவே பாஸ் செய்கிறார்கள்; மேலாகவும் படிக் கிறார்கள். பலம் என்பது அப்பியாசத்தால் வருவதே தவிர ஆண், பெண் தன்மையால் அல்ல என்ற தன்மையில் பேசினார்கள்.
தந்தை பெரியார்
தலைமை வகித்த தந்தை பெரியார் இறுதியாகக் கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டதாவது; கற்பு கெட்டுப் போகும் என்கிற கவலை எவரும் அடைய வேண்டியதில்லை. பெண்கள் கற்பு பெண்களுக்கே சேர்ந்தததே ஒழிய ஆண்களுக்கு அடமானம் வைக்கப்பட்டதல்ல கற்பு என்பது எது வானாலும் அது தனிப்பட்ட நபரைச் சேர்ந்த தாகும். பெண் அடிமையல்ல அவருக்கு நாம் எஜ மானல்ல, கார்டியன் அல்ல பெண் தன்னைப் பற்றி யும், தனது கற்பைப்பற்றியும் காத்துக்கொள்ளத் தகுதி பெற்றுக்கொள்ள விட்டுவிட வேண்டுமே யொழிய ஆண்காவல் கூடாது. இது ஆண் களுக்கும் இழிவான காரியமாகும் பெண்களைப் படிக்க வைத்துவிட்டால். தங்கள் கற்பு மாத் திரமல்லாமல், ஆண்கள் கற்பையும் காப்பாற்றக் கூடிய தன்மை வந்துவிடும்.
ஆகவே தோழர்களே, நீங்கள் நன்றாய் ஆலோ சித்து ஒரு முடிவுக்கு வந்து. அந்தப்படி உங்கள் தங்கை, குழந்தை ஆகியவர்கள் விஷயத்தில் நடவுங்கள் என்று தீர்ப்புக் கூறினார்.
(குடிஅரசு 3.11.1935)

No comments:

Post a Comment